Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
இந்த 4 வகைல நீங்க எப்படி சாப்பிடுறவர்னு சொல்லுங்க? நீங்க உண்மையிலேயே எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
Personality Test: உங்களுடைய நண்பர்களுடனோ அல்லது குடுமபத்தினருடனோ அமர்ந்து சாப்பிடும் போது ஒவ்வொருவரும் ஒரு மாதிரி சாப்பிடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். நாம் சாப்பிடும் ஸ்டைல் மாறுபடுவது என்பது நமக்கேத் தெரியாது. ஒருவரின் ஆளுமையே அவர்களின் சாப்பிடும் ஸ்டைலை நிர்ணயிக்கிறது. அதாவது நாம் சாப்பிடும் இயற்கையாகவே நமக்குள் கட்டமைக்கப்பட்டுள்ளது.
சிலர் வேகமாக சாப்பிடுவார்கள், சில மிகவும் மெதுவாக சாப்பிடுவார்கள், சிலரோ மிகவும் நிதானமாக உணவை ரசித்து உண்பார்கள். இந்த மாறுபாடுகளுக்கு அவர்களின் ஆளுமையே காரணம். இந்த பதிவில் நீங்கள் சாப்பிடும் விதம் உங்களின் ஆளுமைப் பற்றி சொல்லும் ரகசியங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

மெதுவாக சாப்பிடுபவர்கள்
நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர் எப்போதுமே கடைசியாக உணவை சாப்பிட்டு முடிக்கும் ஒருவராக இருப்பீர்கள். மெதுவாக உண்பவர்கள் வழக்கமாக தங்கள் உணவின் ஒவ்வொரு பிடியையும் ருசித்து உண்பவர்களாக இருப்பார்கள் மற்றும் உணவருந்தும் நேரத்தை மிகவும் முக்கியமானதாகக் கருதுகினறனர். அவர்களுக்கு உணவருந்தும் நேரம் மிகவும் மகிழ்ச்சியான நேரமாக இருக்கிறது மற்றும் புத்துணர்ச்சியை அளிக்கும் நேரமாக இருக்கும்.
வேகமாக சாப்பிடுவது அவர்களுக்கு சோர்வாகத் தெரிகிறது. அவர்களின் ஆளுமை என்று வரும்போது, மெதுவாக உண்பவர்கள் தங்கள் திறன்களின் மீது அதிக நம்பிக்கையுடன் இருப்பார்கள் மற்றும் தங்கள் திறனை மற்றவர்கள் முன் வெளிப்படுத்த விரும்ப மாட்டார்கள். அவர்கள் அதிகாரமிக்க அல்லது தலைமை பதவியில் இருக்க விரும்புகிறார்கள். அவர்களின் நேரத்தை அவர்களே நிர்ணயிக்க வேண்டுமென்று விரும்புவார்கள்.
வேகமாக சாப்பிடுபவர்கள்
வேகமாக உணவு உண்பவர்கள், மற்ற மக்கள் பாதி உணவை முடித்துக் கொண்டிருக்கும் போதே அல்லது தட்டில் உணவைப் போட்டுக் கொண்டிருக்கும் போதே, இவர்கள் மொத்த உணவையும் சாப்பிட்டு முடித்துவிடும் அவசரக்காரர்களாக இருப்பார்கள்.
அவர்களின் ஆளுமை என்று வரும்போது, இவர்கள் வாழ்க்கையில் அனைத்து விஷயங்களின் மீதுமே அதிக பசியுடன் இருப்பார்கள், அது லட்சியமாகவும்சார்ந்ததாகவும், முன்னேற்றம் சார்ந்ததாகவும் இருக்கும். அவர்கள் தங்கள் நேரத்தை மதிக்கிறார்கள், ஆனால் அனைத்தையும் அடைய வேண்டுமென்ற ஓட்டத்தில் வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளை அவர்கள் இழக்க நேரிடும்.
ஆர்வத்துடன் சாப்பிடுபவர்கள்
இவர்கள் இதுவரை சாப்பிடாத புதிய உணவுகளை முயற்சிக்க எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள். அவர்கள் சாப்பிடுவதை ஒரு வேடிக்கையான செயலாகக் நினைக்கிறார்கள், அங்கு அவர்கள் ஆராய்வதற்கும், ரிஸ்க் எடுக்கவும், மகிழ்ச்சியான நேரத்தை செலவிடவும் தயாராக இருக்கிறார்கள். யாரும் கற்பனை செய்யாத வினோதமான உணவு காம்பினேஷன்களை முயற்சிப்பவர்களாகவும் இருக்கலாம்.
அவர்களின் ஆளுமையைப் பொறுத்தவரை, இவர்கள் சாகசக்காரர்கள் மற்றும் பெரிய இதயம் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் உள்ளுணர்வு மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர்கள் மற்றும் தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் Comfort Zone-லிருந்து வெளியேற பயப்படுவதில்லை.
தேர்ந்தெடுத்து சாப்பிடுபவர்கள்
உணவை தேர்ந்தெடுத்து உண்பவர்கள் தாங்கள் விரும்பும் மற்றும் விரும்பாத உணவுகளைப் பற்றி மிகவும் தெளிவான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். நீங்கள் அவர்களை நன்கு அறிந்திருந்தால், அவர்களுடன் நீங்கள் வெளியே செல்லும் போதெல்லாம் அவர்கள் எந்த உணவை சாப்பிடுவார்கள் என்று நீங்களே ஆர்டர் செய்யலாம், ஏனெனில் அவர்கள் எப்போதும் தங்கள் விருப்பத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் விரும்பும் உணவுகளின் தரமின்மையையோ, சுவை குறைவையோ எப்போதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
ஆளுமையைப் பொறுத்தவரை, ஒரே உணவை தேர்ந்தெடுத்து உண்பவர்கள், வாழ்க்கையில் என்ன தேவை என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள், மேலும் சிந்திக்கவும், திட்டமிடவும், அதனை சரியாக செயல்படுத்தவும் நேரத்தை வீணடிக்க அவர்கள் விரும்புவதில்லை.



Click it and Unblock the Notifications












