Latest Updates
-
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
இதுல உங்க சுண்டு விரல் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்ட ஆளுன்னு சொல்றோம்...
Personality Test: நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான குணாதியங்களைக் கொண்டிருப்போம். ஒருவரது குணாதிசயங்களை பல வழிகளில் அறியலாம். அதில் ஜோதிடத்தின் படி, ஒருவரது ராசி மற்றும் நட்சத்திரத்தைக் கொண்டு, அந்நபரின் உண்மையான மற்றும் சுவாரஸ்யமான குணத்தை தெரிந்து கொள்ளலாம்.
அதே போல் சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, கண், காது, மூக்கு, விரல்கள் போன்ற உடலுறுப்பின் வடிவம், அளவு மற்றும் அமைப்புகளைக் கொண்டும் அறியலாம். அதுவும் ஒருவரது சுண்டு விரல் அந்நபரின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் என்பது தெரியுமா?

குறிப்பாக சுண்டு விரலின் நீளம் ஒருவரது மறைமுகமான மற்றும் சுவாரஸ்யமான குணங்கள், திறமைகள், அறிவாற்றல் போன்ற பல விஷயங்களை வெளிப்படுத்தும். நீங்கள் உங்களின் சுவாரஸ்யமான குணம் என்னவென்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள 3 விதமான சுண்டு விரலில் உங்களுடையது எந்த டைப் என்பதை தேர்வு செய்து, அது குறிக்கும் குணங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
டைப்-1
இந்த படத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு உங்களின் சுண்டு விரல் மோதிர விரலின், மேல் கோட்டிற்கு இணையாக இருந்தால், நீங்கள் இயற்கையாகவே சமநிலையானவர் மற்றும் இணக்கமானவர். நீங்கள் வாழ்க்கையை அமைதியாகவும், நிலையானதாகவும் அணுகுவீர்கள். இதனால் எப்பேற்பட்ட சவால்களையும் எளிதில் சமாளிப்பீர்கள். நீங்கள் அமைதியைப் பேணுவதற்கும், மோதல்களைத் தீர்ப்பதற்கும் பெயர் பெற்றவர்.
உங்களின் பேச்சுத்திறன் மற்றவர்களுடன் எளிதில் இணைய உதவுகிறது. மேலும் உங்களின் அமைதியான மனநிலை எப்பேற்பட்ட மன அழுத்த சூழ்நிலைகளிலும் சிறப்பாக செயல்பட உதவுகிறது. மறுபுறம், போட்டி நிறைந்த சூழல்களில், நீங்கள் ரிஸ்க்குகளை எடுக்கவோ அல்லது துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்கவோ தயங்குவீர்கள். ஏனெனில் மோதல்களை நீங்கள் விரும்பமாட்டீர்கள்.
டைப்-2
இந்த படத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு உங்களின் சுண்டு விரல் மோதிர விரலை விட உயரமாக இருந்தால், நீங்கள் தன்னம்பிக்கை நிறைந்தவர் மற்றும் சுதந்திரமானவர். உங்களிடம் இயற்கையாகவே வழிநடத்தும் திறன் உள்ளது. உங்கள் வெளிப்படையான ஆளுமை பெரும்பாலும் மக்களை உங்களிடம் ஈர்க்கிறது. இலக்குகளை நோக்கி பயணிப்பீர்கள் மற்றும் சவால்களை விரும்புவீர்கள்.
வாழ்வில் ரிஸ்க் எடுக்க பயப்படமாட்டீர்கள். மேலும் உங்கள் ஆற்றல் மற்றும் உற்சாகத்தால் மற்றவர்களை அடிக்கடி ஊக்குவிப்பீர்கள். இருப்பினும், உங்களின் தன்னம்பிக்கை சில நேரங்களில் மற்றவர்களுக்கு ஆணவமாகத் தோன்றலாம். நீங்கள் சுதந்திரமாக வேலை செய்ய விரும்புவீர்கள். மேலும் நீங்கள் நினைக்கும் விஷயங்கள் நீங்கள் விரும்பும் அளவுக்கு வேகமாக நடக்காத போது பொறுமையிழந்து போகலாம்.
டைப்-3
இந்த படத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு உங்களின் சுண்டு விரல் மோதிர விரலை விட குட்டையாக இருந்தால், நீங்கள் அதிகமாக பேசமாட்டீர்கள் மற்றும் உணர்ச்சி ரீதியாக புத்திசாலி. நீங்கள் ஒரு சிந்தனைமிக்க இயல்புடையவர் மற்றும் மற்றவர்களின் உணர்ச்சிகளுடன் ஆழமாக ஒத்துப்போவீர்கள். மற்றவர்கள் சொல்வதை பொறுமையாக காது கொடுத்து கேட்டு, அதன் பின் எந்த ஒரு முடிவையும் எடுப்பீர்கள். நீங்கள் மிகவும் இரக்கமுள்ள நபர்.
மற்றவர்களுக்கு உதவுவதிலும், பல்வேறு வகையான கலைகள் மூலம் உங்களை வெளிப்படுத்துவதிலும் நீங்கள் திருப்தி அடைவீர்கள். மற்றவர்களுடன் அதிகம் பேசாமல் இருந்தாலும், ஒருவருடன் உருவாக்கும் உறவுகள் அர்த்தமுள்ளவையாகவும், நீண்ட காலம் நீடித்தும் இருக்கும்.
அதே சமயம் நீங்கள் எதையும் வெளிப்படையாக பேசாமல் மனதிற்குள்ளேயே வைத்திருப்பதால், அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். ஒரு குழுவில் சேர்ந்து பயணிப்பது சற்று கடினமாக இருக்கும். உங்களின் சுய சந்தேகங்கள் சில நேரங்களில் உங்கள் முழு திறனையும் அடைவதைத் தடுக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications