Latest Updates
-
ஜூலை 16-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது... -
1 சௌ சௌ காயும், 5 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா?
X, M, V - இந்த அடையாளங்கள் உங்க கையில் இருக்கா? உங்கள பத்தின ரகசியத்தை படிச்சு பாருங்க..
Palmistry In Tamil: எப்படி ஒருவரது ராசியைக் கொண்டு, ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நபரின் குணாதிசயங்கள், எதிர்காலம் கணித்து கூறப்படுகிறதோ, அதேப் போல் கைரேகைகளைக் கொண்டு கணித்து கூறப்படுவது தான் கைரேகை ஜோதிடம்.
ஒருவரது கையில் பலவிதமான ரேகைகள் உள்ளன. ஒவ்வொரு ரேகைகளும் ஒவ்வொன்றை குறிக்கின்றன. பெரும்பாலும் அனைவரது கையிலும் இதய ரேகை, தலை ரேகை, ஆயுள் ரேகை ஆகிய மூன்று ரேகைகளும் காணப்படும்.

இதுதவிர, சிலரது கைகளில் உள்ள ரேகைகளால் ஒருசில அடையாளங்கள் உருவாகும். அந்த அடையாளங்கள் ஒருவரைப் பற்றிய பல தனித்துவமான விஷயங்களைக் கூறுகின்றன. அப்படி சிலரது உள்ளங்கைகளில் உள்ள ரேகைகளால் X, M, V ஆகிய அடையாளங்கள் உருவாவதைக் காணலாம். இந்த அடையாளங்கள் அந்நபரைப் பற்றி என சொல்கிறது என்பதை இப்போது காண்போம்.
X அடையாளம்
உங்கள் கையில் X அடையாளம் உள்ளதா? கைரேகை சாஸ்திரத்தின் படி, கையில் இந்த அடையாளத்தைக் கொண்டவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இந்த அடையாளமானது இதய ரேகைக்கும், மூளை ரேகைக்கும் இடையில் உருவாகின்றன. இந்த மாதிரியான அடையாளம் வெகு சிலரிடமே காணப்படுவதாக கூறுப்படுகிறது. இந்த அடையாளத்தை கையில் கொண்டவர்களின் வாழ்க்கையில் பணம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய அவசியமே ஏற்படாது.
மேலும் சமூகத்தில் இவர்கள் மீது நிறைய மரியாதை இருக்கும். எந்த வேலையையும் தயக்கமின்றி செய்யக்கூடியவர்கள். இவர்களது திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். இத்தகையவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பெரும்பாலும் இத்தகையவர்கள் அறிவாளியாகவும், தலைவராகவும் இருப்பார்கள். முக்கியமாக இவர்களது ஆறாம் அறிவு சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது.
M அடையாளம்
கையில் M அடையாளம் கொண்டவரா நீங்கள்? அப்படி இருந்தால், நீங்கள் மிகுந்த தைரியசாலிகள். எப்பேற்பட்ட சூழ்நிலையையும் தைரியமாக எதிர்கொள்ளக் கூடியவர்கள். சவாலான வேலையை எடுத்து வெற்றிகரமாக செய்து முடிக்கக்கூடியவர்கள். சமுகத்தில் மரியாதையை நிலைநாட்ட கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
இந்த அடையாளத்தை கையில் கொண்டவர்கள் யாரையும் எளிதில் நம்பமாட்டார்கள். தங்களுக்கு என்று வாழ்வில் ஒரு பாதையை அமைத்து வாழ்வார்கள். அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை சற்று மன அழுத்தம் நிறைந்து இருக்கும். மேலும் இவர்கள் அமைதியானவர்கள், யாரையும் புண்படுத்தமாட்டார்கள், மற்றவர்களுக்கு எப்போதும் உதவ முன்வருவார்கள். இவர்களிடம் யாரும் பொய் சொல்ல முடியாது. ஒருவர் பொய் சொல்வதை எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள்.
V அடையாளம்
கைரேகைகளால் உருவாகும் மற்றொரு அற்புதமான அடையாளம் தான் V. இந்த அடையாளத்தைக் கொண்டவர்கள் எந்த ஒரு வேலையையும் முழுமையாக முடிக்கமாட்டார்கள். ஆனால் இவர்கள் அதிர்ஷ்டத்துடன் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இவர்கள் செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்வதோடு, நல்ல புகழையும் பெறுவார்கள். முக்கியமாக இந்த அடையாளத்தைக் கொண்டவர்கள் ஒரு நல்ல நண்பரின் குணங்களைக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக இவர்களின் நிதி நிலை மிகவும் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications