Latest Updates
-
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
இதுல உங்க முகம் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின சில ரகசியங்களை சொல்றோம்...
Personality Test: ஒருவரது குணாதிசயங்களை அந்நபரின் ராசி, பிறந்த தேதி, கைரேகை போன்ற ஜோதிடம் மற்றும் அவற்றின் கிளைகளின் மூலம் கணித்து கூற முடியும். என்ன தான் இவற்றில் பெரும்பாலானோருக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், இதன் மூலம் நமது குணாதிசயங்களைப் பற்றி என்ன தான் கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ள ஒருவித ஆவல் இருக்கும்.
அதே சமயம் ஒருவரது உடலுறுப்புக்களின் வடிவங்களும், அளவுகளும் ஒருவரது குணாதியங்களைப் பற்றி நிறைய வெளிப்படுத்தும் என்பது தெரியுமா? ஆம், அதுவும் ஒருவரது கை, கால், காது, மூக்கு, விரல்கள், கண்கள் போன்றவை ஒருவரின் ஆளுமைப் பண்புகளை பற்றி வெளிப்படுத்தும். முக்கியமாக ஒருவரது முக வடிவம் அந்நபரினுள் மறைந்திருக்கும் சுவாரஸ்யமான குணாதிசயங்களை தெரியப்படுத்தும். நீங்கள் உங்களின் குணாதியங்களை தெரிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள்.

நீள்வட்ட முகம்
நீங்கள் நீள்வட்ட முகத்தைக் கொண்டவராக இருந்தால், நீங்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் உங்கள் இலக்குகளை அடைவதில் லட்சியமாக இருப்பீர்கள். சவாலான சூழ்நிலைகளிலும் வலுவான உணர்வைக் கொண்டிருப்பீர்கள். இந்த குணம் எப்பேற்பட்ட கடினமான சூழ்நிலைகளிலும் சிறந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது. முக்கியமாக ஒரு பிரச்சனைக்கு எப்போதும் புதுமையான தீர்வுகளை காண எப்போதும் சற்று அவுட்-ஆஃப் பாக்ஸில் சிந்திப்பீர்கள். நீள்வட்ட முகத்தைக் கொண்டவர்கள் வசீகரமானவரகள். சவால்களை எதிர்கொள்ளும் போது, நீங்கள் சற்றும் தடுமாறாமல் சமநிலையுடன் இருப்பீர்கள்.
சதுர முகம்
உங்கள் முகம் சதுர வடிவத்தில் இருந்தால், நீங்கள் உறுதியானவர், சுறுசுறுப்பானவர் மற்றும் ஒரு இடத்தில் எப்போதும் இருக்கமாட்டீர்கள். எப்போதும் ஏதாவது செய்து கொண்டிருப்பீர்கள். நீங்கள் விரைவான சிந்தனையாளர் என்பதால் ஒரு பிரச்சனைக்கு விரைவாகவும், திறமையாகவும் முடிவுகளை எடுப்பீர்கள். ஒரு விஷயத்தில் பிரச்சனை ஏற்படுவதற்கு முன்னரே அவற்றை கூர்ந்து கவனித்து கண்டறியக் கூடிய ஆற்றல் இருப்பதால், நீங்கள் பல பெரிய சிக்கல்கள் வராமல் தடுப்பீர்கள். கடினமான சூழ்நிலைகளில் நீங்கள் அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் இருந்து, பிரச்சனையில் முழு கவனம் செலுத்தக்கூடியவர் என்பதால், நீங்கள் ஒரு நல்ல தலைவராக இருப்பீர்கள்.
வட்ட முகம்
உங்கள் முகம் வட்ட வடிவத்தில் இருந்தால், நீங்கள் மற்றவர்களை அன்பாலும், அக்கறையாலும் ஈர்ப்பீர்கள். நீங்கள் மிகவும் எளிமையானவர், மற்றவர்களை புரிந்து கொள்ளக்கூடியவர். இதனால் மற்றவர்களுடன் நீங்கள் எளிதில் உறவை வளர்க்க முடியும். பரந்த மனப்பான்மை மற்றும் மற்றவர்களுக்கு உதவும் குணம் அதிகம் கொண்டிருப்பீர்கள். மிகவும் தன்னலமற்றவராக இருப்பதால், சில சமயங்களில் உங்களின் தேவைகளைக் கூட கவனிக்காமல் இருப்பீர்கள். எவ்வளவு நல்லவராக, அன்பானவராக இருந்தாலும், உங்களின் சொந்த உணர்ச்சிகளை புறக்கணிக்காதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications