Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
முகம் சுளிக்கும் போது உங்க நெற்றியில் எத்தனை கோடு தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்க குணத்தை பத்தி சொல்றோம்...
Forehead Lines And Personality In Tamil: ஒருவரின் குணாதியங்களை பல வழிகளில் அறியலாம். அதில் ஒருவரது நெற்றியின் கோடுகள் மற்றும் அம்சங்களை ஆராய்ந்து, அந்நபரின் குணங்கள் அல்லது எதிர்காலத்தை கணிக்கும் முறை தான் மெட்டோபோஸ்கோபி. இதன் படி, நெற்றியானது ஆன்மாவின் வரைபடம் என்றும், நெற்றியில் தெரியும் கோடுகள் ஒருவரின் குணாதிசயங்களை வெளிப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
நீங்கள் உங்கள் நெற்றியைக் கொண்டு, உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் அதற்கு நீங்கள் முகம் சுளிக்கும் போது, உங்கள் நெற்றியில் எத்தனை செங்குத்து கோடுகள் தெரிகின்றன என்று பாருங்கள். சிலருக்கு ஒன்று, இரண்டு அல்லது அதற்கு மேல் செங்குத்து கோடுகள் நெற்றியில் தெரியலாம். அதன் அடிப்படையில் உங்களின் குணாதிசயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு கோடு
முகத்தை சுளிக்கும் போது உங்கள் நெற்றியில் ஒரு கோடு தெரிந்தால், நீங்கள் உறுதியானவர், லட்சியவாதி மற்றும் விடாமுயற்சியை கைவிடமாட்டீர்கள். உங்களின் வலுவான பணி நெறிமுறை மற்றும் இலக்குகளில் கவனம் செலுத்தும் திறனுக்காக நன்கு அறியப்படுவீர்கள். நீங்கள் புத்திசாலி மற்றும் திறமைசாலி. அதே சமயம் நீங்கள் சுயநலவாதியாகவும், காதல் இல்லாதவராகவும் இருப்பீர்கள்.
சற்று அகங்காரம் கொண்டவராகவும் இருப்பீர்கள். மேலும் நண்பர்களை விட எதிரிகளை அதிகம் கொண்டிருப்பீர்கள். நீங்கள் மிகவும் வெளிப்படையானவர். அதுவும் பெண்களுக்கு நெற்றியில் ஒரு கோடு இருந்தால், அவர்கள் ஆக்ரோஷமாக இருப்பார்கள். இப்படி நெற்றியில் ஒரு கோடு கொண்டவர்களுக்கு வணிகம், சட்டம், அரசியல், மருத்துவம், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் போன்ற தொழில்கள்
பொருத்தமாக இருக்கும்.
இரண்டு கோடுகள்
உங்கள் நெற்றியில் 2 கோடுகள் தெரிந்தால, நீங்கள் புத்திசாலி, சிந்தனைமிக்கவர் மற்றும் எதையும் நன்கு பகுப்பாய்வு செய்பவர். கடின உழைப்பாளி, லட்சியவாதிகள் மற்றும் எதையும் வெற்றிகரமாக செய்யக்கூடியவர். சிக்கல்களுக்கு சிறந்த தீர்வை வழங்கக்கூடியவர். படைப்பாற்றல் கொண்டவர். புதிய யோசனைகளை கொண்டு வருவதில் வல்லவர். அதிக உத்வேகத்துடன் இருப்பீர்கள்.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு விசுவாசமாகவும், ஆதரவாகவும் இருப்பீர்கள். மற்றவர்கள் மீது அதிக அனுதாபம் காட்டுவீர்கள். மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பீர்கள். நெற்றியில் இரண்டு கோடுகளை கொண்டவர்களுக்கு நடிப்பு, நாடகம், இசைக்கலைஞர், எழுத்தாளர், விஞ்ஞானி, வழக்கறிஞர், கட்டிடக் கலைஞர், கணக்காளர் போன்ற தொழில்கள் பொருத்தமாக இருக்கும்.
மூன்று கோடுகள்
நெற்றியில் மூன்று கோடுகள் இருந்தால், நீங்கள் நுண்ணறிவு கொண்டவர். வாழ்க்கையைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டவர்கள். ஒரு விஷயத்தை பல கோணங்களில் பார்க்கக்கூடியவர். மிகவும் புத்திசாலி மற்றும் நல்ல சிந்தனையாளராக இருப்பீர்கள். ஆனால் முடிவுகளை எடுப்பதில் சிரமப்படுவீர்கள். ஏனெனில் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் விருப்பங்களை பற்றியும் யோசிப்பீர்கள். இதன் விளைவாக முடிவுகளை எடுக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள்.
தலைமைப்பண்புகளைக் கொண்டவர். மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். வாழ்க்கையில் பெரிய காரியங்களை சாதிக்க அல்லது ஒரு பிரபலமாக மாற உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். நெற்றியில் மூன்று கோடுகளை கொண்டவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவது, ஊடக ஆலோசகர், சமூக சேவகர், இசைக்கலைஞர், நடிகர், குணப்படுத்துபவர், தத்துவவாதி போன்ற தொழில்கள் பொருத்தமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications