Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
நீங்க இதுல எந்த மாதிரி ஃபோன் யூஸ் பண்ணுவீங்க-ன்னு சொல்லுங்க... உங்களோட சுவாரஸ்யமான குணத்தை சொல்றோம்..
Personality Test: ஒருவரின் ஆளுமை அந்நபரின் முகம், கண், காது, மூக்கு போன்ற உடல் அம்சங்களின் மூலம் மட்டுமின்றி, அந்நபரின் பழக்கத்தைக் கொண்டும் அறியலாம். தற்போது மொபைல் போன் இல்லாதவரை காண முடியாது.
இப்படிப்பட்ட மொபைல் போனை ஒருவர் பயன்படுத்தும் விதம் அந்நபரின் குணங்களைப் பற்றி வெளிப்படுத்தும் என்பது தெரியுமா? என்ன ஆச்சரியமாக உள்ளதா? நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும், ஒருவரின் மொபைல் போன் பயன்படுத்தும் விதம் அந்நபரின் முடிவெடுக்கும் திறன் மற்றும் சுவாரஸ்யமான குணங்களை வெளிப்படுத்தும்.

ஆய்வுகளிலும் ஒருவரின் குறிப்பிட்ட சைகைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றவை ஆளுமை பண்புகளை பிரதிபலிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கீழே மொபைல் ஃபோனை பயன்படுத்தும் 4 விதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நீங்கள் உங்கள் மொபைல் ஃபோனை எப்படி பயன்படுத்துவீர்கள் என்று சொல்லுங்கள், உங்களின் சுவாரஸ்யமான குணத்தைப் பற்றி சொல்கிறோம்.
1. ஒரு கையால் ஃபோனை பிடித்து பெருவிரலால் பயன்படுத்துவது
நீங்கள் ஒரு கையால் ஃபோனை பிடித்து பெருவிரலால் பயன்படுத்துவீர்களானால், நீங்கள் தன்னம்பிக்கை நிறைந்த நபர். புத்திசாலித்தனம் மற்றும் விளையாட்டுத்தனமான ஆற்றல் ஆகியவற்றால் மற்றவர்களை ஈர்ப்பீர்கள். உங்களுடன் இருக்க உங்கள் நண்பர்கள் அதிகம் விரும்புவார்கள். ஏனெனில் நீங்கள் உங்களை சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வீர்கள்.
மிகவும் உற்சாகமான நபர். ரிஸ்க் எடுக்க தயங்கமாட்டீர்கள். உணர்ச்சிகளை ஆழமாக உணர்வீர்கள். மிகச்சிறந்த தலைவராக இருப்பீர்கள். வியாபாரம் செய்வது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். ரிஸ்க் எடுக்க சற்றும் யோசிக்கமாட்டீர்கள். சாகச பயணங்களை மேற்கொள்ள அதிகம் விரும்புவீர்கள். மற்றவர்களை ஊக்கமளிக்கும் வகையில் பேசும் ஆற்றலைக் கொண்டிருப்பீர்கள்.
2. இரு கைகளால் ஃபோனை பிடித்து ஒரு கையின் பெருவிரலால் பயன்படுத்துவது
நீங்கள் இரு கைகளால் ஃபோனை பிடித்து ஒரு கையின் பெருவிரலால் பயன்படுத்துவீர்களானால், நீங்கள் மிகவும் எளிமையான நபர். எதையும் ஒழுக்கமாக செய்ய நினைப்பீர்கள். வீட்டில் ஒருமுடிவை எடுக்கும் முன் அனைவரது விருப்பங்களையும் கேட்டு, அதன் பின்பே முடிவெடுப்பீர்கள். நீங்கள் மிகவும் நம்பகமானவர்களாக இருப்பீர்கள்.
எதையும் சிறப்பாக திட்டமிட்டு செய்வீர்கள். இதனால் பணியிடத்தில் உங்களின் திறமைகள் பிரகாசிக்கும். உங்கள் எச்சரிக்கையான இயல்பு உங்களுக்கு படைப்பாற்றல் இல்லை என்று அர்த்தமல்ல. ஸ்திரத்தன்மை மற்றும் வழக்கத்தை விட அதிகமான உங்கள் அன்பு உங்களை குறைவான சாகசக்காரர்களாக வெளிக்காட்டினாலும், உங்கள் நிலையான மற்றும் சிந்தனைமிக்க அணுகுமுறை உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.
3. இரு கைகளாலும் ஃபோனைப் பிடித்துக்கொண்டு இரு கட்டைவிரலால் பயன்படுத்துவது
நீங்கள் இரு கைகளாலும் ஃபோனைப் பிடித்துக்கொண்டு இரு கட்டைவிரலால் பயன்படுத்துவீர்களானால், நீங்கள் சிறப்பான செயல்திறன் மற்றும் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் ஆற்றலைக் கொண்டிருப்பீர்கள். நேரத்தை மதிப்பவர். தேவையில்லாத விஷயங்களில் நேரத்தை வீணடிக்கமாட்டீர்கள்.
சவால்களைக் கண்டு அச்சம் கொள்ளமாட்டீர்கள். எப்பேற்பட்ட மோசமான சூழ்நிலைகளிலும், அமைதியாக இருந்து, பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் வல்லவர். எதையும் சரியாக செய்ய வேண்டுமென்ற எண்ணத்தால், பல வேலைகளை செய்து முடிக்க தாமதமாவதால் விரக்தியடைவீர்கள்.
4. ஒரு கையால் ஃபோனை பிடித்து மற்றொரு கையின் ஆள்காட்டி விரலால் பயன்படுத்துவது
நீங்கள் ஒரு கையால் ஃபோனை பிடித்து மற்றொரு கையின் ஆள்காட்டி விரலால் பயன்படுத்துவீர்களானால், நீங்கள் தனிமை விரும்பிகள். முடிவுகளை எடுப்பதற்கு முன் ஆழ்ந்து சிந்தித்து பார்க்க நிறைய நேரத்தை எடுத்துக் கொள்வீர்கள். உங்கள் ஆக்கப்பூர்வமான மனம் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
உங்களின் தனித்துவமான கண்ணோட்டம் அலுவலகத்தில் உங்கள் வேலையை தனித்து காட்டும். உலகத்தை வித்தியாசமாகப் பார்க்கும் உங்களின் திறமையால் தொழிலில் பல வெற்றிகளைப் பெறுவீர்கள். மற்றவர்களின் கருத்துக்களால் நீங்கள் எளிதில் பாதிக்கப்படமாட்டீர்கள். இருப்பினும், உங்கள் எச்சரிக்கையான அணுகுமுறை சில சமயங்களில் அளவுக்கு அதிகமாகச் சிந்திக்கவும், முன்னேற்றத்தைக் குறைக்கவும் அல்லது சுய சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications