Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
இந்த 6 வடிவங்களில் உங்க மூக்கு எப்படி இருக்குனு சொல்லுங்க? உங்களைப் பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம்...!
ஒருவரின் முகம் அவர்களின் ஆன்மாவைப் பற்றியும், ஆளுமையைப் பற்றியும் பல ரகசியங்களை வெளிப்படுத்தக்கூடும். ஒருவரின் முகத்தைப் பார்த்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்வது Physiognomy என்று அழைக்கப்படுகிறது. இது ஒருவரின் கண்கள், மூக்கு, உதடுகள், கன்னங்கள் மற்றும் கன்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவரது ஆளுமையைப் பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது.
அந்த வகையில் ஒருவரின் மூக்கின் வடிவத்தை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். முக அம்சங்கள் குறித்த ஆய்வுகள், மூக்குகள் தனித்துவமானவை மட்டுமல்ல, அது ஒருவரின் படைப்பாற்றல், தலைமைத்துவம் அல்லது சமூகத்தன்மை போன்ற குறிப்பிட்ட பண்புகளுடனும் பிணைக்கப்பட்டுள்ளன. இந்த பதிவில் ஒருவரின் மூக்கு வடிவம் அவர்களின் ஆளுமைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

நேரான மூக்கு
உலகம் முழுவதும் உள்ள பல கலாச்சாரங்களில் நேரான மூக்கு என்பது ஒரு கவர்ச்சிகரமான அம்சமாகக் கருதப்படுகிறது. நேரான மூக்கைக் கொண்டவர்கள் பொதுவாக மிகவும் புத்திசாலியாகவும், எதார்த்த அணுகுமுறை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். கடினமான சூழ்நிலைகளில் கூட அவர்கள் பதற்றமடையாமல் அமைதியாகவும், உறுதியாகவும் இருப்பார்கள். அவர்கள் தங்கள் உணர்ச்சிகளைத் எப்போதும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் தங்களுக்குள் வைத்திருக்கிறார்கள், மேலும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எப்போதும் விசுவாசமானவர்களாக இருப்பார்கள். வெளியாட்களை மிகவும் அரிதாகவே நம்புவார்கள்.
பெரிய மூக்கு
பெரிய மூக்குகள் அகன்ற நுனிகள் மற்றும் பெரிய நாசித் துளைகள் கொண்டவையாக வகைப்படுத்தப்படுகின்றன. பெரிய மூக்கு உள்ளவர்கள் பொதுவாக மிகவும் சுதந்திரமான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் வேறொருவரின் அதிகாரத்திற்கு கீழ் வேலை செய்வதை வெறுக்கிறார்கள் மற்றும் எப்போதும் அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறார்கள். பெரிய மூக்கு உள்ளவர்கள் பொதுவாக நல்ல தலைவர்களாகவும் அதிகாரத்தை அனுபவிப்பவர்களாகவும் இருப்பார்கள்.
வளைந்த மூக்கு
மூக்கின் நுனியில் சற்று வளைந்த மூக்கைக் கொண்டவர்கள் பொதுவாக தன்னம்பிக்கை கொண்டவர்கள், மற்றவர்களையோ அல்லது விதிமுறைகளையோ அவர்கள் பின்பற்றுவதில்லை. அவர்கள் தங்கள் நம்பிக்கைகளை மதிக்கிறார்கள், தங்கள் விதிமுறைகளின் அடிப்படையில் வாழ்கிறார்கள். வளைந்த மூக்கு உள்ளவர்கள் பெரிய மூக்கு உள்ளவர்களைப் போலவே இருப்பார்கள், ஆனால் மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள், தங்கள் நோக்கங்களை அடைவதில் எப்போதும் அதிக கவனம் செலுத்துவார்கள்.
சிறிய மூக்கு
சிறிய மூக்குகள் அகலத்திலும் நீளத்திலும் சிறியதாக இருந்தாலும், அவை தட்டையானவை அல்ல, மாறாக அவை நேராக இருக்கும், ஆனால் அளவில் சிறியதாக இருக்கும். சிறிய மூக்குகளைக் கொண்டவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள் மற்றும் தன்னிச்சையானவர்கள். இருப்பினும், அவர்களுக்கு பொறுமை என்ற நல்ல குணம் அறவே இருக்காது, மேலும் அதிகம் உணர்ச்சிவசப்படுவபர்களாக இருப்பார்கள். அவர்கள் எப்போதும் வேடிக்கையான மனநிலையைக் கொண்டவர்களாக இருப்பார்கள், மேலும் மிகவும் சலிப்பான பணிகளைக் கூட வேடிக்கையான செயல்பாடுகளாக மாற்றும் திறமையைக் கொண்டுள்ளனர்.
ரோமன் மூக்கு
அக்விலைன் மூக்கு என்றும் அழைக்கப்படும் ரோமன் மூக்கு என்பது மூக்கின் பாலம் மிகவும் தெளிவாகக் காணப்படும் ஒரு மூக்கு வடிவமாகும். ரோமன் மூக்கு உள்ளவர்கள் பொதுவாக மிகவும் தலைக்கனம் மற்றும் வலுவான விருப்பமுள்ளவர்கள். அவர்கள் பொதுவாக மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டவர்கள் மற்றும் உறுதியானவர்கள், மேலும் அவர்கள் செய்யும் செயல்களில் எப்போதும் ஒரு நேர்த்தி இருக்கும். ரோமன் மூக்கு உள்ளவர்கள் மிகவும் தீவிரமான மற்றும் கடின உழைப்பாளியாக இருப்பார்கள். இதனால் அவர்கள் வாழ்க்கையில் எப்போதும் பெரிய உயரத்தில் இருப்பார்கள்.
நுபியன் மூக்கு
இந்த மூக்கின் வடிவம் அகலமான அடிப்பகுதியுடன் கூடிய நீளமான மூக்கைக் குறிக்கிறது. நுபியன் மூக்குகளைக் கொண்டவர்கள் மிகவும் கவர்ச்சிகரமானவர்களாகவும், திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். அவர்கள் புத்திசாலிகள் மற்றும் மக்களை எவ்வாறு கவருவது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் மிகவும் திறந்த மனதுடையவர்கள், ஆனால் சில சமயங்களில் அவர்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள், இதனால் அவர்களுக்கு மிகவும் குறைவான நண்பர்களே இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications
