Latest Updates
-
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்...
ஆகஸ்ட் மாதம் பிறந்தவரா நீங்க? அப்ப உங்களுக்குள் இருக்கும் நல்ல மற்றும் ஆபத்தான குணங்கள் என்ன தெரியுமா?
மக்களின் நடத்தையைப் பொறுத்தவரை, பிறந்த மாதம் ஒருவரின் ஆளுமையில் சில தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இதுவே பொருந்தும். இந்த மக்கள் பொதுவாக சூரியன் மற்றும் சந்திரனால் ஆளப்படுகிறார்கள், இது அவர்களை தனித்துவமாகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் ஆக்குகிறது.
சூரியன் போன்ற அவர்களின் ஆற்றலும், வசீகரமும் அவர்களை எப்போதும் தனித்துவமானவர்களாக மாற்றுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களை மிகவும் சிறப்பானவர்களாக மாற்றும் குணங்கள் என்ன மற்றும் அவர்களை ஆபத்தானவர்களாக மாற்றும் குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தன்னம்பிக்கை வாய்ந்தவர்கள்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் பொதுவாக மிகவும் நம்பிக்கையுடன் இருப்பார்கள். அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வலிமையானவர்கள், மேலும் வலுவான விருப்பம், பெருமை, விசுவாசம் மற்றும் தைரியம் நிறைந்தவர்கள்.
அவர்கள் சற்று வெளிப்படையாக பேசுபவர்கள் மற்றும் கவனத்தின் மையமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். உங்கள் குழந்தை ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவராக இருந்தால், நீங்கள் அவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
சிறந்த தலைவர்களாக இருப்பார்கள்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கை கொண்டவர்கள், ஒழுங்கமைக்கப்பட்டவர்கள் மற்றும் எதார்த்தமானவர்கள். இவையே ஒரு நல்ல தலைவனின் அடிப்படை குணங்கள்.
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் ஒரு பெரிய நிறுவனத்தில் தலைவராகவோ அல்லது மேலாளராகவோ வளர்ந்தால், ஆச்சரியப்பட வேண்டாம், ஏனென்றால் அவருடைய கடின உழைப்பு மற்றும் குணங்கள் காரணமாக அவர் அந்த நிலையில் இருப்பார்.
தனியுரிமையை விரும்புகிறார்கள்
அனைவருமே தங்கள் வாழ்க்கையில் தனியுரிமையை விரும்புகிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் அதனை அதிகம் விரும்புகிறார்கள். சில சமயங்களில் அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட நேரத்தையும் தனிமையில் இருக்கவும் ஏங்குகிறார்கள்.
அது அவர்களின் தனிப்பட்ட இடமாக இருந்தாலும் சரி அல்லது தொழில் சார்ந்த இடமாக இருந்தாலும் சரி, அவர்களின் தனிப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்க யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் ரகசியங்களை மிகவும் தனிப்பட்டதாக வைத்திருக்க விரும்புகிறார்கள். எல்லோருடனும் பழகினாலும், எல்லோரையும் அவ்வளவு எளிதில் நம்ப மாட்டார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரிடம் மட்டுமே நம்பிக்கை வைக்கிறார்கள்.
அவர்களை எளிதில் ஈர்க்க முடியாது
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் ஸ்பெஷலானவர்கள் மற்றும் அனைத்து விஷயத்திலும் உயர் தரங்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் துணையை தேர்ந்தெடுக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள்.
அவர்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளத் தொடங்கும் முன் அவர்களை சிறப்பாக உணர வைக்க வேண்டும். அவர்களின் உயர்ந்த ரசனை காரணமாக, எல்லோரும் அவர்களின் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியாது.
பிடிவாதக்காரர்கள்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் உள்ளுணர்வு மற்றும் மக்களைப் படிப்பதில் சிறந்தவர்கள், ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களின் கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை என்று அவர்கள் நினைக்கிறார்கள், மேலும் ஆச்சரியப்படும் விதமாக, அவர்கள் பெரும்பாலும் சரியானவர்களாக இருப்பார்கள். மக்கள் தங்கள் உணர்ச்சிகரமான பக்கத்தைப் பார்ப்பதைத் தடுக்க அவர்கள் தங்கள் பெருமையைப் பாதுகாக்க முனைகிறார்கள்.
எப்போதும் ஸ்பாட்லைட்டில் இருக்க விரும்புகிறார்கள்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த உங்கள் நண்பர் கவனத்தை ஏன் மிகவும் விரும்புகிறார் என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? அது அவர்களின் ஆளுமைப் பண்புகளில் ஒன்றாகும். அவர்களின் கவர்ச்சியும் வசீகரமான ஆளுமையும் அவர்களை பொழுதுபோக்குத் துறையில் பெயரையும் புகழையும் பெற வைக்கிறது. அவர்களின் புகழை மற்றவர்கள் திருடுவதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.
பணத்தை வீணாக்குவதை பொறுத்துக்கொள்ள முடியாது
பணத்தை விரயம் செய்வது அல்லது ஊதாரித்தனமாக செலவு செய்வதை ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் விரும்புவதில்லை. பணத்தை வீணடித்து தேவையில்லாத பொருட்களை வாங்குபவர்களை அவர்கள் வெறுக்கிறார்கள்.
இந்த நபர்கள் நிதியைக் கையாள்வதில் மிகச் சிறந்தவர்கள், மேலும் நீங்கள் அவர்களை கடனில் சிக்க வைப்பதில்லை. எதிர்காலத்திற்காக பணத்தை எவ்வாறு சேமிப்பது என்பது அவர்களுக்குத் தெரியும், மேலும் அவர்கள் மற்றவர்களிடம் கடன் வாங்குவதை நீங்கள் அரிதாகவே காணலாம்.
எளிதில் கோபமடைவார்கள்
நீங்கள் முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்பவராகவும், குழந்தைத்தனமாக நடந்து கொள்பவராகவும் இருந்தால் ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் உங்கள் மீது எளிதில் கோபம் கொள்வார்கள். ஏனென்றால், ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் இது போன்ற விஷயங்களை விரும்ப மாட்டார்கள்.
சில சமயங்களில் அவர்கள் சிறிய விஷயங்களுக்கு கூட எரிச்சல் அடையலாம். அவர்கள் தங்கள் கோபத்தையும், எரிச்சலையும் வெளிப்படுத்த ஒருபோதும் தயங்க மாட்டார்கள்.



Click it and Unblock the Notifications












