Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
புதன் கிழமை பிறந்தவர்கள் திறமையானவர்களாம்.. ஜோதிடம் என்ன சொல்லுகிறது?
ஒருவரது ஜாதகம் மற்றும் ராசி மூலம் அவர்களது வாழ்க்கை தொடர்பான பல விஷயங்களை கண்டு கொள்ள முடிவது போல, நீங்கள் வாரத்தின் எந்த நாளில் பிறந்துள்ளீர்கள் என்பதை கொண்டு உங்களின் ஆளுமைப் பண்புகளை பற்றி தெரிந்து கொள்ள முடியும். ஒரு வாரத்தில் இருக்கும் 7 நாட்களும் ஒவ்வொரு விதமான ஆற்றல் கொண்டது என்பது உங்களுக்குத் தெரியுமா..?
அந்த நாளில் பிறந்தவர்களின் ஆளுமை மற்றும் குணங்களில் குறிப்பிட்ட நாளின் ஆற்றலின் தாக்கம் பிரதிபலிக்கிறது. நீங்கள் பிறந்த நாளின்படி உங்களின் குணாதிசயங்கள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம். அதன்படி, இந்த பதிவில் புதன் க்ழமையில் பிறந்தவர்களின் குணாதிசயம் என்ன என்பது பற்றி தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

புதன் கிழமை பிறந்தவர்கள்
மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான பயணத்தில் பல நிகழ்வுகள் நடக்கின்றன. ஜோதிடம் பற்றி அறிய பல வழிகள் உள்ளன. இது பல விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு நபரின் எதிர்காலத்தைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது. மனித வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் உண்டு. சிலருடைய வாழ்க்கையில் அவை அதிகமாகவும், சிலருடைய வாழ்க்கையில் குறைவாகவும் இருக்கும். நம்பிக்கைகளின்படி, இவை அனைத்தும் ஒரு நபரின் பிறந்த தேதி, நேரம் மற்றும் நாள் ஆகியவற்றைப் பொறுத்தது. இன்று நாம் புதன் கிழமையில் பிறந்தவர்களின் குணம், திருமண வாழ்க்கை, தொழில், வேலை போன்றவற்றை பற்றி ஜோதிடர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்..
புதன் கிழமையில் பிறந்தவர்கள் நடத்தையில் எப்படி இருக்கிறார்கள்?
புதன் கிழமையில் பிறந்தவருக்கு புதன் கிரகத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் புதன் கிழமையில் பிறந்தவர்கள் சாந்த குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.. அதனால்தான் இவர்கள் எல்லோருக்கும் பிடித்தமானவர்களாக இருப்பார்கள்.. புதன் கிழமையில் பிறந்தவர்கள் திறமை மிகுந்த பணக்காரர்களாக வாழ்வார்களாம்.
நேர்மறையான அம்சங்கள்
புதன் கிழமையில் பிறந்தவர்கள் பல்துறை மற்றும் கூர்மையான எண்ணம் கொண்டவர்கள். அவர்களுக்கு மற்றொரு குணம் உள்ளது, அவர்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தங்களை மாற்றிக் கொண்டே இருபார்கள் என்று ஜோதிடம் சொல்லுகிறது. இதன் காரணமாக அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களையும் பிரச்சனைகளையும் ஈஸியாக சமாளித்துவிடுவார்கள். புதன் கிழமையில் பிறந்தவர்கள் கல்வியில் மட்டுமின்றி, வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் திறமை மிகுந்தவர்களாக இருப்பர்.
எதிர்மறை அம்சங்கள்
புதன் கிழமையில் பிறந்தவர்கள் பார்ப்பதற்கு அமைதியாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் கோபப்படும்போது அவர்களின் கோபம் எளிதில் தணியாது. இவர்கள் அறியாமல் தங்களுக்கு நன்மை செய்யும் மற்றவர்களுக்கு தீமை செய்வார்கள். எளிமையாகச் சொன்னால், அவர்கள் மற்றவர்களின் பார்வையில் மோசமான மனிதர்களாக கருதப்படுவார்கள்.. இவர்கள் திட்டமிடாமல் செயல்படுவதாக மற்றவர்கள் பார்வையில் இருக்கும். ஆனால் உண்மையிலேயே நன்றாக திட்டமிட்டுதான் இருப்பார்கள். .
காதல், திருமண வாழ்க்கை
புதன் கிழமையில் பிறந்தவருக்கு பல விவகாரங்கள் இருக்கலாம். ஆனால் நீங்கள் உண்மையிலேயே நேசிக்கும் ஒருவரை ஒருபோதும் ஏமாற்ற மாட்டிர்கள். இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதன் கிழமையில் பிறந்தவர்கள் திறமை மிகுந்தவர்கள், அவர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப சரியான வாழ்க்கைத் துணையைப் பெற்று நன்றாக வாழ்வார்கள். நினைத்தது போல வாழ்வார்கள்...
புதன்கிழமை பிறந்தவர்களின் ஆளுமை பண்புகள்
புதன்கிழமையில் பிறந்த தகவல் தொடர்பு திறனை கொண்டிருப்பீர்கள். புத்திசாலித்தனமாகவும், அறிவாற்றல் மிக்கவராகவும் செயல்படுவீர்கள். உங்கள் இலக்குகளை அடைவதில் நீங்கள் அதிக கவனம் செலுத்துவீர்கள். அட்வென்ச்சர் அனுபவங்களை நீங்கள் தேடி செல்வீர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளையும் செய்து முடிக்கும் திறமையை கொண்டிருப்பீர்கள். தோல்வி மற்றும் ஆபத்துகளை கண்டு துவளாமல் உங்கள் பாதையில் முன்னேறி செல்வதில் முனைப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தினருக்காக எதையும் செய்ய தயாராக இருப்பீர்கள்.
வேலை அல்லது வியாபாரம்
புதன் கிழமையில் பிறந்தவர்கள் கலை, பாடல், நடனம், எழுதுதல் அல்லது கமிஷன் ஏஜென்டாக வேலை செய்வதில் வெற்றி பெறுவார்கள். இது தவிர, மார்க்கெட்டிங் துறையில் அவர்களுக்கு வெற்றியே கிடைக்கும்.



Click it and Unblock the Notifications