Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
இதுல உங்க கால் விரல் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்களோட உண்மையான குணத்தை சொல்றோம்..
Personality Test: ஒருவரது குணாதிசயங்களை பல வழிகளில் அறியலாம். அதில் ஒருவரது ராசி மற்றும் நட்சத்திரத்தைக் கொண்டு மட்டுமின்றி, கண், காது, மூக்கு போன்ற உடலுறுப்பின் வடிவம், அளவு மற்றும் அமைப்புகளைக் கொண்டும் அறியலாம். அதுவும் ஒருவரது கால்விரல்கள் அந்நபரின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் என்பது தெரியுமா?
குறிப்பாக கால் விரல்களின் அளவுகள் மட்டுமின்றி, பாதங்களின் வடிவமும் ஒருவரது மறைமுகமான மற்றும் சுவாரஸ்யமான குணங்கள், திறமைகள், அறிவாற்றல் போன்றவற்றை வெளிப்படுத்தும். நீங்கள் உங்களின் மறைமுகமான குணத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள 3 விதமான கால் விரல்கள் அல்லது பாதங்களின் வடிவத்தில் உங்களுடையது எப்படி உள்ளது என்பதை தேர்வு செய்து, அது குறிக்கும் குணங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1. அகலமான கால்விரல்கள்
அகலமான கால் விரல்களைக் கொண்டிருந்தால், நீங்கள் துணிச்சலானவர்கள். மேலும் உங்களின் வலுவான பணி நெறிமுறை, ஒவ்வொரு வேலையிலும் உங்களை வெற்றி பெற உதவுகிறது. சவாலில் இருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டீர்கள். ஆர்வத்துடன் ஒவ்வொரு வேலையையும் தொடங்குவீர்கள். மேலும் ஒருவேலை எடுத்தால், அதை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். சாகச விரும்பிகள். சும்மா இருப்பதை விரும்பமாட்டீர்கள். எப்போதும் ஏதாவது செய்து கொண்டே இருப்பீர்கள். புதிய அனுபவங்களைப் பெற விரும்புவீர்கள்.
விமானி, மலையேற்ற வழிகாட்டி, பயண பத்திரிகையாளர், கடல் விஞ்ஞானி, தொல்பொருள் ஆய்வாளர், பயண செவிலியர், புவியியலாளர், விமானப் பணிப்பெண், வனவிலங்கு புகைப்படக் கலைஞர் மற்றும் கடற்படை ஆகியவை இந்த வகை கால் விரல்களைக் கொண்டவர்களுக்கு ஏற்ற தொழிலாகும். இந்த தொழில்களில் இருந்தால் செழித்து வளர்வீர்கள்.
2. நீளமான கால்விரல்கள்
நீளமான கால்விரல்களைக் கொண்டிருந்தால் மற்றும் உங்கள் கால் பெருவிரல் மற்ற நான்கு விரல்களில் இருந்து விலகி இருந்தால், நீங்கள் மிகவும் தனிப்பட்ட நபராக இருப்பீர்கள். அறிவுசார் ஈடுபாடு, சுதந்திரம் மற்றும் தனியுரிமை ஆகியவை உங்களுக்கு முக்கியம். இந்த குணங்கள் உங்களை உங்கள் வாழ்க்கையில் ஒரு வலுவான, தன்னிறைவு பெற்ற ஒருவராக ஆக்குகின்றன. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்திருப்பதை நீங்கள் விரும்புவீர்கள். சுயமாக சிந்தித்து எதையும் செய்ய விரும்புவீர்கள்.
விவாதம், பகுப்பாய்வு அல்லது ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட வேலைகள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கலாம். பொதுவாக உங்கள் தனிப்பட்ட நேரத்தையும் இடத்தையும் மதிக்கிறீர்கள் மற்றும் மற்றவர்களுடன் பழகும் போது தெளிவான வரம்புகளை வைத்திருப்பீர்கள். ஆழமான, சிந்தனையைத் தூண்டும் விவாதங்களை விரும்புகிறீர்கள். ஒரு விஷயத்தை எடுத்தால், அதை முடிக்காமல் ஓயமாட்டீர்கள்.
3. குறுகலான கால்விரல்கள்
உங்களின் கால் விரல்கள் குறுகலாக இருந்தால், நீங்கள் துடிப்பானவர்கள் மற்றும் உறுதியான மனநிலையை கொண்டவர்கள். மேலும் நீங்கள் சமூக தொடர்பு மற்றும் தலைமைத்துவம் தேவைப்படும் பதவிகளில் செழிக்க வாய்ப்புள்ளது. அரசியல் கட்சியில் இருந்தால் தலைமை பதவியில் இருப்பீர்கள். நீங்கள் வாழ்க்கையை கொண்டாடுபவர். நீங்கள் மிகவும் அன்பானவர் மற்றும் அக்கறை கொண்டவர். சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்கள். பெருநிறுவனத் தலைமை, இராணுவ சேவை, விளையாட்டுப் பயிற்சி, ஊடக ஒளிபரப்பு, அரசியல், தொழிற்சங்கத் தலைமை, ரியல் எஸ்டேட், மக்கள் தொடர்பு மற்றும் நெருக்கடி மேலாண்மை போன்றவை இந்த வகை கால் விரல்களைக் கொண்டவர்களுக்கு ஏற்ற தொழிலாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications