Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
இதுல உங்க பெருவிரல் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்களோட உண்மையான குணத்தை சொல்றோம்...
Thumb Shape And Personality: ஒருவரது குணாதிசயங்களை பலவாறு அறியலாம். அதுவும் ஒருவரது அதிர்ஷ்டத்தை அந்நபரின் பெருவிரலின் வடிவத்தைக் கொண்டே கணிக்க முடியும். அதோடு அந்நபரின் குணாதிசயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இந்திய ஜோதிடத்தின் ஒரு பகுதியான சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, ஒவ்வொருவரும் வெவ்வேறு கை வடிவம் மற்றும் அமைப்புடன் பிறக்கிறார்கள். இதனால் ஒருவரது கைகளே அந்நபரின் குணாதிசயங்களைப் பற்றி நிறைய கூறும்.
குறிப்பாக ஒருவரது பெருவிரலின் மேல் மற்றும் கீழ் பகுதியும் அந்நபரின் சக்தியைப் பற்றி நிறைய சொல்வதாக ஜோதிடம் கூறுகிறது. அதுவும் பெருவிரலின் மேல் பகுதி கீழ் பகுதியை விட பெரியதாக இருந்தால், அந்நபர் வலிமையானவர். அதேப்போல் பெருவிரலின் கீழ் பகுதியை விட மேல் பகுதி சிறியதாக இருந்தால், அந்நபரிடம் சிறந்த பகுத்தறியும் ஆற்றல் இருக்கும். ஒருவேளை இரண்டும் சமமாக இருந்தால், அந்நபர் வாழ்க்கையில் மகத்தான வெற்றியைப் பெறுவார்.

ஒருவரது பெருவிரலின் அளவு மட்டுமின்றி, பெருவிரலின் அமைப்பும் அந்நபரின் சுவாரஸ்யமான குணாதிசயங்களை வெளிப்படுத்தும். நீங்கள் உங்களின் சுவாரஸ்யமான குணம் என்னவென்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் பெருவிரல் நேராக உள்ளதா அல்லது வளைந்து உள்ளதா என்று பார்த்து, உங்களைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நேரான பெருவிரல்
உங்களின் பெருவிரல் நேராக இருந்தால் மற்றும் வளைத்தாலும் வளையாமல் இருந்தால், நீங்கள் எதையும் நன்கு பகுத்தறியும் ஆற்றலைக் கொண்டிருப்பீர்கள். சற்று அதிகார உணர்வை வெளிப்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பீர்கள். உங்களை அவ்வளவு எளிதில் யாராலும் ஏமாற்ற முடியாது.
நீங்கள் நம்பும் வரை, எவராலும் உங்களை பயன்படுத்திக் கொள்ள முடியாது. உங்கள் நம்பிக்கையைப் பெறுவது என்பது சற்று கடினம். எப்போதும் விழிப்புடன் இருப்பீர்கள். ஆபத்து வருவதற்கு முன்பே அதை உணர்வீர்கள். எவ்வளவு கடினமான சூழலாக இருந்தாலும், கனிவாக இருப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர். ஒழுக்கம் மற்றும் எதையும் சரியாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர். முக்கியமாக மன உறுதியுடன் இருப்பீர்கள்.
வளைந்த பெருவிரல்
உங்களின் பெருவிரல் வளைந்து இருந்தால், நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். புதிய சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை எளிதில் மாற்றிக் கொள்வீரகள். மற்றவர்கள் மீது விரைவில் அனுதாபம் காட்டுவீர்கள். இதனால் மற்றவர்கள் உங்கள் உணர்ச்சிகளை பயன்படுத்தி தங்கள் வேலைகளை எளிதில் நிறைவேற்றிக் கொள்வார்கள். வளைந்த பெருவிரலைக் கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கையை விட உறவுகளுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பீர்கள். சுய பாதுகாப்பு தொடர்பான உணர்ச்சி நுண்ணறிவை வளர்த்துக் கொள்ள அதிக நேரம் எடுக்கும்.
மேலும் இப்படியான பெருவிரலைக் கொண்டிருந்தால் இலக்குகளை அடைய வழக்கத்திற்கு மாறான பாதைகளை அடிக்கடி தேர்ந்தெடுப்பீர்கள். உங்களுக்கு கலை, நடிப்பு, நாடகம், சாகச விளையாட்டுகள் போன்ற தங்களின் திறமையை வெளிப்படுத்தும் தொழில்கள் மிகவும் பொருத்தமானவையாக இருக்கும். உங்களிடம் உள்ள ஒரு குறைபாடு என்றால், அது அதிகப்படியான நெகிழ்வுத்தன்மை மற்றும் சுய சந்தேகம் தான்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications