Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
இதுல உங்க ஆள்காட்டி விரல் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்களோட சுவாரஸ்யமான குணத்தை சொல்றோம்..
Personality Test: மனித உடலானது அற்புதமான வடிவமைப்பைக் கொண்டது. அதுவும் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரின் உடலும் வேறுபட்டிருக்கும். இப்படிப்பட்ட உடலைக் கொண்டு ஒருவரது குணாதிசயங்களை தெரிந்து கொள்ளலாம் என்பது தெரியுமா? ஆம், ஒருவரது உடலின் ஒவ்வொரு உறுப்பின் அமைப்பு, வடிவம் போன்றவை, அந்நபரின் சிந்தனை, குணாதிசயம், பழக்கவழக்கங்கள் போன்ற பல விஷயங்களை தெரியப்படுத்தும். இதன் மூலம் அந்நபரை கையாள எளிதாக இருக்கும்.
அதுவும் ஒருவரது கைகளில் உள்ள ஒவ்வொரு விரல்களும், அந்நபரின் குணாதிசயங்களைப் பற்றி வெளிப்படுத்தும். குறிப்பாக ஒருவரது ஆள்காட்டி விரலின் வடிவம், அந்நபரின் ஆளுமை பண்புகளை வெளிப்படுத்தும். நீங்கள் உங்கள் குணங்களை தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் ஆள்காட்டி விரல் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எந்த வகையைச் சேர்ந்தது என்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

நேரான ஆள்காட்டி விரல்
உங்கள் ஆள்காட்டி விரல் நேராக, தட்டையாக இருந்தால், நீங்கள் நேர்மையை மதிப்பவர் மற்றும் உங்களுக்கு பொய் சொல்வது என்பது பிடிக்காது. மிகவும் நம்பிக்கையான நபர் மற்றும் அந்த நம்பிக்கையை மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பீர்கள். நீங்கள் வலிமையானவராகவும், சுதந்திரமானவராகவும் தெரிந்தாலும், உங்களுக்கு பிடித்தவர்கள் விஷயத்தில் அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். ஆனால் அதை வெளிக்காட்டமாட்டீர்கள். இதனால் உங்களை புரிந்து கொள்ளாதவர்களுக்கு நீங்கள் தவறாக தெரியலாம். அதுவே உங்களை பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு, நீங்கள் எவ்வளவு இரக்க குணம் கொண்டவர் என்பது நன்கு தெரியும்.
கூர்மையான ஆள்காட்டி விரல்
உங்கள் ஆள்காட்டி விரல் கூர்மையான வடிவத்தில் இருந்தால், நீங்கள் அதிகம் பகல் கனவு காண்பீர்கள். அன்பின் சக்தியை நம்புவீர்கள். அன்பால் முடியாதது எதுவும் இல்லை என்று நினைப்பவர்கள். முக்கியமாக நீங்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் விசுவாசமானவர்கள். இது உங்கள் இலக்குகளை எளிதில் அடைய உதவுகிறது. சிறந்த தலைமைத்துவ திறனைக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் மிகவும் பாசமானவர் என்பதால், உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களை அதிகம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வளைவு நெளிவான ஆள்காட்டி விரல்
உங்கள் ஆள்காட்டி விரல் வளைந்து நெளிந்திருந்தால், நீங்கள் மிகவும் அமைதியான நபர். உண்மையும், நேர்மையும், உங்களுக்கு குறிப்பிடத்தக்க மதிப்பைத் தரும். நீங்கள் உறுதியான நபர். திறந்த மனதுடையவர் மற்றும் தாராள மனப்பான்மை உடையவர். எப்போதும் எந்த இடத்திலும் தனித்து காணப்படுவீர்கள். இருப்பினும் உங்களுக்கு கோபம் அதிகமாக வரும். நீங்கள் தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பீர்கள். ஆனால் உங்கள் சுயமரியாதையை பாதிக்கும் விஷயங்களை எளிதில் விட்டுவிடமாட்டீர்கள். கண்ணியமாக இருப்பீர்கள். நட்பை சிறப்பாக பேணுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications