Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
உங்க மூக்கு இந்த 5 வடிவத்தில் எந்த மாதிரி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்ன்ற உண்மைய நாங்க சொல்றோம்!
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி ஒருவரின் உடல் அங்கங்களை வைத்தே அவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளலாம். அதன்படி ஒருவரின் விரல்கள், முகம், காது, கண் என ஒவ்வொரு உறுப்பையும் வைத்தே அவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளலாம். சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி ஒருவரின் உறுப்புகளை வைத்து ஒருவரின் ஆளுமை மட்டுமின்றி, அவருடைய ஆசைகள் மற்றும் பலவீனங்களைப் பற்றிய ஒரு புரிதலையும் பெற முடியும்.
நம் உடலின் ஒவ்வொரு அங்கமும் நாம் எப்படிப்பட்டவர் என்பதை பிரதிபலிக்கும் கண்ணாடியாகும், அதன்படி நம் மூக்கின் வடிவத்தின் மூலமும் நாம் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒருவரின் மூக்கின் வடிவத்தின் மூலம், அவர் அதிகம் பேசக்கூடியவரா, ஆழமாக சிந்திப்பவரா, புத்திசாலித்தனமானவரா போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் ஒருவரின் மூக்கின் வடிவம் அவர்களைப் பற்றி சொல்லும் ரகசியம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

பெரிய மூக்கு
பெரிய நாசித் துளைகளையும் வட்டமான நுனியையும் கொண்ட பெரிய மூக்கு உள்ளவர்கள், சக்திவாய்ந்த நுண்ணறிவுத் திறன் கொண்ட எதார்த்தவாதிகளாக இருப்பார்கள். அவர்கள் மிகுந்த சுதந்திரமானவர்கள், ஆனால் அதிக ஆணவம் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் அனைத்து விஷயங்களிலும் தங்கள் கருத்தையும், குரலையும் வெளிப்படுத்த விரும்புகிறார்கள்.
அவர்கள் மற்றவர்களிடமிருந்து உதவி பெறுவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள், பிறரிடம் உதவி கேட்க அவர்களின் சுயமரியாதை அனுமதிக்காது. மேலும் எல்லாவற்றின் மீதும் அதிகாரமும், கட்டுப்பாடும் கொண்டிருக்க விரும்புகிறார்கள். அவர்கள் எப்போதும் வழிநடத்த விரும்புவார்கள், மேலும் அனைத்து விஷயங்களிலும் தலைவராக இருக்க விரும்புகிறார்கள்.
ரோமன் மூக்கு வடிவம்
ஒருவருக்கு மூக்கின் தண்டு சற்றே வளைந்திருந்தால் அது ரோமன் மூக்கு வடிவம். இந்த மூக்கு கொண்டவர்கள் கம்பீரமானவர்களாகவும், பகுத்தறிவுள்ளவர்களாகவும், சவால்களை எதிர்கொள்பவர்களாகவும் இருப்பார்கள்.
அவர்கள் எவ்வளவு பெரிய கூட்டத்திலும் தனித்துத் தெரிவார்கள், தங்கள் இலக்குகளை விரைவாக அடைய வேண்டும் என்ற ஆர்வத்துடன் சக்திவாய்ந்த ஆளுமையைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதில் விதிவிலக்கான திறமையையும், அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கும் சுயக்கட்டுப்பாட்டையும் கொண்டிருப்பார்கள்.
குண்டான மூக்கு
அகலமான, சதைப்பற்றுள்ள குண்டான மூக்கு கொண்டவர்கள் அனைவரின் கவனத்தையும் எளிதில் ஈர்ப்பவராக இருப்பார்கள். அவர்கள் அதிபுத்திசாலியாக இருப்பார்கள் மற்றும் மிகவும் எச்சரிக்கையான நபர்களாக இருப்பார்கள். அவர்கள் தாராள குணம் கொண்டவர்கள், எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், விவேகமானவர்கள், அன்பானவர்கள் மற்றும் புத்திக்கூர்மைக் கொண்டவர்கள், அதே சமயம் வேகமாகச் சிந்திப்பவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் விதிவிலக்கான கற்பனைத்திறன் கொண்டவர்கள், மேலும் அவர்கள் விரைவாக திட்டங்களை உருவாக்கும் உறுதியான மற்றும்வலிமையான மனப்பான்மையைக் கொண்டுள்ளனர்.
பட்டன் மூக்கு வடிவம்
ஒருவருக்கு சிறிய, நேர்த்தியான வட்டமான மூக்கு நுனி இருந்தால் அது பட்டன் மூக்கு என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் அக்கறையுள்ளவர்கள், விசுவாசமானவர்கள், அன்பானவர்கள் மற்றும் கற்பனைத்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இருப்பினும், அவர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் மற்றும் சில நேரங்களில் எளிதில் மனநிலை மாற்றங்களுக்கு ஆளாகக்கூடியவர்கள்.
தங்கள் அரவணைப்பு மற்றும் அக்கறை உணர்வால் அனைவரையும் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் ஒரு உறுதியான மற்றும் மன உறுதி கொண்ட ஆளுமையைக் கொண்டிருப்பார்கள், மேலும் திட்டமிடுவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். சில நேரங்களில் குழந்தைத் தனமான பிடிவாதத்தையும் வெளிப்படுத்துவார்கள், அது உடனிருப்பவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம்.
பருந்து மூக்கு வடிவம்
இது மிகவும் அரிதான மூக்கு வடிவமாகும். பருந்து மூக்கு வடிவம் கொண்டவர்கள் தங்கள் விருப்பப்படி வாழ்க்கையை வாழ விரும்புபவர்கள். அவர்கள் தன்னம்பிக்கை கொண்டவர்கள், சுதந்திரமானவர்கள் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் குணம் கொண்டவர்கள். இது சில சமயங்களில் ஆணவமாகவும் தற்பெருமையாகவும் தோன்றக்கூடும். அவர்கள் அனைவராலும் மதிக்கப்படுவதையும், முக்கியத்துவம் பெறுவதையும் விரும்புகிறார்கள். அவர்களின் முடிவுகளில் மற்றவர்கள் தலையிடுவதை அவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.



Click it and Unblock the Notifications












