Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
வியாழக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி இருக்குமாம் தெரியுமா? உங்க வீட்ல யாராவது இருக்காங்களா?
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள் கடவுள்களாக கருதப்படுகின்றன. அவர்கள் ஒருவரின் வாழ்க்கையில் வழிகாட்டும் சக்திகளாகக் கருதப்படுகின்றன.
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள் கடவுள்களாக கருதப்படுகின்றன. அவர்கள் ஒருவரின் வாழ்க்கையில் வழிகாட்டும் சக்திகளாகக் கருதப்படுகின்றன. வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தால் ஆளப்படுகிறது. வியாழன் அதிர்ஷ்டத்தின் கிரகமான வியாழனுக்கு சொந்தமானது.
வியாழன் வளர்ச்சி, செழிப்பு, நம்பிக்கை, விரிவாக்கம், மகிழ்ச்சி மற்றும் நகைச்சுவை போன்ற வாழ்க்கையின் முக்கிய அம்சங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது.

குருபகவான் ஒருவருக்கு புத்திசாலித்தனம், ஞானம், ஆன்மீகம் மற்றும் அதிகாரம் ஆகியவற்றை வரமளிக்கிறார். வியாழக்கிழமை பிறந்தவர்களின் ஆளுமை எப்படிப்பட்டதாக இருக்கும் என்று பார்க்கலாம்.
வியாழக்கிழமை பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்?
வாரத்தின் ஐந்தாம் நாளான வியாழன் செல்வாக்கு மிக்க கிரகமான வியாழனால் ஆளப்படுகிறது, எனவே அந்த நாளில் பிறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். நீங்கள் வியாழக்கிழமையில் பிறந்திருந்தால் மகிழ்ச்சி, நம்பிக்கை, முன்னேற்றம் மற்றும் வசீகரம் போன்ற குணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள், மேலும் அதனை அடைவார்கள். சில சமயங்களில் அவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாக நேரிட்டாலும், விரைவில் அதிலிருந்து வெளிவருவார்கள். மேலும், வியாழன் புத்திசாலித்தனத்தின் கிரகமாகும், எனவே வியாழன் அன்று பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள எப்போதும் ஞானத்தைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஒரு நல்ல ஆலோசகர் அல்லது வழிகாட்டியாக இருக்கலாம்.
தொழில் நிலை எப்படி இருக்கும்?
வியாழக்கிழமை பிறந்தவர்கள் பொதுவாக தலைமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே அவர்கள் தங்கள் குழு உறுப்பினர்களுக்கு அதிக மரியாதை கொடுப்பார்கள். அவர்களிடம் இருக்கும் சிறந்த குணங்களில் ஒன்று, தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கைக்கு இடையில் சமநிலையை எவ்வாறு கடைபிடிப்பது என்பது அவர்களுக்குத் தெரியும். வியாழன் அன்று பிறந்தவர்களுக்கு மார்க்கெட்டிங், அரசியல், நிர்வாகம், கற்பித்தல், ஆலோசனை மற்றும் விற்பனை ஆகியவை சிறந்த தொழில் துறைகளாகும். வியாழன் அன்று பிறந்தவர்கள் தங்கள் வழக்கமான வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் செய்யும் ஒரே மாதிரியான வேலை செய்வதால் எளிதில் சலிப்படையலாம், எனவே அவர்கள் அடிக்கடி வேலையை மாற்றுவார்கள்.
காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?
காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, வியாழக்கிழமை பிறந்தவர்கள் மிகவும் வெளிப்படையானவர்களாக இருப்பார்கள், அவர்கள் காதலை ஒருபோதும் வெளிப்படுத்த தயங்க மாட்டார்கள். எதிரில் இருப்பவர்களின் சூழ்நிலைகளை கருத்தில் கொள்ளாமல் தங்கள் மனதில் பட்டதை உடனடியாக பேசுவார்கள். அவர்களின் இந்த பழக்கம் சில நேரங்களில் உங்களை ஒரு கடினமான சூழ்நிலையில் வைக்கிறது. அவர்கள் தீவிரமாக மற்றும் உண்மையாக காதலித்தாலும், அவர்கள் எளிதில் சலிப்படையலாம். எனவே அவர்கள் அவர்களைப் போலவே சாகச குணம் கொண்டவர்களை காதலித்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை வியாழக்கிழமை பிறந்தவர்கள் அதிக உணர்ச்சிவசப்படுபவர்கள். எப்போதும் சர்ப்ரைஸையும், சாகசத்தையும் விரும்பும் அவர்கள் அவர்களைப் போலவ் சிந்திக்கும் துணையை விரும்புகிறார்கள். தங்கள் துணையை ஒவ்வொரு நாளும் சிறப்பாக உணர வைக்க தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள். சில தருணங்களில் அவர்களின் கட்டுப்பாடற்ற வார்த்தைகள் அவர்களின் திருமண வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தலாம். எனவே அவர்களுக்கு வார்த்தைகளில் கட்டுப்பாடு தேவை.
ஆரோக்கியம் எப்படி இருக்கும்?
குருபகவானின் அருளால் வியாழக்கிழமை பிறந்தவர்கள் நல்ல ஆரோக்கியத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் தங்கள் உடல் எடையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் ஜாதகத்தில் ஒருவேளை வியாழன் தவறான இடத்தில் இருந்தால் உடல் பருமன், அமிலத்தன்மை மற்றும் வயிறு தொடர்பான சிக்கல்களால் பாதிக்கப்படலாம். அவர்கள் தங்களின் உணவு மற்றும் குடிப்பழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
அதிர்ஷ்ட எண் மற்றும் நிறம்
வியாழக்கிழமை பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்ணாக 3 இருக்கும். முக்கியமான நிகழ்வுகளை இந்த நாளில் திட்டமிடுவது அவர்களுக்கு வெற்றியைத் தரும். மேலும் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அவர்களுக்கு அதிர்ஷ்டமான நிறமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











