Latest Updates
-
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்
இந்த 3 தேதிகளில் பிறந்தவங்க வாழ்க்கைய விட்டு துரதிர்ஷ்டம் எப்பவும் போகாதாம்... ரொம்ப பாவம் இவங்க...!
People Who Born in These Dates Are Unlucky: நியூமராலஜியின் படி ஒவ்வொரு தேதிக்கும் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் உள்ளது. அதன்படி அனைத்து எண்களும் அதிர்ஷ்டமானவையாக இருக்காது. சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் பெரும்பாலும் துரதிர்ஷ்டம் மற்றும் கடினமான சூழ்நிலையை அனுபவிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
எனவே அவர்களின் உணர்ச்சிகரமான மனநிலை ஒரு நபரை மேலும் துரதிர்ஷ்டவசமாக ஆக்குகிறது. நியூமராலஜியின் அடிப்படையில், இந்த பிறந்த தேதிகளில் சில அவர்களின் பெற்றோருக்கு மிகவும் தொந்தரவாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் தங்கள் குடும்பங்களுக்கு பிரச்சனைகளை கொண்டு வருகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்களுக்குள் இருக்கும் துரதிர்ஷ்டமும், மோசமான குணமும்தான். எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்கள் இப்படி துரதிர்ஷ்டம் நிறைந்தவர்களாக இருப்பார்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பிறந்த தேதி 14
14 ஆம் தேதி பிறந்தவர்கள் பெற்றோருக்கு அடிக்கடி பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். இந்த தேதியில் பிறந்தவர்கள் இதயத்தில் அதிக வெறுப்பைக் கொண்டுள்ளார்கள். மன அமைதியைக் கண்டறிவதில் அவர்களுக்குச் சிக்கல் இருப்பதில் ஆச்சரியமில்லை.
இந்த தேதியில் பிறந்தவர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. அவர்களின் விரும்பத்தகாத ஆளுமை காரணமாக, அவர்களுக்கு பல எதிரிகள் உருவாக வாய்ப்புள்ளது. நியூமராலஜி படி இந்த பிறந்த தேதி மிகவும் துரதிர்ஷ்டவசமாக கருதப்படுகிறது.
பிறந்த தேதி 4
4 ஆம் தேதி பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் அதிக துரதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள். அவர்களுக்கு சிறிய அதிர்ஷ்டம் உள்ளது, அதனால் அவர்கள் வாழ்க்கையில் பல ஆபத்துகளில் இருந்து தப்பித்துக் கொள்வார்கள். 4 ஆம் தேதியில் பிறந்தவர்களின், சிக்கலான, உணர்திறன் மிக்க ஆளுமை காரணமாக பலர் அவர்களிடம் நெருங்கி பழகுவதைத் தவிர்ப்பார்கள். அவர்களின் இந்த சிக்கலான ஆளுமை காரணமாக அவர்கள் உறவுகளில் அதிக சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
பல கலாச்சாரங்களில் இந்த பிறந்த தேதி துரதிர்ஷ்டவசமான எண்ணாகவும் கருதப்படுகிறது, ஏனெனில் அதன் சீன உச்சரிப்பு மரணம் போன்றது. பல சீனர்கள் முடிந்தவரை எண் 4 ஐத் தவிர்க்கிறார்கள்.
பிறந்த தேதி 23
பிறந்த தேதி 23 துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இந்த ஆளுமை அவர்களின் பெற்றோருக்கு அடிக்கடி வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளைத் தவிர்க்க விரும்புகிறார்கள்.
அவர்களின் ஆளுமை காரணமாக, இந்த பிறந்த தேதி பெரும்பாலும் கோழையாக கருதப்படுகிறது. இந்த தேதியில் பிறந்தவர்கள் நடுத்தர வயதை அடையும் போது, அவர்கள் அதிகம் மாறுவதில்லை, மேலும் அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் அவர்களின் பலவீனத்தை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
