Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. ஒரே மாதத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை பாப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 03 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்குமாம் -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்... -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் வேர்க்கடலை குடைமிளகாய் குருமா - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க -
செஃப் தீனா ஸ்டைல் இட்லி பொடியின் ஸ்பெஷலே கடைசியாக சேர்க்கும் இந்த ஒரு பொருள் தாங்க.. அது என்னன்னு பாருங்களேன். -
இந்த 3 மாதத்தில் பிறந்தவர்களுக்கு கெட்டவர்களை பார்த்தவுடனேயே கண்டறியும் அதிசய சக்தி இருக்குமாம் -
முகம் கருப்பா இருக்கா? பலாப்பழம் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. வெள்ளையாவீங்க.. -
இந்தியாவில் ஆண் நதி என்று அழைக்கப்படும் ஒரே நதி எது தெரியுமா? இந்தியாவின் மிகப்பெரிய நதியும் இதுதானாம் -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..!
இதுல உங்க ஆள்காட்டி விரல் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க சுவாரஸ்யமான குணத்தை சொல்றோம்..
Index Finger Shape And Personality: ஒருவரது குணாதிசயங்களை அந்நபரின் உடலுறுப்புக்களின் அளவு, அமைப்பு, வடிவம் போன்றவை வெளிப்படுத்தும் என்பது தெரியுமா? குறிப்பாக ஆள்காட்டி விரல் ஒருவரது உண்மையான மற்றும் மறைமுக குணாதிசயங்களை நாம் நினைப்பதை விட அதிகமாக வெளிப்படுத்தக்கூடும் என்பது தெரியுமா? உடலுறுப்புக்களை அடிப்படையாக கொண்ட ஆளுமை சோதனைகள் ஒருவரது மறைக்கப்பட்ட பண்புகளை தெரிந்து கொள்ள உதவும் வேடிக்கையான மற்றும் வினோதமான வழியாகும்.
அதுவும் ஆள்காட்டி விரல் அனைவருக்குமே ஒரே மாதிரி இருக்காது. சிலருக்கு வளைந்தும், சிலருக்கு நேராகவும், இன்னும் சிலருக்கு கூர்மையாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. கீழே மூன்று விதமான ஆள்காட்டி விரல்களும், அவை ஒருவரைப் பற்றி வெளிப்படுத்தும் தனித்துவமான குணங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களின் ஆள்காட்டி விரல் எப்படி உள்ளது என்பதை பார்த்து, உங்களின் குணாதிசயங்கள் என்னவென்று படித்து, சரியாக உள்ளதா என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

டைப் #1
படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு உங்களின் ஆள்காட்டி விரல் வளைந்து நெளிந்து உள்ளதா? அப்படியானால் நீங்கள் உறுதியான ஆளுமையைக் கொண்டவர். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு வலுவாக வெளிப்படுவீர்கள். வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள் உங்களை வீழ்த்துவதில்லை. உண்மையில் அவை உங்களை முன்னேற அதிக உறுதியுடன் இருக்க செய்யும்.
உங்கள் விடாமுயற்சியும், மன உறுதியும் தடைகளைச் சமாளிக்க உங்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் உத்வேகம் அளிக்கின்றன. வேலையில் சந்திக்கும் பிரச்சனைகளை திறம்பட தீர்ப்பீர்கள். உங்களின் தகவமைப்புத் திறனால் கடினமான சூழ்நிலைகளிலும் பிரகாசிப்பீர்கள். கடினமான சூழ்நிலைகளில் தீர்வுகளைக் கண்டறியும் உங்கள் திறமையை அனைவரும் பாராட்டுவார்கள். கடின உழைப்பாளிகள். உங்கள் இலக்குகளை அடைய தியாகங்களைச் செய்ய நீங்கள் பயப்படுவதில்லை.
டைப் #2
படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு உங்களின் ஆள்காட்டி விரல் நேராக இருந்தால், நீங்கள் நம்பகமானவர்களாக இருப்பீர்கள். எப்போதும் நன்கு சிந்தித்து முடிவெடுப்பீர்கள். இதனால் உங்கள் நண்பர்களும், குடும்பத்தினரும் ஆலோசனைக்காக உங்களிடம் அதிகம் வருவார்கள். நடைமுறைக்கு ஏற்றவராகவும், எளிமையானவராகவும் இருப்பீர்கள். வதந்திகளை தவிர்க்க விரும்புவீர்கள். ஒழுக்கமானவராக இருப்பீர்கள். எதையும் சரியாக, ஒழுங்காக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பீர்கள். இதுவே உங்களால் விஷயங்களைத் திறமையாக நிர்வகிக்க உதவுகிறது.
வேலைகளை கவனமாகவும், துல்லியமாகவும் அணுகுவீர்கள். எந்த வேலையையும் ஆரம்பத்தில் இருந்தே சரியாக செய்யப்படுவதை உறுதி செய்வீர்கள். நிதி விஷயங்களில், நீங்கள் எச்சரிக்கையாகவும், மூலோபாய ரீதியாகவும் செயல்படுவீர்கள். வீண் செலவுகளை செய்யமாட்டீர்கள். சேமிப்பில் அதிக கவனம் கொண்டிருப்பீர்கள். பணத்தை நிர்வகிப்பதில் வல்லவர். சிந்தனைமிக்க முதலீடுகளைச் செய்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் சரியாக இருப்பீர்கள்.
டைப் #3
படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு உங்களின் ஆள்காட்டி விரல் கூர்மையாக இருக்கிறதா? அப்படியானால் வலுவான உள்ளுணர்வைக் கொண்டிருப்பீர்கள். பெரும்பாலும் மற்றவர்கள் தவறவிடக்கூடிய புதிய யோசனைகள் மற்றும் தீர்வுகளுடன் வருவீர்கள். கற்பனைத்திறன் கொண்டவர். வழக்கத்திற்கு மாறானவற்றில் அழகைக் காண முனைகிறீர்கள். புதிய கருத்துகளையும் அனுபவங்களையும் ஆராய்வதில் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். உங்கள் தனித்துவமான கண்ணோட்டம் பெரும்பாலும் உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களை ஊக்குவிக்கிறது.
வேலையைப் பொறுத்தவரை நீங்கள் ஒரு புதுமைப்பித்தன். புதிய யோசனைகளை அதிகம் வழங்குவீர்கள். சவால்களை விரும்புவீர்கள். பெரும்பாலும் எல்லைகளைத் தாண்டி புதிய, தைரியமான தீர்வுகளை வழங்குவீர்கள். பணத்தைப் பொறுத்தவரை, கொஞ்சம் ரிஸ்க் எடுப்பீர்கள். புதிய மற்றும் பலனளிக்கும் வாய்ப்புகளால் நீங்கள் ஈர்க்கப்படுவீர்கள். இதனால் திடீர் முடிவுகளை அடிக்கடி எடுப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications