Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இதுல உங்க கை பெருவிரல் எந்த மாதிரி இருக்கு சொல்லுங்க.. உங்கள பத்தின சுவாரஸ்யமான ரகசியத்தை சொல்றோம்..
Personality Test: நமது உடல் அமைப்பு மற்றும் வடிவங்களுக்கும், நமது குணாதிசயங்களுக்கும் ஒரு வலுவான தொடர்பு உள்ளது. நமது உடலின் ஒவ்வொரு பகுதியும், அதன் தோற்றத்தினால், நாம் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறோம் மற்றும் நமது உண்மையான குணாதிசயம் என்னவென்பதை வெளிப்படுத்துகிறது.
என்ன தான் நமக்கு நம்மைப் பற்றி தெரிந்திருந்தாலும், மற்றவர்கள் நம்மைப் பற்றி கணித்து கூறும் போது, அதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். அந்த வகையில் 5 வகையான கை பெருவிரல்கள் உள்ளன. அவை அதன் வடிவங்களில் வேறுபட்டிருக்கின்றன.

பெருவிரலில் ஒரு மூட்டு உள்ளது. அது கட்டை விரலின் மேல் மற்றும் கீழ் பகுதிகளை இணைக்கிறது. மேலும் பெருவிரலானது வளையக்கூடியதாகவோ அல்லது வளைந்து கொடுக்காததாகவோ இருக்கலாம். இப்போது அந்த 5 வகையான பெருவிரல்களையும், அவை ஒவ்வொன்றும் ஒருவரைப் பற்றி என்ன சொல்கிறது என்பதையும் காண்போம்.
1. பெருவிரலின் மேல் பகுதி பெரியதாகவும், கீழ் பகுதி சிறியதாகவும் இருப்பது
உங்கள் கையின் பெருவிரல் இந்த மாதிரியான வடிவத்தைக் கொண்டிருந்தால், நீங்கள் அவ்வளவு எளிதில் திருப்தி அடையமாட்ர்கள். எப்போதும் உயரத்தில் இருக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். உங்களின் ஆசை அல்லது விருப்பமே உங்களின் குணாதிசயங்களில் நன்கு தெரியும். அமைதியாக இருக்கும் போது கூட, உங்கள் மனம் எதையாவது சாதிக்க துடித்துக் கொண்டிருக்கும்.
மேலும் நீங்கள் உங்கள் இலக்குகளை அடைவதில் வெறித்தனமாக இருப்பீர்கள். எந்த ஒரு காரியத்திலும் தான் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால் அப்படி அடையும் வெற்றியைக் கொண்டு பெருமிதம் கொள்ளமாட்டீர்கள். உங்கள் வெற்றிக்கு உதவியாக இருந்தவர்களுக்கு நன்றியுடன் இருப்பீர்கள்.
2. பெருவிரலின் கீழ் பகுதி பெரியதாகவும், மேல் பகுதி சிறியதாகவும் இருப்பது
உங்களின் கை பெருவிரல் இந்த வகையை சேர்ந்தது என்றால், நீங்கள் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர்கள். அதிக அக்கறை கொண்டவர்கள். வெறும் வாக்குறுதியை மட்டும் கொடுக்காமல், அதை நிறைவேற்றுபவரும் கூட. அதோடு உங்களின் குணாதிசயம் உங்களின் வாழ்வில் உள்ள சிறு விஷயங்களையும் மதிக்கும் வகையில் இருக்கும்.
சிறு விஷயங்களுக்கும் அதிகமாக மகிழ்ச்சி அடைவீர்கள். இந்த குணம் உங்களை மென்மையானவராக வெளிக்காட்டுகிறது. ஆனால் எவ்வளவு பெரிய இடத்திற்கு சென்றாலும், எங்கிருந்து வந்தோம் என்பதை மறவாமல் இருங்கள். உங்களின் கடமைகளை எப்போதும் நிறைவேற்றுங்கள். மொத்தத்தில் மிகப்பெரிய மற்றும் தாராள மனதைக் கொண்டிருப்பீர்கள்.
3. பெருவிரலின் இரண்டு பகுதிகளும் ஒரே அளவில் இருப்பது
உங்கள் பெருவிரலின் வடிவம் இந்த மாதிரி இருந்தால், நீங்கள் எதிலும் சமநிலையைத் தேடுவீர்கள். அனைவரையும் சமமாகவே நடத்துவீர்கள். ஒவ்வொரு தீமைக்குள்ளும், நீங்கள் ஒரு நல்லதைக் காண்பீர்கள்; ஒவ்வொரு அசிங்கத்திற்குள்ளும், நீங்கள் ஒரு அழகானதைக் காண்பீர்கள் மற்றும் ஒவ்வொரு பின்னடைவுக்கும், நீங்கள் வேறு வழியைக் காண்பீர்கள். அதிர்ஷ்டம், முயற்சி மூலம் நீங்கள் சமநிலையைக் கண்டறிந்து, பின்பற்றத் தகுந்த ஒருவராக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கை உடல், ஆன்மீகம் மற்றும் உணர்ச்சி இணக்கத்தை நோக்கி கட்டமைக்கப்படும்.
4. வளையக்கூடியது
உங்கள் கைபெருவிரல் வளையக்கூடியதாக இருந்தால், நீங்கள் மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு இருப்பீர்கள். இயற்கையாகவே நெகிழ்வான எண்ணங்களைக் கொண்டிருப்பீர்கள். மேலும் உங்களின் இலக்குகளை அடைய தேவையான நேரத்தில் இயல்புகளை மற்றும் திறன் கொண்டவர்கள். இது மிகவும் அரிதான ஒரு குணமாகும், ஏனெனில் இது மிகவும் கடினமான சூழ்நிலைகளில் கூட உயிர்வாழ்வதற்கான நல்ல திட்டத்தை வழங்கும்.
5. வளையாத பெருவிரல்
உங்களின் பெருவிரல் வளையாமல் நேராக இருக்குமா? அப்படியானால் நீங்கள் அதிக ஆதிக்கம் செலுத்தும் நபர். சற்று பிடிவாதமான குணத்தைக் கொண்டவர்கள். உங்களின் வாக்கில் உறுதியாக இருப்பீர்கள். யாருக்காகவும் உங்களின் இலக்குகளை மாற்றிக் கொள்ளமாட்டீர்கள். மிகவும் நம்பிக்கையானவர். அதிக விசுவாசத்தைக் கொண்டவர்கள். ஆனால் அந்த பிடிவாத குணம் நல்ல குணமாகும். ஏனெனில் நீங்கள் ஒரு விஷயத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள் என்றால், அதை நன்கு யோசித்து தான் எடுத்திருப்பீர்கள்.



Click it and Unblock the Notifications