Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
ஆண்களே! நீங்க பிறந்த மாசம் என்னன்னு சொல்லுங்க... நீங்க உண்மையில் எப்படிப்பட்ட ஆளா இருப்பீங்க-ன்னு சொல்றோம்...
Birth Month And Personality Of Men: ஒவ்வொருவரின் பிறந்த நாளும் அந்நபருக்கு மிகவும் சிறப்பான மற்றும் மகிழ்ச்சியான நாளாகும். ஏனெனில் இந்நாளில் அனைவரும் அன்பை பொழிவார்கள். அதுவும் ஒருவரது பிறந்த நாள் மட்டுமின்றி, பிறந்த மாதமும் அந்நபருக்கு சற்று ஸ்பெஷல் தான். குறிப்பாக ஒருவரது பிறந்த மாதம் அந்நபரின் எதிர்காலம், அவரது குணாதியங்களை வெளிப்படுத்தும் என்பது தெரியுமா?
அதுவும் ஒவ்வொரு மாதத்தில் பிறந்த பெண்கள் மற்றும் ஆண்களின் குணாதியங்கள் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இப்போது ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான மாதத்தில் பிறந்த ஆண்களின் குணாதிசயங்கள் உண்மையில் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

ஜனவரி
ஜனவரி மாதத்தில் பிறந்த ஆண்களின் ஆளுமை சற்று கவர்ச்சிகரமாக இருக்கும். தொழில் மற்றும் தனிப்பட்ட உறவில், இவர்கள் எப்போதும் மற்றவர்கள் மீது தங்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்த விரும்புவார்கள். இந்த மாதத்தில் பிறந்த ஆண்களை நிறைய பேர் திமிர்பிடித்தவர்களாக கருதுவார்கள். இதற்கு காரணம், இவர்கள் முதல் சந்திப்பில் யாரிடமும் மனம் திறந்து பேசமாட்டார்கள். ஆனால் நண்பராகிவிட்டால், சிறந்த நண்பர் என்பதை நிரூபிப்பார்கள்.
பிப்ரவரி
பிப்ரவரி மாதத்தில் பிறந்த ஆண்கள் மிகவும் ரகசியமானவர்கள், நட்பானவர்கள் மற்றும் பேசுவதை காது கொடுத்து கேட்கக்கூடியவர். ஆனால் இவர்களுக்கு பணத்தை எப்படி திறம்பட சேமிப்பது என்பது தெரியாது. பேச்சால் எப்படி மற்றவர்களை கவர்வது என்பது நன்கு தெரியும். இந்த ஆண்கள் அமைதியான சூழலில் வேலை செய்ய விரும்புவார்கள். உதவி செய்யும் குணம் கொண்டவர்கள். இவர்கள் விரைவில் நண்பர்களை உருவாக்கமாட்டார்கள். ஆனால் இந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் அழகாக இருப்பார்கள்.
மார்ச்
மார்ச் மாதத்தில் பிறந்த ஆண்கள் அதிகம் பயணம் செய்ய விரும்புவார்கள். ஆனால் இவர்களுக்கு நட்பு வட்டம் சிறியது. நன்கு பேசக்கூடியவர்கள். நட்பு மற்றும் தனிப்பட்ட உறவுகளைப் பேணுவதில் சிறந்து விளங்குவார்கள். இந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் பொறுப்பானவர்கள். எங்கிருந்தும் அறிவை சேகரிக்க விரும்புகிறார்கள். இவர்கள் ஒருபோதும் மற்றவர்களை ஏமாற்றமாட்டார்கள்.
ஏப்ரல்
ஏப்ரல் மாதத்தில் பிறந்த ஆண்கள் பிடிவாதமாக இருப்பார்கள். அழகானவர்கள் மற்றும் மகிழ்ச்சியான இயல்புடையவர்கள். இவர்களுக்கு காதலை தங்கள் துணையிடம் எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாது. ஆனால் இவர்கள் காதலில் இருந்தால் அதை சுற்றியுள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் புரிந்து கொள்வார்கள்.
மே
மே மாதத்தில் பிறந்த ஆண்கள் அழகாகவும், அறிவானவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் எப்போதும் ஆடம்பர வாழ்க்கை வாழ முயற்சிப்பர். இதனால் எதிலும் ஆடம்பரத்தை எதிர்பார்ப்பார்கள். இவர்கள் ஒருவருக்கு கீழ் வேலை செய்ய விரும்பமாட்டார்கள். மாறாக முதலாளியாக இருக்க விரும்புவார்கள்.
ஜூன்
ஜூன் மாதத்தில் பிறந்த ஆண்கள் மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள். அதிகம் எரிச்சலடைவார்கள். கடின உழைப்பாளிகளாக இருப்பர். இளம் வயதிலேயே உயர் பதவிகளை அடையும் திறனைக் கொண்டிருப்பார்கள். தோற்றத்தில் அப்பாவியாக தெரிவார்கள். ஆனால் உண்மையில் கடுமையானவர்கள். யாரிடமும் உதவி கேட்க தயங்கமாட்டார்கள் மற்றும் மற்றவருக்கு உதவமும் தயங்கமாட்டார்கள்.
ஜூலை
ஜூலை மாதத்தில் பிறந்த ஆண்களை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். இவர்கள் இரட்டை ஆளுமையை கொண்டிருப்பார்கள். சில சமயங்களில் புத்திசாலி போன்றும், சில நேரங்களில் பைத்தியம் போன்றும் நடந்து கொள்வார்கள். இவர்கள் ஒவ்வொரு சிறிய, பெரிய விஷயத்திலும் அதிக கவனம் செலுத்துவார்கள்.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த ஆண்களுக்கு பொய் சொல்வது என்பது பிடிக்காது. இவர்கள் அதிகமாக கலகலப்பாக பேசுவார்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் தைரியசாலிகள். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் மற்றும் எப்போதும் சந்தோஷத்தை மட்டுமே பகிர்ந்து கொள்வார்கள். இவர்கள் 25 வயதிற்கு பின் தனியாக வாழ விரும்புவார்கள். படிப்பில் ஆர்வம் அதிகம் கொண்டவர்கள்.
செப்டம்பர்
செப்டம்பர் மாதத்தில் பிறந்த ஆண்களுக்கு வயதிற்கு ஏற்ற மெசூரிட்டி சற்று குறைவாக இருக்கும். எப்போதும் மாற்றத்தை விரும்புவார்கள். எதையும் வேகமாக கற்றுக் கொள்வார்கள். இவர்கள் ரகசியங்களை யாரிடமும் கூறமாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் பெரிய உயரங்களை அடைவார்கள்.
அக்டோபர்
அக்டோபர் மாதத்தில் பிறந்த ஆண்கள் புத்திசாலிகள் மற்றும் பண மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களுக்கு பணம் தான் முக்கியம். இவர்கள் தங்களுக்கு என்று தனி ஸ்டைலைக் கொண்டிருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் பெண்களை விரைவில் ஈர்ப்பார்கள். நிதி சார்ந்த முடிவுகளை எடுப்பதில் சற்று பலவீனமானவர்கள். இவர்கள் காதலில் பலமுறை ஏமாற்றப்படுவார்கள்.
நவம்பர்
நவம்பர் மாதத்தில் பிறந்த ஆண்கள் மிகவும் இனிமையானவர்கள். ஆனால் இவர்களால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது. இந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் தங்கள் வாக்குறுதிகளில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். நிதி ரீதியாக மிகவும் வலிமையானவர்கள். இவர்களின் உள்ளுணர்வு வியக்க வைக்கும் வகையில் இருக்கும்.
டிசம்பர்
டிசம்பர் மாதத்தில் பிறந்த ஆண்கள் மிகவும் சென்சிடிவ்வானவர்கள். இவர்கள் நண்பர்களை அதிகம் விரும்புவார்கள். மற்றவர்களுக்கு தவறு நடப்பதை விரும்பமாட்டார்கள். உடனே அதை தட்டிக் கேட்கவும் செய்வார்கள். இவர்கள் மற்றவர்களை எளிதில் நம்புவார்கள். இதனால் மற்றவர்களால் எளிதில் ஏமாற்றப்படுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











