Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
இதுல உங்க காது எந்த மாதிரி-ன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்...
Personality Test: ஒவ்வொருவருக்கும் தங்களின் குணாதிசயங்களை மற்றவர்கள் கணித்து கூறுவதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். ஒருவரது குணாதிசயங்களை பலவாறு கணிக்கலாம். அதுவும் ஒருவரின் முகம், கண்கள், மூக்கு, காது, விரல்கள், பாதங்கள் போன்றவற்றின் வடிவம், அளவு போன்றவை மட்டுமின்றி, ஒருவரது ஒருசில பழக்கவழக்கங்களும் அந்நபரின் குணங்களை தெரியப்படுத்தும்.
நடத்தை நிபுணர்கள் காதுகளுக்கும், ஆளுமைக்கும் இடையில் இணைப்பு இருப்பதாக கூறுகின்றனர். எனவே உங்கள் காதுகள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள். ஒருவருக்கு பெரிய காதுகள் அல்லது சிறிய காதுகள் இருக்கலாம். இந்த காது ஆளுமை சோதனை நீங்கள் படிக்கும் முன், கண்ணாடியில் உங்கள் காது எப்படி உள்ளது என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். பின் உங்கள் காது வடிவத்தின் அடிப்படையில் உங்களின் குணாதிசயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

1. பெரிய காதுகள்
உங்கள் காது பெரியதாக இருந்தால், நீங்கள் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக பேசுவீர்கள். எப்பேற்பட்ட சிக்கலான சூழ்நிலையிலும் அமைதியாக இருந்து விஷயங்களை கையாள்வீர்கள். நீங்கள் மனதளவில் வலிமையானவர். எதற்கும் அவசரப்படமாட்டீர்கள். நம்பிக்கை மற்றும் வழிகாட்டுதலுக்காக மக்கள் உங்களைத் தேடுவார்கள். உங்கள் மனதில் தோன்றுவதை பேச எப்போதும் பயப்படமாட்டீர்கள். வாழ்க்கையை ரசித்து வாழ்வீர்கள்.
உங்களுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை அமைகிறதோ, அதை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ்வீர்கள். நடந்ததை நினைத்து எப்போதும் வருந்தாமல், அடுத்தது என்ன என்று வாழ்க்கையை நகர்த்தி செல்வீர்கள். புதியவர்களைச் சந்திப்பதும், புதிய முயற்சிகளை மேற்கொள்வதும் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். ரிஸ்க் எடுக்க தயங்கமாட்டீர்கள்.
2. சிறிய காதுகள்
உங்களுக்கு சிறிய காதுகள் என்றால், நீங்கள் மிகவும் அமைதியான நபர். உங்களின் எண்ணங்களை அவ்வளவு எளிதில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளமாட்டீர்கள். வெளியே உங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிப்பீர்கள். சுற்றி நடப்பதை கவனிக்கக்கூடிய நபர். மிகவும் ஒழுக்கமானவர். உங்கள் இலக்குகளை அடையாமல் ஓயமாட்டீர்கள். உங்களை யாராலும் வீழ்த்த முடியாது.
தேவையில்லாமல் அதிகம் பேசமாட்டீர்கள் மற்றும் அப்படி பேசுவதையும் விரும்பமாட்டீர்கள். எப்போதும் அர்த்தமுள்ள உரையாடல்களையே விரும்புவீர்கள். உங்களுடன் பொருந்தக்கூடிய ஒருவரை சந்திக்கும் போது, நீங்கள் மிகவும் வசீகரமாகவும், சிறந்த உரையாடலாளராகவும், நன்கு காது கொடுத்து கேட்பவராகவும் இருப்பீர்கள். நீங்கள் கூட்டமாக இருப்பதை அதிகம் விரும்பாமல் இருக்கலாம். ஆனால் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிட விரும்புவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
