Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
இதுல உங்க கால் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணம் என்னன்னு சொல்றோம்...
Personality test: ஆளுமை சோதனைகளானது ஒருவரது மறைமுகமான குணங்களை வெளிப்படுத்தும் மற்றும் தெரிந்து கொள்ள உதவும் ஒரு சுவாரஸ்யமான வழியாகும். ஆனால் அனைத்து ஆளுமை சோதனைகளும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும், அவை ஒருவரைப் பற்றி கூறும் சில விஷயங்கள் ஓரளவு சரியாக இருக்கலாம்.
அதுவும் ஒருவரது குணாதிசயங்களை அந்நபரின் முகம், மூக்கு, கால், காது ஆகியவற்றின் வடிவம், அளவு போன்றவை வெளிப்படுத்தும் என்பது தெரியுமா? அதுவும் இந்த ஆளுமை சோதனையில், ஒருவரது காலின் வடிவம் அந்நபரின் குணம் எப்படிப்பட்டது என்பதை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. நீங்கள் உங்கள் கால்களைக் கொண்டே உங்கள் குணத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

அப்படியானால் அதற்கு ஒரு கண்ணாடியின் முன் நின்று உங்கள் கால்களின் வடிவத்தைக் கவனியுங்கள். அப்போது உங்கள் கால்கள் தொடைகள், முழங்கால்கள் மற்றும் கணுக்கால்களைத் தொட்டு, அதனால் நேர்கோட்டில் இருக்கிறதா? அல்லது உங்கள் முழங்கால்கள் வெளிப்புறமாக வளைந்து, வில் வடிவத்தை உருவாக்குகின்றனவா? அல்லது முழங்கால் மூட்டுகள் தொட்டுக் கொண்டு உள்ளதா என்று பாருங்கள். இதில் எப்படி உள்ளது என்று பார்த்து, உங்கள் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
நேரான கால்கள்
உங்கள் கால்கள் நேராக இருந்தால், நீங்கள் தர்க்கரீதியானவர், படைப்பாற்றல் மிக்கவர் மற்றும் சாகச இயல்புடையவர். மேலும் நீங்கள் மிகவும் புத்திசாலி மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு சமநிலையைப் பராமரிப்பீர்கள். இதனால் மற்றவர்கள் உங்களின் குணாதிசயங்களைப் போற்றுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் தன்னிச்சையானவர். இருப்பினும் மற்றவர்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். எப்போதும் ஒரு ஆழமான உரையாடலை விரும்புவீர்கள். அதே வேளையில் வாழ்க்கையில் சாகசங்களை அதிகம் விரும்புவீர்கள். ரிஸ்க் எடுக்க தயங்கடமாட்டீர்கள்.
வில் வடிவ கால்
உங்கள் கால்கள் வில் போன்று வளைந்து இருந்தால், நீங்கள் சுதந்திரமாக செயல்பட விரும்புபவர் மற்றும் சாகசத்தை அதிகம் விரும்புவீர்கள். மற்றவர்கள் சொல்வதை குருட்டுத்தனமாக நம்பி எதையும் செய்யாமல், சொந்தமாக யோசித்து அதன்படி நடப்பீர்கள். எவ்வளவு மன அழுத்தத்தில் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாக இருப்பீர்கள். சவால்களை விரும்புவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில், தனித்துவத்தையும், சுதந்திரத்தையும் விரும்புவீர்கள். முக்கியமானவர்களுடன் ஆழமான பிணைப்புகளைக் கொண்டிருப்பீர்கள். ஆனால் உங்களை அதிகம் சார்ந்து இருப்பவர்களை விரும்பமாட்டீர்கள். அதற்கு பதிலாக ஆதரவாக இருப்பவர்களை அதிகம் விரும்புவீர்கள்.
முழங்கால் மூட்டுகள் ஒட்டியிருந்தால்..
உங்கள் கால்களின் வடிவத்தை கண்ணாடியில் பார்க்கும் போது, முழங்கால் மூட்டுகள் ஒட்டியிருந்தால், நீங்கள் மிகவும் கனிவான நபர் மற்றும் படைப்பாற்றல் மிக்கவர். அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். மற்றவர்களுடன் எளிதில் பழகுவீர்கள். உறவுகளில் நீங்கள் மிகவும் அக்கறையான நபர், சிந்தனையுள்ளவர் மற்றும் அன்பானவர். வாழ்க்கையில் சிறு விஷயங்களும் உங்களுக்கு மிகவும் முக்கியமாக இருக்கும். நீங்கள் மிகவும் சென்சிடிவ் என்பதால், சில நேரங்களில் அதிகமாக சிந்திப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications