Latest Updates
-
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்..
இதுல நீங்க எப்படி 'i' எழுதுவீங்கன்னு சொல்லுங்க.. உங்களோட ரகசியத்தை சொல்றோம்...
Personality Test: இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரின் குணாதிசயங்களும் வேறுபட்டிருக்கும். இப்படிப்பட்ட ஒருவரது குணாதிசயங்களை பல வழிகளின் மூலம் கணிக்கலாம். அதில் ஜோதிடத்தின் படி ஒருவரது பிறந்த தேதி, பிறந்த மாதம், ராசி, நட்சத்திரம் ஆகியவற்றைக் கொண்டு குணங்கள் கணிக்கப்படுகின்றன.
அதேப் போல் சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, ஒருவரது முகம், மூக்கு, தாடை, கண்கள் போன்ற உடலுறுப்புக்களின் அளவு, வடிவம் ஆகியவற்றைக் கொண்டு ஒருவரது குணங்கள் கணித்து கூறப்படுகின்றன. இவற்றைத் தவிர, ஒருவரது கையெழுத்தும் அந்நபரின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் என்பது தெரியுமா?

அதுவும் ஆங்கில எழுத்துக்களில் உள்ள 'i' என்ற ஒரு எழுத்தை ஒருவர் எழுதும் விதத்தைக் கொண்டு, அந்நபரின் குணாதிசயங்களை தெரிந்து கொள்ளலாம். அதுவும் இந்த 'i'-ல் ஒருவர் வைக்கும் புள்ளியைக் கொண்டு குணாதிசயங்களை அறியலாம். கீழே மூன்று விதமான 'i' மற்றும் அது குறிக்கும் குணாதிசயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நீங்கள் எப்படி 'i' எழுதுவீர்கள் என்பதை பார்த்து, உங்கள் குணாதிசயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
'i'-ல் சிறிய வட்டம்
நீங்கள் 'i' என்ற எழுத்தில் புள்ளி வைக்கும் இடத்தில் ஒரு வட்டம் போட்டால், நீங்கள் நல்ல படைப்பாற்றல் கொண்டவர், திறமையானவர், விசித்திரமான இயல்பைக் கொண்டவர். மேலும் எதையும் வெளிப்படையாக பேசுவீர்கள். அதிகம் கவலைப்படமாட்டீர்கள். புதிய அனுபவங்களைப் பெற விரும்புவீர்கள். மற்றவர்களை ஈர்க்கும் வகையிலான ஆளுமையைக் கொண்டிருப்பதோடு, தோற்றத்தைக் கொண்டிருப்பீர்கள். கற்பனைத் திறன் அதிகம் கொண்டவர். உங்களுக்கு கலைகள், கல்வி, உளவியல், மீடியா போன்றவற்றில் ஆர்வம் அதிகமாக இருக்கும் மற்றும் இந்த துறைகளில் வேலை செய்ய விரும்புவீர்கள்.
'i'-ல் சிறிய புள்ளி
நீங்கள் 'i' என்ற எழுத்தில் புள்ளியை வைப்பீர்களானால், நீங்கள் எதையும் சரியாக செய்ய நினைப்பீர்கள். குழப்பத்தை விட துல்லியத்திற்கு முன்னுரிமை அளிப்பீர்கள். எந்த ஒரு செயலையும் ஒழுங்காக செய்வீர்கள். திட்டமிட்டு எந்த வேலையையும் செய்வீர்கள், அதையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உணர்ச்சி ரீதியாக நிலையாகவும், அமைதியாகவும் இருப்பீர்கள். ஒரு விஷத்தில் எந்த ஒரு முடிவை எடுக்கும் முன்பும், அந்த விஷயத்தை விரிவாக தெரிந்து கொண்டு, அதன் பின்னரே முடிவெடுப்பீர்கள். உங்களுக்கு கட்டிடக்கலை, நிதி திட்டமிடுதல், ஆசிரியர், மருத்துவர் அல்லது ஆராய்ச்சியாளர் ஆகிய துறைகளில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.
'i'-ல் சாய்வான கோடு
நீங்கள் 'i' என்ற எழுத்தில் புள்ளிக்கு பதிலாக ஒரு சாய்வான கோடு போடுவீர்களானால், நீங்கள் தீவிரமான ஆளுமையைக் கொண்டவர்கள், சுயவிமர்சனம் செய்பவர், இலக்கை நோக்கி தீவிரமாக செல்வீர்கள். உங்கள் முடிவுகளில் உறுதியாக இருப்பீர்கள். பொறுமையற்றவர்கள். உணர்ச்சி ரீதியாக வலிமையானவர், கடின உழைப்பாளி, லட்சியவாதிகள். வாழ்க்கையில் எப்பேற்பட்ட தடையை சந்தித்தாலும், அதை தாண்டி முன்னேறி செல்வீர்கள். சிறப்பான நடத்தையைக் கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு ஐடி, கணிதம், சட்டம் அல்லது சுயதொழில் போன்றவற்றை நாட்டம் அதிகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications