Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ராகு புதன் சேர்க்கையால் 2024-ல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் உயரப் போகுது...
Rahu Mercury Conjunction In 2024: இன்னும் சில நாட்களில் 2024 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். வருகிற 2024 ஆம் ஆண்டின் பல கிரகங்களின் ராசி மாற்றங்கள் நிகழ்கின்றன. அப்போது சில கிரகங்களின் சேர்க்கைகளும் நிகழவுள்ளன.
இப்படி உருவாகும் கிரக சேர்க்கைகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிழல் கிரகமான ராகுவும், கிரகங்களின் இளவரசனான புதனும் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர்.

இவ்வாறு மீன ராசியில் புதனும், ராகுவும் ஒன்றிணைந்து பயணிப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் திடீர் நிதி நன்மைகளையும், தொழிலில் முன்னேற்றத்தையும் காணவுள்ளார்கள். இப்போது 2024-ல் நிகழும் ராகு புதன் சேர்க்கையால் நற்பலனைப் பெறும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ராகு புதன் சேர்க்கையானது நன்மைகளை வழங்கும். கும்ப ராசியின் அதிபதியான சனி பகவான், ராகு மற்றும் புதனுடன் நட்புறவு கொண்டிருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பண பலன்கள் கிடைக்கும். சிலர் எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறுவார்கள். பேச்சால் பல காரியங்களை சாதிப்பார்கள். தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். சொத்துக்கள் அதிகரிக்கும். சிலர் புதிய தொழிலை தொடங்க வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ராகு மற்றும் புதன் சேர்க்கையானது 6 ஆவது வீட்டில் நிகழ்வதால், 2024 ஆம் ஆண்டில் இந்த ராசிக்காரர்கள் நீதிமன்ற வழக்குகளில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். ரகசிய எதிரிகளை கண்டுபிடித்து, அவர்களை வெற்றி பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும். சிலர் இக்காலகட்டத்தில் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த நோயில் இருந்து விடுபடுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகு புதன் சேர்க்கையானது வெற்றிகளை வாரி வழங்கும். ஏனெனில் இந்த சேர்க்கை வருமான வீட்டில் நிகழ்கிறது. இதன் விளைவாக வருமானத்தி உயர்வு ஏற்படும். சிலர் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். நீங்கள் எங்காவது முதலீடு செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலை செய்பவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். பங்குச் சந்தை மற்றும் லாட்டரியில் முதலீடு செய்தால், அதிலிருந்து நல்ல லாபத்தைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications