Latest Updates
-
அவல் குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல நேரம் தேடிவரப்போகுதாம் -
ஜூலை 24-ல் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இந்த 3 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது.. -
Aadi Month Horoscope 2026:ஆடி மாதம் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் மாதமாக இருக்கப்போகுதாம் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் செட்டிநாடு மஞ்சள் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப சுய ஒழுக்கமுள்ளவர்களாம் - வெற்றியும், செல்வமும் இவர்களை தேடிவருமாம் - உங்க ராசி என்ன -
Aadi 2026: ஆடி முதல் நாளில் அம்மன் வழிபாடு செய்வது எப்படி? - விளக்கும் தேச மங்கையர்கரசி! -
முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் நேபாளத்தின் மீது படையெடுக்க ஏன் பயந்தார்கள் தெரியுமா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க... -
இந்தியாவில் நாம் பயன்படுத்தும் இந்த எண்ணெய் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டதாம் - காரணம் என்ன தெரியுமா?
உங்க பெயர் இந்த 5 எழுத்துல ஆரம்பிக்குதா? அப்ப நீங்க ரொம்பவும் அதிர்ஷ்டசாலி.. பணக்காரராக வாய்ப்பிருக்காம்...
ஜோதிடத்தின் படி, ஒருவரது எதிர்காலத்தை அவர் பிறந்த தேதி மற்றும் நேரத்தைப் பொறுத்து தெரிந்து கொள்ள முடியும். அதேப் போல் ஒருவரது பெயரின் முதல் எழுத்தைக் கொண்டும் அறிந்து கொள்ள முடியும் என்பதை தெரியுமா?
ஆம், பெயர் ஜோதிடத்தின் படி, ஒருரவது பெயரின் முதல் எழுத்தைக் கொண்டு அந்நபரின் எதிர்காலத்தை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும். ஏனெனில் ஒருவரது பெயரானது அந்நபரின் நிதி, முன்னேற்றம், ஆரோக்கியம், மனநிலை ஆகியவற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அதிலும் பெயர் ஜோதிடத்தைப் பொறுத்தவரை முதல் எழுந்தானது மிகவும் முக்கியமானது. ஆங்கிலத்தில் மொத்தம் 26 எழுத்துக்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான பலன்களைக் கொண்டவை.
இப்போது எந்த எழுத்துக்களைக் கொண்டவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்பதைக் காண்போம். உங்கள் பெயரின் முதல் எழுத்தும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
C - என்ற எழுத்து
உங்கள் பெயரின் முதல் எழுத்து C என்று ஆரம்பிக்குமானால், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இவர்களுக்கு எப்போதும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் இவர்கள் வெற்றி காண்பார்கள். இவர்களது வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். முக்கியமாக தொழில் ரீதியாக இவர்களை யாராலும் வீழ்த்த முடியாது. வாழ்வில் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள்.
D - என்ற எழுத்து
உங்கள் பெயரின் முதல் எழுத்து D என்று ஆரம்பிக்குமா? அப்படியானால் நீங்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் மிகுந்த ஆர்வத்துடன் செய்வதோடு, கற்றுக் கொள்வதிலும் சிறந்தவர்கள். இவர்கள் ஒரு வேலையை எடுத்தால், அதை முடிக்காமல் ஓயமாட்டார்கள். இவர்களுக்கு எப்போதும் சரஸ்வதி மற்றும் லட்சுமி தேவியின் ஆசி இருக்கும். இவர்கள் நேரத்தை தேவையில்லாத விஷயங்களுக்கு செலவழிக்கமாட்டார்கள். இவர்களின் நோக்கம் எப்போதும் இலக்கை அடைவதாகவே இருக்கும். எப்போதும் பெரிதாக சாதிக்க நினைப்பதோடு, வெற்றியும் காண்பார்கள்.
P - என்ற எழுத்து
உங்கள் பெயர் P என்ற எழுத்தில் ஆரம்பிக்குமா?அப்படியானால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் எப்போதும் அதிக முயற்சிகளை மேற்கொள்ளாமல் வெற்றி காண்பார்கள். இவர்கள் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருப்பார்கள். எந்த ஒரு காரியத்திலும் இவர்களே வெற்றி பெறுவார்கள். முக்கியமாக இவர்களைத் தேடி எப்போதும் பணம் வந்தவாறு இருக்கும்.
R - என்ற எழுத்து
R - என்ற எழுத்தில் பெயரைக் கொண்டவர்கள் எப்போதும் அனைவராலும் விரும்பக்கூடியவாறு இருப்பார்கள். இவர்கள் தங்களின் கடின உழைப்பால் தங்கள் இலக்கை அடைவார்கள் மற்றும் நல்ல முன்னேற்றத்தையும் காண்பார்கள். எப்பேற்பட்ட சூழ்நிலையையும் எளிதில் சமாளிப்பார்கள். இவர்களுக்கு உதவி செய்ய அனைவரும் முன்வருவார்கள். அதே சமயம் இவர்களும் மற்றவர்களுக்கு உதவ சற்றும் தயங்கமாட்டார்கள். இவர்களின் கையில் எப்போதும் பணம் அதிகம் புரளும்.
S - என்ற எழுத்து
உங்கள் பெயர் S என்ற எழுத்தில் தொடங்குகிறதா? அப்படியானால் இவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றி காண நிறைய போராடுவார்கள். அதே சமயம் அந்த போராட்டத்தால் தங்கள் இலக்கையும் அடைவார்கள். இந்த எழுத்தில் பெயரைக் கொண்டவர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருப்பர். எப்போது தனது வெற்றியை குடும்பத்துடன் பகிர்ந்து கொள்வார்கள். இவர்கள் தங்கள் கனவை நிறைவேற்ற எந்த முயற்சியையும் எடுக்காவிட்டாலும், அதிர்ஷ்டத்தின் ஆதரவால் தனது கனவை அடைவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications