Latest Updates
-
ப்ளீச்சிங் செஞ்ச மாதிரி முகம் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
ஆசிரியையின் ஒரு அறை.. உயிரிழந்த சிறுவன்! இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கும் டாக்டர்! -
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா?
குரு பகவானின் அருளால் மே 1 வரை இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா?
நவகிரகங்களில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதி குரு பகவான் ஆவார். இந்த குரு பகவான் தற்போது செவ்வாய் ஆளும் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்த மேஷ ராசியில் குரு பகவான் மே மாதம் வரை இருப்பார். அதன் பின் ரிஷப ராசிக்கு சென்றுவிடுவார்.
மேஷ ராசியில் பயணிக்கும் குருவின் 5 ஆம் பார்வை சிம்ம ராசியிலும், 7 ஆம் பார்வை லாம் ராசியிலும், 9 ஆம் பார்வை தனுசு ராசியிலும் விழுகிறது. குருவின் இந்த மூன்று பார்வைகளும் ஒருவருக்கு நல்ல யோகத்தையும், அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும்.

இந்த பார்வைகள் எந்த ராசியில் விழுகிறதோடு, அந்த ராசிக்காரர்களுக்கு குருவின் பரிபூர்ண அருள் கிடைப்பதோடு, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும், செல்வத்தையும் தருவார். இப்போது குருவின் அருளால் மே மாதம் வரை அதிர்ஷ்டம் பெறும் அந்த ராசிக்காரர்கள் குறித்து காண்போம். உங்கள் ராசி இதில் உள்ளதா என்று பாருங்கள்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் குரு பகவான் இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு மே வரை சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பும், மரியாதையும் அதிகம் இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். சிலர் வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். அலுவலகத்தில் உங்கள் செயல்திறனால் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருப்பதால், நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் குரு பகவான் இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். வியாபாரிகள் வெளிநாட்டு ஒப்பந்தங்களால் நல்ல நன்மைகளைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு ஏராளமான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு குருவின் அருளால் நல்ல வேலை மே மாதத்திற்குள் கிடைத்துவிடும். தந்தையுடனான உறவு மேம்படும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் குரு பகவான் உள்ளார். இது அதிர்ஷ்ட வீடு என்பதால், அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக இருக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிதி ரீதியாக, மே மாதம் வரை அற்புதமாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணத்தைப் பெறுவீர்கள். தொழில் தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆன்மீகத்திற்காக சற்று நிறைய பணத்தை செலவழிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications