Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இதுல நீங்க எப்படி தூங்குவீங்க-ன்னு சொல்லுங்க.. உங்களோட வசீகரமான குணத்தை சொல்றோம்...
Personality Test: இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரின் குணாதியங்களும் மற்றவர்களிடம் இருந்து சற்று வேறுபட்டிருக்கும். ஒருவரது குணாதியங்களை அந்நபரின் கண்கள், மூக்கு, உதடு, காது, முகம் போன்ற உறுப்புக்களின் வடிவம், அமைப்பு போன்றவை மட்டுமின்றி, அந்நபரின் ஒருசில பழக்கவழக்கங்களும் வெளிப்படுத்தும். குறிப்பாக ஒருவர் தூங்கும் நிலை அந்நபரின் நடத்தை மற்றும் குணாதியங்களை பற்றி வெளிப்படுத்தும்.
ஆய்வுகளின் படி, தூங்கும் நிலைக்கும், குணங்களுக்கும் இடையே தொடர்பு உள்ளன. நீங்கள் உங்களின் சுவாரஸ்யமான குணத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள 3 நிலைகளில் நீங்கள் எந்த மாதிரி தூங்குவீர்கள் என்று கூறுங்கள்.

முதுகில் தூங்குவது
நீங்கள் உங்கள் முதுகில் தூங்குகிறீர்கள் என்றால், நீங்கள் உண்மையை மதிப்பவர் மற்றும் வலிமையான நபர். தேவையில்லாத சண்டையில் ஈடுபட விரும்பமாட்டீர்கள். நேர்மையை விரும்புவீர்கள் மற்றும் மற்றவர்களிடமும் அந்த நேர்மையை எதிர்பார்ப்பீர்கள். லட்சியவாதிகள். உங்கள் இலக்குகளை அடைய எப்பேற்பட்ட சூழ்நிலையையும் சமாளிக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பீர்கள். நல்ல தலைமைப்பண்புகளைக் கொண்டிருப்பீர்கள். வதந்திகள் அல்லது எதிர்மறையான பேச்சை சற்றும் கண்டு கொள்ளமாட்டீர்கள். அனுபவங்களால் பெறும் வளர்ச்சியை பெரிதும் மதிப்பீர்கள். உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ள கதைகள் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்.
பக்கவாட்டில் தூங்குவது
நீங்கள் பக்கவாட்டில் தூங்குபவரானால், நீங்கள் நட்பானவராகவும், நன்கு பேசக்கூடியவர்களாகவும் இருப்பீர்கள். மற்றவர்களுடன் எளிதில் பழகும் நபராக இருப்பீர்கள். இருப்பினும், உங்களைப் பற்றிய விஷயங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளாமல், நெருக்கமானவர்களுடன் மட்டுமே பகிர்வீர்கள். ஒரு முடிவை எடுக்க நீண்ட நேரம் எடுப்பீர்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நிறைய நேரத்தை செலவிட விரும்புவீர்கள். உங்களின் அக்கறையான மற்றும் ஆதரவான குணம், உங்கள் உறவுகளை வலுவாக வைத்திருப்பதோடு, வாழ்நாள் முழுவதும் நீடித்து நிலைக்க வைக்கும்.
குப்புற தூங்குவது
நீங்கள் குப்புற படுப்பவரானால், நீங்கள் மனதில் உள்ளதை சொல்ல ஒருபோதும் பயப்படமாட்டீர்கள். இந்த குணத்தால் மற்றவர்கள் உங்களை கடுமையானவராக நினைக்கலாம். சுதந்திரமாக இருக்க விரும்புவீர்கள். தன்னம்பிக்கை அதிகம் கொண்டிருப்பீர்கள். இருப்பினும் உங்களிடம் ஒருவித கவலைகளும், பாதுகாப்பின்மையும் மனதில் இருக்கலாம். விமர்சனத்தை ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்கும். நீங்கள் அச்சமற்றவர்கள், துணிச்சலானவர்கள், வலுவான விருப்த்தைக் கொண்டிருப்பீர்கள். எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாழ்க்கை வாழ்வீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications