Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இதுல உங்க புருவம் எந்த மாதிரி-ன்னு சொல்லுங்க.. உங்களோட சுவாரஸ்யமான குணத்தை சொல்றோம்..
Eyebrow Shape Personality Test: நமது உடலின் கண், காது, மூக்கு, கைவிரல்கள் போன்றவை ஒருவரது குணாதிசயங்களைப் பற்றி வெளிப்படுத்தும் என்று சொன்னால் நம்புவீர்களா? அதுவும் உங்கள் புருவங்களின் அமைப்பு உங்களின் குணங்களைப் பற்றி கூறும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால் ஒருவரது புருவங்களின் வடிவத்திற்கும், ஆளுமைக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான புருவங்கள் இருக்கும். அதில் சிலருக்கு புருவங்கள் வளைந்து இருக்கும், இன்னும் சிலருக்கு நேராக இருக்கும். உங்களின் புருவங்கள் எந்த வடிவத்தில் உள்ளதோ, அது உங்களின் சுவாரஸ்யமான குணாதிசயங்களை வெளிப்படுத்தும். அதாவது நீங்கள் கோபக்காரரா, அதிகம் உணர்ச்சிவசப்படுபவரா, புத்திசாலியா, பக்குவமானவரா என்பதைப் பற்றி கூறும். இது தவிர நீங்கள் மற்றவர்களிடம் எப்படி பழகுவீர்கள் என்பதையும் கூறும்.

நீங்கள் உங்கள் புருவ வடிவம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த ஆளுமை சோதனையை படித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த சோதனையில் உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத சில விஷயங்களையும் நீங்கள் அறியலாம்.
நேரான புருவம்
உங்கள் புருவம் நேராக குச்சி போன்று நீண்டுள்ளதா? அப்படியானால் நீங்கள் விவேகமானவர். எப்போதும் எந்த ஒரு விஷயத்திலும் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காமல், நன்கு யோசித்து எந்த முடிவையும் எடுப்பீர்கள். அதிகம் உணர்ச்சிவசப்படமாட்டீர்கள்.
எந்த ஒரு தருணத்திலும் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்கமாட்டீர்கள். இப்படியான குணத்தைக் கொண்டிருப்பதால் தான், பணியிடத்திலும், வியாபாரத்திலும் உங்களால் பல வெற்றிகளை குவிக்க முடிகிறது. வேலையில் உள்ள பிரச்சனையை எப்போதும் வீட்டில் காண்பிக்கமாட்டீர்கள். தொழில் வாழ்க்கையையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் பிரித்தே பார்ப்பீர்கள்.
வளைந்த புருவம்
உங்களின் புருவம் வில் போன்று வளைந்து இருந்தால், உங்களிடம் தலைமைப் பண்பு அதிகமாக இருக்கும். மிகவும் துணிச்சலானவர்கள் மற்றும் லட்சியவாதிகள். ஒரு இடத்தில் நடக்கும் தவறை, சற்றும் அஞ்சாமல் உடனே அதை சுட்டிக்காட்டி பேசுவீர்கள். அடுத்தவர்களின் கவனத்தை ஈர்க்க மிகவும் ஆர்வமாக இருப்பீர்கள். சற்று பொறுமையற்றவர்கள்.
உங்கள் பேச்சு எப்போதும் மற்றவர்களை ஈர்க்கும் வண்ணம் இருப்பதால், எந்நேரமும் உங்களைச் சுற்றி நண்பர்கள் இருப்பார்கள். உங்களின் வெளித்தோற்றம் சற்று திமிர்பிடித்தவர்கள் போன்று வெளிக்காட்டும். யாருடனும் அவ்வளவு எளிதில் பழகமாட்டீர்கள். அதேப் போல் யாரையும் அவ்வளவு சீக்கிரம் நண்பராக ஏற்றுக் கொள்ளமாட்டீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications