Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 3 கழுத்து வடிவத்தில் உங்களோடது என்ன வகைனு சொல்லுங்க? நீங்க உண்மையில் எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
நமது உடலில் நமது ஆளுமை பற்றிய பல தடயங்கள் மறைந்துள்ளன. நாம் எந்த வகையான உறவில் இருக்கிறோம், நாம் எப்படிப்பட்டவர்கள் மற்றும் நம்மைப் பற்றிய பல சுவாரஸ்யமான விவரங்களை அவர்களால் வெளிப்படுத்த முடியும்.
நமக்குத் தெரிந்தவர்களின் ஆளுமைகளை நாம் ஆழமாக ஆராய விரும்பினால், அவர்களின் உடல் தோற்றம் அவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களின் பின்னணி என்ன, அவர்களின் நட்பு மற்றும் உறவுகளிலிருந்து அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

உதாரணமாக, உங்கள் கட்டைவிரலின் வடிவம் உங்களுக்குத் தெரியாத உங்கள் ஆளுமை பற்றிய சுவாரஸ்யமான விவரங்களை வெளிப்படுத்தலாம், அதேபோல உங்களின் கழுத்து வடிவமும் உங்களின் ஆளுமைப் பற்றியும், நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது பற்றியும் கூற இயலும். இந்த பதிவில் உங்கள் கழுத்தின் வடிவம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
குறுகிய கழுத்து
குட்டையான கழுத்து உடையவர்கள் விசுவாசமானவராகவும், ஆர்வமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் தங்கள் நண்பர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பார்கள். அவர்கள் யாருக்கும் தற்காலிக நண்பர்களாக இருக்க மாட்டார்கள், ஆயுள் முழுவதும் நீண்ட கால நட்புக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் அக்கறையுள்ள நண்பர்களாக இருப்பார்கள்.
அவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் பிற அன்புக்குரியவர்களுக்கு பாதுகாப்பு கவசம் போன்று நிற்பார்கள். இருப்பினும், மற்றவர்கள் மீது அக்கறை செலுத்துவதால் அவர்கள் தங்களை கவனித்துக் கொள்ள மறந்துவிடுகிறார்கள் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது.
உங்கள் சமூகத்திற்கு உதவுவதில் நீங்கள் முதன்மையானவர்களில் ஒருவராக இருக்கலாம், ஆனால் தொடர்ந்து பிஸியாக இருப்பது எதிர்மறை விளைவுகளை கொண்டிருப்பதை மறந்து விடாதீர்கள். மற்றவர்களுக்கு எவ்வளவு நேரமும், முக்கியத்துவமும் கொடுக்கிறீர்களோ, அதே அளவு நேரத்தையும் உங்களுக்கும் கொடுக்க கற்றுக்கொள்வது உங்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
நடுத்தர கழுத்து
உங்கள் கழுத்து நடுத்தர நீளத்தில் இருந்தால், நீங்கள் சமநிலையை பராமரிக்க விரும்பும் ஒருவர். நீங்கள் வாழ்க்கையில் செல்வம் மற்றும் ஆடம்பரத்தை விட எல்லாவற்றிற்கும் மேலாக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மதிக்கிறீர்கள். கடினமான சூழ்நிலைகளில் நீங்கள் ஒரு மத்தியஸ்தராக உங்களைக் காணலாம், இது மோதல் சூழ்நிலைகளைக் கையாள்வதில் உங்களை சிறந்தவராக மாற்றுகிறது.
உங்கள் துணையுடன் கூட, பலனளிக்காது என்பதால் தீவிர வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க விரும்புகிறீர்கள். உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயத்திலிருந்து சரியான நேரத்தில் விலகிச் செல்லும் சாதுர்யம் உங்களுக்கு இருக்கும். உதவி கேட்பது எப்படி என்று உங்களுக்குத் தெரியும் ஆனால் எப்போதும் அதனை செய்ய மாட்டிர்கள்.
நீங்கள் அவ்வப்போது மற்றவர்களின் பிரச்சனைகளால் சுமையாக உணர்கிறீர்கள் மற்றும் அதை எப்படி சரிசெய்வது என்பதில் நீங்கள் சிரமப்படலாம். அனைவரின் பிரச்சினைகளையும் தீர்க்க நீங்கள் படைக்கப்படவில்லை என்பதை உணர்ந்து கொள்வது நல்லது.
நீளமான கழுத்து
உங்களுக்கு நீண்ட கழுத்து இருந்தால் நீங்கள் 'உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளும் திறன்' கொண்டவர்காளக இருக்கலாம். நீங்கள் ஒரு சுதந்திரமான நபர், உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க மற்றவர்களை எதிர்பார்க்க மாட்டிர்கள். நீங்கள் ஒரு தனிக்காட்டு ராஜா, உங்களை சுற்றி எப்போதும் பெரும் கூட்டம் இருக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் நீங்கள்.
உங்களைப் புரிந்துகொள்ளும் இரண்டு நல்ல நண்பர்கள் மட்டுமே உங்களுக்கு இருக்க வாய்ப்புள்ளது. உங்கள் உறவுகளில், உங்கள் துணையிடமிருந்து நீங்கள் சுதந்திரத்தை எதிர்பார்க்கிறீர்கள், அவர்களுக்கும் அதையே கொடுக்கிறீர்கள்.
உங்கள் துணையுடன் எல்லைகளை அமைப்பதிலும், உங்கள் எதிர்பார்ப்புகளை அவர்களுக்கு தெரிவிப்பதிலும் நீங்கள் சிறந்தவராக இருக்கலாம். இருப்பினும், நீங்கள் அவ்வப்போது பிடிவாதமானவராக மாறலாம். உங்களைப பற்றி அறியாதவர்கள் உங்களைப் பற்றி தவறாக நினைக்கலாம் .



Click it and Unblock the Notifications
