Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
ஏப்ரல் மாதம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு தொழிலில் அமோக வெற்றி கிடைக்கப் போகுது...
2023 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாத கிரக நிலைகளைப் பொறுத்தவரை, இந்த ஏப்ரல் மாதமானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக, இருக்கப் போகிறது. குறிப்பாக சில ராசிக்காரர்கள் ஏப்ரல் மாதத்தில் தொழிலில் நல்ல பலனைப் பெறவுள்ளார்கள்.
பொதுவாக அனைவருக்குமே ஒரு மாதத்தில் நுழையும் போது, அந்த மாதத்தில் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும், நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்போம். இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் கிரகங்களின் நிலைகளால் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் மாற்றம் ஏற்படும்.

குறிப்பாக சில ராசிக்காரர்கள் தங்களின் தொழில் வாழ்க்கையில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது எந்த ராசிக்காரர்கள் 2023 ஏப்ரல் மாதத்தில் தொழிலில் நற்பலனைப் பெறவுள்ளார்கள் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதமானது மிகவும் அற்புதமாக இருக்கும். ராகு, கேது நிலைகளால் இதுவரை சந்திக்க தடைகள் அனைத்தும் நீங்கும். செவ்வாயால் நற்பலன்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது பாதியில் தொழில் மற்றும் நிதி நிலை சிறப்பாக இருக்கும். சனி மற்றும் சந்திரனின் நிலைகளால் செல்வம் பெருகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் ஏப்ரல் மாதத்தில் நிறைய நற்செய்திகளைப் பெறுவார்கள். குடும்பத்தினரின் முழு ஆதரவு இந்த மாதத்தில் கிடைக்கும். நிதி ரீதியாக இம்மாதம் மிகவும் அற்புதமாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆனால் இந்த மாதத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பிவிடாதீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதமானது அட்டகாசமாக விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் மாதமாக இருக்கும். குறிப்பாக சூரிய பெயர்ச்சிக்கு பின், 11 ஆவது வீட்டில் சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் ஒன்றாக இருப்பதால், அற்புதமான பலன்கள் கிடைக்கும். சனியின் நிலையால் நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ராகுவின் நிலையால் எதிர்பாராத வெற்றி கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் தொழில் வாழ்க்கை அமோகமாக இருக்கும். நல்ல பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்களின் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். புதனின நிலையால் வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். ஆனால் செலவுகள் சற்று அதிகமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கும் ஏப்ரல் மாதம் நல்ல முன்னேற்றத்தைத் தரும் மாதமாக இருக்கும். நிதி நிலையில் மட்டுமின்றி, தொழிலிலும் நல்ல ஏற்றத்தைக் காண்பார்கள். இம்மாதத்தில் வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணிபரிபவர்களுக்கு அலுவலத்தில் முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். நல்ல பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் உருவாகும். சனியின் நிலையால் இனிமேல் பொற்காலமாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இதுவரை மோசமாக இருந்திருக்கலாம். ஆனால் ஏப்ரல் மாதம் மிகவும் சிறப்பான மாதமாக இருக்கும். ஏப்ரல் மாத கிரகங்களின் நிலைகளால் தடைபட்ட காரியங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். எப்பேற்பட்ட கடினமான வேலைகளையும் இம்மாதத்தில் அசால்ட்டாக செய்து முடிப்பீர்கள். வணிகம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க இது சிறந்த மாதமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications