Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இதுல உங்க நெற்றி எந்த மாதிரி-ன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ஒரு ரகசியத்தை சொல்றோம்...
Personality Test: பொதுவாக ஒருவரது குணாதிசயங்களை வெளிப்படுத்தும் பல விஷயங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் முகத்தைப் பார்த்து ஒருவரைப் பற்றி கூறுவது. சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, நமது முகத்தின் ஒவ்வொரு அம்சமும் ஒருவரது ஆளுமையைப் பற்றி வெளிப்படுத்துகிறது. குறிப்பாக ஒருவரது நெற்றியின் வடிவத்தைக் கொண்டே, அந்நபரின் குணாதிசயம் எப்படி இருக்கும் என்பதை அறியலாம்.
நீங்கள் உங்களின் ஆளுமையைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்களின் நெற்றியின் வடிவம் உங்கள் குணங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1. பெரிய நெற்றி
உங்களுடைய நெற்றி பெரியதாக இருந்தால், நீங்கள் புத்திசாலியாக இருக்க வாய்ப்புள்ளதாக சாமுத்ரிகா சாஸ்திரம் கூறுகிறது. மேலும் நீங்கள் சிறந்த பகுத்தறிவு திறன்களைக் கொண்டிருப்பீர்கள். இதனால் எந்த துறையில் இருந்தாலும், நீங்கள் வேகமாக முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பெரிய நெற்றியைக் கொண்டிருப்பவர்களுக்கு, உள்ளுணர்வு வலுவாக இருக்கும். அதாவது எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை கணிக்கும் ஆற்றல் இருக்கும். இத்தகையவர்கள் தங்கள் மனம் கூறுவதை கேட்டு நடந்தால், வெற்றி பெறுவார்கள்.
2. சிறிய நெற்றி
உங்களுடைய நெற்றி சிறியதாக இருந்தால், நீங்கள் உங்கள் மனம் சொல்வதைக் கேட்டு நடப்பீர்கள். சொந்தமாக ஒரு தொழிலை தொடங்க நினைத்தால், அணுகுமுறையில் உங்களுடன ஒத்துப்போனவர்களை மட்டுமே நண்பர்களாக்கி தொடங்குவீர்கள். நீங்கள் மற்றவர்கள் சொல்வது போல் நடக்க விரும்பமாட்டீர்கள். உங்களுக்கு பிடித்தவாறு மட்டுமே வாழ விரும்புவீர்கள்.
3. வளைந்த நெற்றி
உங்களின் நெற்றி வளைந்து காணப்படுகிறதா? அப்படியானால் நீங்கள் அமைதியானவர் மற்றும் அதிக தன்னம்பிக்கையைக் கொண்டிருப்பீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். எப்போதும் நேர்மறையாக பேசி மற்றவர்களை ஊக்குவிப்பீர்கள். இதுவே அனைவருக்கும் உங்களைப் பிடிக்க முக்கிய காரணமாகும். உங்களின் அமைதியான குணம் தான் கடினமான சூழ்நிலைகளைக் கூட எளிதில் கடந்து வர உதவியாக உள்ளது.
4. M வடிவ நெற்றி
உங்களின் நெற்றி M வடிவத்தில் காணப்படுகிறதா? அப்படியானால் நீங்கள் ஏதேனும் ஒரு கலை மூலம் உங்களை வெளிப்படுத்த விரும்புவீர்கள். பல்துறை திறன் கொண்டவர்கள். நல்ல கற்பனை மற்றும் படைப்பாற்றலைக் கொண்டிருப்பீர்கள். இதனால் நீங்கள் வேலை செய்யும் துறைகளில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மிகவும் மகிழ்ச்சியான நபர். அன்பானவர்கள். மனதில் பகையை வைத்து யாருடனும் நடக்கமாட்டீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications