Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
இந்த 3 டைப்ல உங்க சுண்டு விரலோட நீளம் என்னனு சொல்லுங்க? உங்களைப் பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம்...!
Personality Test: உங்கள் உடலின் ஒவ்வொரு பாகமும் உங்களின் ஆளுமைப் பற்றியும், உங்கள் வாழ்க்கையைப் பற்றிய ரகசியங்களை வெளிப்படுத்தக்கூடும். அந்த வகையில் நமது பிங்கி விரல் என்று அழைக்கப்படும் சுண்டு விரலும் நமது ஆளுமைப் பற்றிய பல ரகசியங்களைக் கூறும்.
சுண்டு விரலின் நீளம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? நிபுணர்கள் சுண்டு விரலின் நீளத்தின் அடிப்படையில் உங்கள் ஆளுமைப் பற்றிய அற்புதமான ரகசியங்களையும் அறிகுறிகளையும் கூறியிருக்கிறார்கள்.

உங்கள் சுண்டு விரலின் நீளத்தைப் பார்க்க உங்கள் கையை உற்றுநோக்கி, உங்கள் விரல் நீளத்திற்கு மிகவும் பொருத்தமான ஒன்றை மேலே காட்டப்பட்டுள்ள படத்திலிருந்து தேர்ந்தெடுக்கவும், அது உங்கள் ஆளுமையைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
சுண்டு விரலுடன் தொடர்புடைய கிரகம் எது?
ஒவ்வொரு விரலும் ஒரு கிரகத்துடன் தொடர்புடையது, இது ஒரு தனித்துவமான ஆற்றலை அளிக்கிறது. நமது கைரேகை நம்முடைய கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் வரைபடமாக நமது நன்மை தீமைகளை மதிப்பிடுகிறது . சுண்டு விரல் புதனுடன் தொடர்புடையது, இந்த கிரகம் தொடர்பு, பயணம் மற்றும் நிதியின் கடவுளாக இருக்கிறார்.
சுண்டு விரலை வைத்து உங்கள் ஆளுமையை தெரிந்து கொள்ள, அதை சூரியனுடன் தொடர்புடைய மோதிர விரலுடன் ஒப்பிட வேண்டும். சுண்டு விரலின் நீளமும் வடிவமும் நம் உணர்ச்சிகளைக் காட்டுவதில் எதிர்கொள்ளும் சிரமத்தையும், எவ்வளவு எளிதாக வாழ்க்கையில் பயணிக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.
மோதிர விரலும் சுண்டு விரலும் ஒரே நீளத்தில் இருப்பது
உங்கள் சுண்டு விரலின் நீளம் உங்கள் மோதிர விரலின் மூன்றாவது கணுவின் நீளத்துக்கு சமமாக இருந்தால், உங்களைப் பற்றியும், உங்கள் ஆசைகள், தேவைகள் மற்றும் உங்கள் உள் சுயத்தைப் பற்றியும் நீங்கள் அதிகம் அறிந்திருப்பதை காட்டுகிறது. நீங்கள் எப்போதும் கூட்டத்தில் தனித்து நிற்கிறீர்கள் மற்றும் நீங்கள் அமைதியான மனதால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
ஒரு முடிவை எடுப்பதற்கு நீங்கள் உங்கள் கவனத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் இலக்குகளில் நீங்கள் எப்போதும் உறுதியாக இருப்பீர்கள். உங்கள் மனம், உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதில் நீங்கள் திறமையானவராக இருப்பீர்கள். நீங்கள் அமைதியான இடங்களில் நேரத்தை செலவிட விரும்புகிறீர்கள்.
உங்கள் வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தும் இடங்கள் அல்லது நபர்களை நீங்கள் தவிர்க்க விரும்புவீர்கள். நீங்கள் மிகவும் திறமையான திட்டமிடுபவராக இருப்பீர்கள், வாழ்க்கையை கட்டுப்பாட்டுடன் வாழ விரும்புவீர்கள்.
உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும், அது வேலையாக இருந்தாலும் சரி, உறவுகளாக இருந்தாலும் சரி, சமநிலையுடன் இருக்க விரும்புவீர்கள். நீங்கள் ஒரு உள்முக சிந்தனையாளராக இருந்தாலும், நீங்கள் உங்களை சுதந்திரமானவர்களாக வெளிகாட்டிக் கொள்வீர்கள்.
மோதிர விரலை விட சுண்டு விரல் சிறியதாக இருப்பது
மோதிர விரலின் மூன்றாவது கணுவை விட உங்கள் சுண்டு விரல் சிறியதாக இருந்தால், உங்கள் நடத்தை உங்களுக்கு அதிக உணர்ச்சிகள் மற்றும் நுண்ணறிவு இருப்பதைக் காட்டுகிறது. மற்றவர்களின் தேவைகள் அல்லது விருப்பங்களை நீங்கள் நன்றாகக் கவனிப்பவராக இருக்கலாம். நீங்கள் லாஜிக்காக சிந்திப்பதுப் போலவே உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்.
இருப்பினும், உங்கள் பண்புகளுடன் ஒத்துப்போகாத அல்லது உங்களை மோசமாக காயப்படுத்தும் சூழ்நிலைகள் அல்லது உறவுகளிலிருந்து நீங்கள் தப்பித்து ஓடலாம். உங்களுக்கு மன்னிப்பது மிகவும் சுலபம் ஆனால் அந்த சம்பவத்தை மறப்பது உங்களுக்கு மிகவும்கடினமாக இருக்கலாம். நீங்கள் சரியானதைப் பேசும்போது பிடிவாதமாகவும், சரியாக சிந்திப்பவராகவும் இருக்க முடியும்.
நீங்கள் தொண்டு வேலைகளை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறீர்கள், மற்றவர்களுக்கு நல்லது செய்யும் நபராக இருப்பதில் நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்கள். சமூகத்தின் நலிந்த பிரிவைச் சேர்ந்த மக்களிடம் நீங்கள் குறிப்பாக அன்பாக இருக்கிறீர்கள். உங்கள் மதிப்புகள் மற்றும் கொள்கைகளில் நீங்கள் ஒருபோதும் சமரசம் செய்ய விரும்பவில்லை.
மோதிர விரலை விட சுண்டு விரல் நீளமாக இருப்பது
உங்கள் சுண்டு விரல் மோதிர விரலின் மூன்றாவது கணுவை விட நீளமாக இருந்தால், உங்களின் செயல்பாடுகள் நீங்கள் உணர்திறன் மற்றும் ஆழ்ந்த உணர்ச்சி நிறைந்தவர் என்பதைக் காட்டுகிறது. உங்கள் எண்ணங்களை எளிதில் பகிர்ந்து கொள்ள முடியாவிட்டாலும். நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன், சிறிது நேரம் விஷயங்களை மதிப்பாய்வு செய்பவர்.
நீங்கள் தர்க்கரீதியானவர் மற்றும் எல்லாவற்றையும் பகுப்பாய்வு செய்கிறீர்கள். ரகசியங்களை காப்பதிலும் நீங்கள் வல்லவராக இருக்கிறீர்கள், மற்றவர்களின் கருத்துக்களால் நீங்கள் எளிதில் பாதிக்கப்படுவதில்லை. நீங்கள் சரியானது என்று நினைப்பதை நீங்கள் செய்யலாம் மற்றும் சில நேரங்களில் உங்கள் சொந்த நலனுக்காக பிறருக்கு தீங்கு விளைவிக்கவும் தயங்க மாட்டிர்கள்.
நீங்கள் மிகவும் நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களைப் பற்றி எப்போதும் உயர்வாக நினைக்கிறீர்கள். உங்கள் இலக்குகள் மற்றும் இலட்சியங்கள் மீது மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கிறீர்கள். தொழில் வாழ்க்கையில், நீங்கள் தொடர்புகள் மற்றும் நெட்வொர்க்கிங்கை நிறுவுவதில் சிறந்தவர். அரசியல், வியாபாரம், கலைத் துறைகளில் நீங்கள் பணிபுரிந்தால் நீங்கள் விரைவில் முன்னேறலாம்.



Click it and Unblock the Notifications
