Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இதுல உங்க புருவம் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்களோட உண்மையான குணத்தை சொல்றோம்...
Personality Test: ஒருவரது முக அழகை மேம்படுத்தி காட்டுவதில் புருவங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. என்ன தான் புருவங்கள் சிறியதாக இருந்தாலும், அவை ஒருவரை மற்றவரிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகின்றன. இந்த புருவங்கள் முகத்தில் பெரியதாக தெரியாவிட்டாலும், அவை ஒருவரது ஆளுமையைப் பற்றி தெரியப்படுத்தும் என்பது தெரியுமா?
இதுவரை நாம் முக வடிவம், சுண்டு விரல் மற்றும் பெருவிரல்களின் அளவு ஆகியவை ஒருவரது குணாதிசயங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைப் பார்த்தோம். இப்போது ஒருவரது புருவங்கள் அந்நபரைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைக் காண்போம்.

1. அடர்த்தியான புருவங்கள்
உங்களது புருவங்கள் மிகவும் அடர்த்தியாக இருந்தால், நீங்கள் சுதந்திரமாகவும், நம்பிக்கையுடனும் இருப்பீர்கள். வாழ்க்கையை முழுமையாக வாழ்வீர்கள். உங்கள் முடிவுகளில் உறுதியாக இருப்பீர்கள். உணர்ச்சிகளைக் காட்டிலும் உண்மையின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் சிந்தனைக்கு ஏற்ப விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாத போது, நீங்கள் விரக்தி அடையலாம்.
2. மெல்லிய புருவங்கள்
உங்கள் புருவங்கள் மெல்லியதாக இருந்தால், நீங்கள் நம்பிக்கையின்மை மற்றும் உறுதியற்ற தன்மையுடன் இருப்பவர். ஒரு முடிவை எடுக்க முடியாமல் சிரமப்படுவீர்கள். அளவுக்கு அதிகமாக சிந்திப்பீர்கள். மற்றவர்கள் சிறு வார்த்தை கடினமாக பேசினாலும், அதிகம் வருந்துவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்கள் எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும், உங்களை புரிந்து கொள்ள வேண்டுமென்று நினைப்பீர்கள்.
3. வளைந்த புருவங்கள்
உங்கள் புருவங்கள் நன்கு வளைந்து இருந்தால், நீங்கள் லட்சியவாதிகள், தலைமைத்துவ குணங்களை கொண்டிருப்பீர்கள். அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். வசீகரிக்கும் ஆளுமையைக் கொண்டிருப்பீர்கள். இருப்பினும் நீங்கள் மிகவும் சென்சிடிவ்வான நபர். மற்றவர்களிடம் சகஜமாக பழக நேரம் எடுக்கும். ஒரு சூழலில் வசதியாக இருந்தால் மட்டுமே, உங்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்துவீர்கள்.
4. நேரான புருவம்
நீங்கள் நேரான புருவங்களைக் கொண்டிருந்தால், பகுத்தறிவு கொண்டவர்களாக இருப்பீர்கள். உணர்ச்சிகளை விட உண்மைகளை நம்புபவர்கள். தனிப்பட்ட வாழ்க்கையையும், தொழில் வாழ்க்கையையும் சரியாக பிரித்து, சமநிலையில் பராமரிப்பதில் வல்லவர். நல்ல திறமையானவர்கள். பலவிதமான திறமைகளை கொண்டவர்கள். ஆனால் நிறைய பிடிவாதமாக இருப்பீர்கள்.
5. இடைவெளியில்லாத புருவங்கள்
உங்களின் புருவங்கள் இரண்டும் ஒன்றிணைந்து இருந்தால், நீங்கள் எதிலும் தனித்துவமாக இருப்பதோடு, படைப்பாற்றலை அதிகம் கொண்டிருப்பீர்கள். தெளிவான கற்பனை வளத்தைக் கொண்டிருப்பீர்கள். தவறு செய்பவர்களை அவ்வளவு எளிதில் மன்னிக்கமாட்டீர்கள். எந்த ஒரு விஷயத்தை நன்கு பகுப்பாய்வு செய்து முடிவுகளை திறம்பட எடுப்பீர்கள். திட்டமிட்டு எதையும் சிறப்பாக செய்வீர்கள்.
6. இடைவெளி கொண்ட புருவங்கள்
உங்கள் புருவங்களுக்கு இடையே இடைவெளி இருந்தால், நீங்கள் அன்பானவர் மற்றும் அதிக அக்கறை உள்ளவர்கள். எதையும் நேரடியாக சொல்லக்கூடியவர். மிகவும் சென்சிடிவ்வான நபர். அதிகம் கோபப்படுவீர்கள். இருப்பினும், சொல்வதை காது கொடுத்து கேட்பீர்கள். நம்பிக்கையான நபர். இதனால் நிறைய பேர் உங்களிடம் தங்களின் ரகசியமான விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications