Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
இதுல உங்க புருவங்கள் எந்த மாதிரி இருக்கு-ன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
Personality Test: பொதுவாக ஒருவரது குணங்களை ராசிகள், பிறந்த தேதி, கிழமை, மாதம் போன்றவற்றைக் கொண்டு அறிந்து கொள்ளலாம் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் ஒருவரது புருவங்களும் அந்நபரின் ஆளுமையைப் பற்றி வெளிப்படுத்தும் என்பது தெரியுமா? நமது முகத்திற்கு புருவங்கள் ஒருவித அழகை சேர்க்கின்றன.
இது தவிர இந்த புருவங்கள் நீங்கள் எப்படிப்பட்ட நபர், நீங்கள் எந்த மாதிரியான வாழ்க்கையை வழிநடத்துகிறீர்கள் என்பன போன்ற பல விஷங்களை தெரியப்படுத்தும். எப்படி ஒருவரது உடல் மொழி, முக அம்சங்கள், தூங்கும் நிலை போன்றவை, அந்நபரைப் பற்றி வெளிப்படுத்துகிறதோ, அதேப் போல் புருவங்களின் அமைப்பும் ஒருவரது மறைமுகமான பண்புகள், பலம், பலவீனங்கள் போன்றவற்றை வெளிப்படுத்துகின்றன.

நீங்கள் உங்கள் புருவங்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கின்றன என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா?அதுவும் நீங்கள் சிந்தனையாளரா, நட்பானவரா, சுதந்திரமாக இருக்க விரும்பும் ஆன்மாவா என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இரண்டு விதமான புருவங்களும், அந்த புருவங்கள் ஒருவரது குணாதியங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பது குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. வளைந்த புருவங்கள்
உங்கள் புருவங்கள் வளைந்து இருந்தால், நீங்கள் இயற்கையாகவே அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவராக இருப்பீர்கள். மற்றவர்களுடன் பழக அதிக நேரம் எடுத்துக் கொள்வீர்கள். எதையும் அழகாக, நேர்த்தியாக செய்ய நினைப்பீர்கள். நீங்கள் ஒரு உள்நோக்கமுள்ள மற்றும் சிந்தனைமிக்க இயல்புடையவர். எந்த சூழ்நிலையையும் எப்போதும் மனதளவில் கட்டுப்பாட்டில் வைத்திருப்பீர்கள்.
நீங்கள் இருக்கும் இடம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் நீங்கள் வலுவான தலைமைத்துவ குணங்களைக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் ஒரு விஷயத்தை முழு கவனம் செலுத்தி செய்யும் போது, அதை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் உணர்ச்சிகள் மற்றும் முடிவுகளை நீங்கள் எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை உறுதி செய்கிறீர்கள்.
2. நேரான புருவங்கள்
உங்கள் புருவங்கள் நேராக இருந்தால், நீங்கள் மிகவும் தெளிவான நபர் மற்றும் நடைமுறைக்கேற்ப எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுப்பீர்கள். மற்றவர்கள் பேச்சை கேட்டு எந்த ஒரு செயல்களையும் செய்வதை விட, சூழ்நிலைகளை நன்க பகுப்பாய்வு செய்து, அதன்படி செயல்பட விரும்புவீர்கள். மற்றவர்கள் உங்களை நிலையானவராகவும், நம்பகமானவராகவும் நினைப்பார்கள். இதனால் உங்களிடம் ஆலோசனை மற்றும் ஆதரவை பெற நிறைய பேர் வருவார்கள்.
எதையும் நேரடியாக பேசக்கூடியர். உணர்ச்சிகளை விட ஆதாரங்களை மதிப்பிட்டு, நேரடியாக விஷயத்திற்கு வர விரும்புவீர்கள். ஒரு விஷயத்தை முழுமையாக நம்புவதற்கு முன்பும் மற்றும் முடிவெடுப்பதற்கும் முன்பும், நன்கு ஆராய்ந்து பின் எடுப்பீர்கள். சூழ்நிலைகளை மதிப்பிடும் உங்களின் திறன், எந்த சூழலிலும் உங்களை நம்பகமான நபராக மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நபராக ஆக்குகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications