Latest Updates
-
கீரை வாங்குனா அடுத்தமுறை இந்த ஆந்திரா கீரை வேப்புடுவை செய்யுங்க - கீரை பிடிக்காதவர்களும் ஆசையா சாப்பிடுவாங்க -
கஜகேசரி ராஜயோகம் ஜூலை 14-ல் வரப்போவதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சத்தான.. சோள உப்புமா - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 11 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வை: ஆகஸ்ட் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. -
சுக்கிரன் சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
இந்தியாவின் 'மௌன கிராமம்' என்று அழைக்கப்படும் வினோத கிராமம் எது தெரியுமா? இந்த கிராம மக்கள் ரொம்ப பாவம் -
மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி கிரேவி செய்யுங்க.. சிக்கன் கிரேவி மாதிரி செமயா இருக்கும்.. -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 24 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.. -
2 உருளைக்கிழங்கு இருந்தா இந்த நார்த் இந்தியன் தம் ஆலுவை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும்
இந்த படத்துல எந்த காதல் உண்மை-ன்னு சொல்லுங்க... நீங்கள் காதலில் எந்த மாதிரி-ன்னு சொல்றோம்...
Personality Test: பொதுவாக ஆளுமை சோதனைகள் மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒவ்வொருவருக்குமே தங்களின் ஆளுமையைப் பற்றி கூறும் சோதனைகளை மேற்கொள்ள ஒருவித ஆர்வம் இருக்கும். இம்மாதிரியான ஆளுமை சோதனைகள் நாம் யார், மற்றவர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம் என்பதை நன்கு புரிந்து கொள்ள உதவுகிறது. அதோடு ஒருவரது பலம் மற்றும் பலவீனங்கள், நம்பிக்கைகள், விருப்பங்கள் போன்றவற்றையும் அறிய உதவுகிறது.
அந்த வகையில் இங்கு ஒரு சுவாரஸ்யமான ஆளுமை சோதனை கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் எந்த காதல் உண்மை? என்னும் இந்த ஆளுமை சோதனை படமானது காதல் விஷயத்தில் ஒருவரது விருப்பங்கள் மற்றும் உணர்வுகளை அறிய உதவும். அதற்கு இந்த படத்தில் கொடுக்கப்பட்டுள்ள 4 விதமான படங்களுள் ஒன்றை தேர்வு செய்யுங்கள்.

இந்த சோதனையின் மூலம் எந்த வகையான காதலர் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார்கள், நீங்கள் எந்த மாதிரியான காதலரை விரும்புவீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். என்ன நண்பர்களே! ஒரு படத்தை தேர்வு செய்துவிட்டீர்களா? அந்த படத்திற்குரிய பதிலை அறிய தொடந்து படியுங்கள்.
படம் 1
முதல் படத்தை நீங்கள் தேர்வு செய்திருந்தால், நீங்கள் மிகவும் நம்பிக்கையானவர்கள் மற்றும் உங்கள் உணர்ச்சிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவீர்கள். வெளிப்படையானவர்கள், எதையும் மனதில் வைத்து பேசாமல் வெளிப்படையாக பேசுவீர்கள். மற்றவர்களுடன் நன்கு பழகுவீர்கள். மென்மையானவர்கள் மற்றும் பாசமானவர்கள். உண்மையான மற்றும் ஆழமான அன்பை கண்டறிய விரும்புவீர்கள். நீண்ட கால உறவில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். அதாவது, காதலித்தவரை மட்டுமே மணக்க விரும்புவீர்கள்.
படம் 2
இரண்டாவது படத்தை தேர்வு செய்திருந்தால், நீங்கள் சுதந்திரமானவர்கள் மற்றும் தீவிர உறவில் ஈடுபடுவதை விட தனியாக இருக்கவே விரும்புவீர்கள். எவ்வித அர்ப்பணிப்பும் இல்லாமல் வாழ்க்கையை ஆராய விரும்புவீர்கள். ரிஸ்க் எடுக்க சற்றும் தயங்கமாட்டீர்கள். காதலிக்க விரும்புவீர்கள் ஆனால் திருமணம் செய்து கொள்ள பயப்படுவீர்கள். ஏனெனில் திருமணம் செய்தால் அர்ப்பணிப்பு அல்லது பொறுப்புக்கள் அதிகரிக்கும் என்பதால், அதை விரும்பமாட்டீர்கள். இந்த விஷயத்தில் சற்று தயங்குவீர்கள்.
படம் 3
மூன்றாவது படத்தை தேர்வு செய்திருந்தால், நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவீர்கள் மற்றும் எளிதில் காதலில் விழுந்துவிடுவீர்கள். மேலும் நீங்கள் அன்பு, பாதுகாப்பு, ஆறுதல் உணர்வைக் கொடுக்கும் சிறப்பான ஒருவரை கண்டுபிடிக்க விரும்புவீர்கள். காதலிப்பரை மணக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். நீண்ட கால உறவுகளை மட்டுமே தேடுவீர்கள். காதலில் விழுந்துவிட்டால், அந்த காதலில் மிகவும் தீவிரமாக இருப்பீர்கள்.
படம் 4
நான்காவது படத்தை தேர்வு செய்திருந்தால், நீங்கள் சற்று மர்மமானவர்கள், உங்களை புரிந்த கொள்வது கடினமாக இருக்கும். அதே சமயம் நீங்கள் மிகவும் ரொமான்டிக்கானவர்கள். நீங்கள் மறக்க முடியாத ஒரு காதலை அனுபவிக்க விரும்புவீர்கள். உண்மைக் காதலைக் கண்டறிய விரும்புவீர்கள். முக்கியமாக நீங்கள் நேர்மை, தொடர்பு, நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் வாழ்க்கைத் துணையை தேடுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications