இந்த 5 வகை கால்விரல்களில் உங்களோடது எந்த வகைனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம்!

நமது ஆளுமையைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது மிகவும் சுவாரஸ்யமானது. பொதுவாக நாம் யார் என்பதை தெரிந்து கொள்ள நம்முடைய ராசியை நாம் சார்ந்திருக்கிறோம். ஆனால் நம்முடைய உடல் பாகங்களும் நாம் யார் என்பதை தெரிந்து கொள்வதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அந்த வகையில் உங்கள் கால் விரல்களின் வடிவம் உங்கள் ஆளுமை பற்றி நிறைய சொல்கிறது. உங்களின் கால் விரல்கள் அனைத்தும் ஒவ்வொரு வழியில் தனித்துவமானது, ஆனால் உங்கள் கால் விரல்கள் உங்களைப் பற்றியும் உங்கள் ஆளுமையைப் பற்றியும் நிறைய ரகசியங்களை வெளிப்படுத்த முடியும்.

Personality Test: What Your Toes Says About Your Personality in Tamil

நமது காலின் வடிவங்களில் நமக்கேத் தெரியாமல் எகிப்தியன், ரோமன் மற்றும் கிரேக்கம் போன்ற பலவகை பாதங்கள் உள்ளன. நம் உடலில் உள்ள மச்சங்கள் அல்லது உள்ளங்கையில் உள்ள கோடுகள் நம் ஆளுமையைப் பற்றி நிறைய கூறுவதைப் போலவே, கால்விரல்களின் வடிவமும் நமது ஆளுமையைக் கண்டறிய உதவும்.

கிரேக்க கால்விரல்

கால்விரல்களில் மிகவும் பொதுவானது கிரேக்க கால்விரல் ஆகும். கிரேக்க பாதம் என்பது அனைத்து விரல்களிலும் கட்டை விரலுக்கு அடுத்துள்ள விரல் மிகப்பெரியதாக இருப்பதாகும். இந்த வகை பாதங்கள் ஃபிளேம் ஃபுட் அல்லது ஃபயர் ஃபுட் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த வகை கால்விரல் உள்ள எவரும் மிகவும் சுறுசுறுப்பாகவும், ஸ்போர்ட்டியாகவும் இருப்பார்கள். புதிய சாகசங்கள் மற்றும் பணிகளை எடுக்க எப்போதும் தயாராக இருக்கிறார்கள். இவர்கள் மிகவும் படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், தலைமைப் பண்புகளை உடையவர்களாகவும் உள்ளனர்.

அவர்கள் ஓரளவு உணர்ச்சிவசப்பட்டவர்கள் ஆனால் அந்த உணர்வை வெளிப்படையாகக் காட்ட விரும்ப மாட்டார்கள். அவர்கள் மிகவும் சிற்றின்பம் நிறைந்தவர்கள் மற்றும் படுக்கையில் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள்.

எதிர்மறையாக, இந்த கால்விரல் வடிவம் கொண்டவர்கள் மிக விரைவாக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அவர்கள் ஒரு கடுமையான போட்டி மனப்பான்மையைக் கொண்டுள்ளனர்.

விவசாயி கால்விரல்

கிட்டத்தட்ட ஒரே நீள விரல்களைக் கொண்டவர்களுக்கு விவசாயி பாதங்கள் இருக்கும். இந்த வகை கால்விரல் உள்ளவர்களுக்கு பொதுவாக சிறிய பாதங்கள் இருக்கும். ஆளுமை என்று வரும்போது, இந்த வகையான பாதத்தைக் கொண்டவர்கள் அபரிமிதமான பொறுமை கொண்டவர் என்று கூறப்படுகிறது.

இந்த பொறுமையைப் பயன்படுத்தி, இந்த மக்கள் தங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்காமல் அல்லது மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் தங்கள் இலக்குகளை அடைய முடியும். மேலும், விவசாயிகளின் கால்விரல் உள்ளவர்கள் மிகவும் சிந்தனைமிக்க நபர்கள். அவர்கள் எதார்த்தமான ஆலோசனைகளை வழங்கக்கூடியவர்கள் மற்றும் அவர்களின் கருத்துக்கள் தனித்துவமானவையாக இருக்கும்.

காதல் விஷயத்தில் அவர்கள் மிகவும் நேர்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. எதிர்மறை குணங்களைப் பொறுத்தவரை இந்த வகை கால்விரல் உள்ளவர் தங்களுடனேயே நேரத்தை செலவிட விரும்புகிறார்கள் மற்றும் பொதுவாக அவர்களுக்கு அதிக நண்பர்கள் இருக்க மாட்டார்கள்.

அவர்கள் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை, இது சில சமயங்களில் அவர்களுக்கு வாழ்க்கையைக் கையாள்வதை கடினமாக்குகிறது.

எகிப்து கால்விரல்

எகிப்திய கால் விரல் மக்கள் மத்தியில் மிகவும் பொதுவானது. இந்த கால் வகையானது மிக நீளமான கட்டைவிரலைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து மற்ற விரல்களின் அளவு குறைகிறது. எகிப்திய கால்விரல்களைக் கொண்டவர்களுக்கு ஒட்டுமொத்த கால் வடிவமும் பொதுவாக நீளமாக இருக்கும்.

ஆளுமையைப் பொறுத்தவரை, எகிப்திய கால்விரல் கொண்டவர்கள் நேசிக்கப்படுவதை விரும்புகிறார்கள். இந்த மக்கள் மலைகள், ஆறுகள் மற்றும் காடுகள் என இயற்கை தொடர்பான அனைத்து விஷயங்களிலும் ஆர்வம் செலுத்துகிறார்கள். அவர்கள் எளிதில் நண்பர்களை உருவாக்குகிறார்கள், ஆனால் அவர்களை கார்னர் செய்ய முயற்சிப்பவர்களுடன் எப்படி நடந்துகொள்வது என்பது அவர்களுக்குத் தெரியும்.

எதிர்மறை குணங்களைப் பொறுத்தவரை, எகிப்திய கால்விரல் மிகவும் அலட்சியமானவர்களாக இருக்கிறார்கள். எதையும் தள்ளிப்போடும் மோசமான பழக்கம் அவர்களிடம் இருக்கும்.

ரோமன் கால்விரல்

ரோமானிய கால்விரல் என்பது முதல் மூன்று விரல்கள் ஒரே உயரத்தில் இருக்கும் மற்றும் மீதமுள்ள விரல்கள் அளவு தொடர்ந்து உயரம் குறையும். இந்த வகை கால்விரல்கள் உள்ளவர் சமநிலையான ஆளுமை கொண்டவர் என்று கூறப்படுகிறது.

இந்த வகை மக்கள் சாகசத்தை விரும்புகிறார்கள். அவர்கள் புதிய இடங்கள் மற்றும் கலாச்சாரங்களை ஆராய்வதை விரும்புகிறார்கள். அவர்களின் IQ மற்றும் உலகத்தைப் பற்றிய புரிதலை அதிகரிக்க, கற்றலில் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

ரோமானிய கால்விரல் உள்ளவர்கள் புதிய சவால்களை எதிர்கொள்ளும் போது மிகவும் தைரியமானவர்கள். அவர்களின் கடின உழைப்பின் காரணமாக, அவர்கள் அனைவரிடமும் பாராட்டுக்களைப் பெறுவார்கள். வேலையைப் பற்றி பேசுகையில், இவர்கள் சிறந்த முதலாளிகளாக மாறுகிறார்கள்.

எதிர்மறையைப் பொறுத்தவரை இந்த கால்விரல் வடிவத்தை உடையவர்களும் சற்று சுயநலமாக இருக்கலாம். அவர்களுடன் இருப்பது சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

அகலமான கால் விரல்கள்

இது விரல்களுக்கு இடையில் இடைவெளிகளைக் கொண்ட கால்விரல் வகை. இந்த வகை கால்விரல் பொதுவாக பயணத்தின் மீது ஆசை கொண்ட ஒரு நபரைக் குறிக்கிறது. அவர்கள் மிகவும் கனவு காணக்கூடியவர்கள் மற்றும் பல்வேறு காட்சிகளை மனதில் உருவாக்க முடியும்.

இந்த வகை பாதத்தின் உரிமையாளர் ஒவ்வொரு முடிவையும் இடைவிடாமல் பரிசீலிக்க விரும்புகிறார், எப்போதும் நேர்மறை மற்றும் எதிர்மறையை மிகத் துல்லியமாக எடைபோடுகிறார். அதனாலேயே எதிர்வரும் சிக்கல்களை எளிதில் தவிர்க்கிறார்கள்.

எதிர்மறை குணத்தைப் பொறுத்தவரை, இந்த மக்கள் யாராவது அவர்களிடம் சிறிதளவு பாசம் காட்டினால் கூட எளிதில் ஏமாந்து விடுவார்கள். அவர்கள் பெரும்பாலான நேரங்களில், தங்கள் மனதில் உள்ளதைச் சொல்ல மாட்டார்கள், இது அவர்களுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தும்.

Desktop Bottom Promotion