Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உள்ளங்கையில் இந்த மாதிரி இருந்தா, நிறைய பண பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உங்க கையில இருக்கா?
Palmistry: ஒருவரது எதிர்காலம் மற்றும் வாழ்க்கைக் குறித்த பல விஷயங்களை அறிந்து கொள்ள பல வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் கைரேகை ஜோதிடம். ஒருவரின் உள்ளங்கையில் இருக்கும் கைரேகைகளின் மூலமாக, அவருடைய குணத்தை அல்லது அவரின் எதிர்கால வாழ்க்கையை எடுத்துக்கூறும் முறையே கைரேகை சாஸ்திரமாகும்.
ஒருவரது கையில் பல ரேகைகள் உள்ளன. அந்த ரேகைகளின் அளவுகள், பிரிவுகள், மேடுகள் போன்றவற்றைக் கொண்டு தான் ஒருவரது எதிர்காலம் கணித்து கூறப்படுகின்றன. அதே சமயம் இந்த ரேகைகள் ஒருவரது துரதிர்ஷ்டத்தையும், அவருக்கு வரவிருக்கும் பிரச்சனைகளைப் பற்றியும் வெளிப்படுத்தும்.

ஒருவருக்கு நடக்கவிருக்கும் நல்லதை தெரிந்து கொள்வதைவிட, கெட்டதை தெரிந்து கொண்டால், சற்று எச்சரிக்கையாக இருக்கலாம் அல்லவா? எனவே இப்போது உள்ளங்கையில் எந்த மாதிரியான அடையாளங்கள் இருந்தால் அது ஒருவரது வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும் என்பதைக் காண்போம். உங்கள் கையிலும் இந்த அடையாளங்கள் உள்ளதா என்று பாருங்கள்.
ராகு ரேகை
கைரேகை ஜோதிடத்தின் படி, கையில் ராகு ரேகை உள்ளவர்களின் வாழ்க்கை சற்று வேதனை நிறைந்ததாக இருக்கும். இந்த ராகு ரேகையை மன அழுத்த ரேகை என்றும் அழைப்பதுண்டு. ராகு ரேகையானது ஆயுள் ரேகைக்கும், புத்தி ரேகைக்கும் இடையில் இருக்கும். இந்த ராகு ரேகைகளில் பிளவு இருந்தால், அந்நபர் வாழ்க்கையில் தொடர்ச்சியான தோல்விகளை சந்திக்க நேரிடும். அதோடு ஆரோக்கிய பிரச்சனைகளால் மருத்துவ செலவுகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும். இதன் விளைவாக பண பிரச்சனைகளால் அதிகம் அவதிப்பட வேண்டியிருக்கும்.
சனி மேட்டில் சிலுவை அடையாளம்
ஒருவரது உள்ளங்கையில் உள்ள சனி மேட்டில் சிலுவை அடையாளம் இருந்தால், அது துரதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. இப்படிப்பட்ட அடையாளத்தை கையில் கொண்டிருந்தால், வீண் பழியை சந்திக்க நேரிடும். சிலர் சிறைக்கு செல்லவும் வாய்ப்புள்ளது. மேலும் இவர்களுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை எதுவும் இருக்காது.
பல கிளைகளைக் கொண்ட திருமண ரேகை
கைரேகை ஜோதிடத்தின் படி, கையில் உள்ள திருமண ரேகை பல கிளைகளாக பிரிக்கப்பட்டால், அத்தகைய நபர் திருமண வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிறு விஷயங்களுக்கும் பெரிய சண்டைகள் வரும். அதே வேளையில் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. சிலருக்கு விவாகரத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது.
சூரிய ரேகையில் தீவு
சூரிய ரேகையில் தீவு போன்ற அடையாளம் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டமான ஒன்றாக கருதப்படுகிறது. இம்மாதிரியான அடையாளம் யாருடைய கையில் உள்ளரோ, அந்நபர் கடன் தொல்லையால் அவதிப்படக்கூடும். மேலும் இவர்கள் வியாபாரம் செய்தால், அதில் நிறைய இழப்புக்களையே சந்திக்க நேரிடும். இவர்களுக்கு சொந்த தொழில் எதுவும் பொருந்தாது. வாழ்க்கை முழுவதும் பண பிரச்சனையால் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications