Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த படத்தில் உங்க கண்ணுக்கு குதிரை எப்படி தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்களோட எண்ணத்தைப் பற்றி சொல்றோம்...
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் ஆளுமை சோதனைகள் ஒருவரது ஆளுமை பண்புகளை வெளிப்படுத்த உதவும் ஒரு சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான வழி. ஆப்டிகல் இல்யூஷன் படங்களானது பார்ப்பதற்கு கண்களைக் கவரும்படி இருப்பதோடு, புதிர் நிறைந்ததாகவும் இருக்கும். நீங்கள் உங்களின் சுவாரஸ்யமான குணாதிசயங்களை தெரிந்து கொள்ள விரும்பினால், ஆப்டிகல் இல்யூஷன் ஆளுமை சோதனைகளை ட்ரை செய்து பாருங்கள்.
இணையத்தில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உலா வருகின்றன. ஒவ்வொரு படங்களும் உண்மையில் இல்லாத விஷயங்களைப் பார்க்க வைக்கும் அல்லது அவற்றை விசித்திரமான வழிகளில் பார்க்க தூண்டும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்களைப் பற்றியும் உங்கள் சுயவிமர்சனப் போக்குகளைப் பற்றியும் ஒரு தனித்துவமான கண்ணோட்டத்தை உங்களுக்கு வழங்க முனைகின்றன. இப்போது ஒரு சுவாரஸ்யமான ஆளுமை சோதனை படத்தைக் காண்போம்.

இந்த ஆளுமை சோதனை படத்தில் குதிரையில் ஒருவர் சவாரி செய்வதைக் காணலாம். அதுவும் இந்த படத்தில் இருக்கும் குதிரை உங்களை நோக்கி வருவதைப் போன்று தெரிகிறதா அல்லது எதிர் திசையில் செல்வது போன்று தெரிகிறதா? இதில் உங்களுக்கு எப்படி தெரிகிறது என்று கூறுங்கள். உங்களின் பதில் உங்களின் எண்ணங்களைப் பற்றி தெரியப்படுத்தும்.
குதிரை உங்களை நோக்கி வருவது
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் குதிரை உங்களை நோக்கி வருவது தெரிந்தால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் வரும் நல்ல விஷயங்களுக்காக காத்திருக்க முடியாத ஒருவராக இருக்கலாம். மேலும் நீங்கள் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் ஆர்வமாக இருப்பீர்கள் மற்றும் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்பீர்கள்.
குதிரை எதிர்திசையில் செல்வது
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு குதிரை எதிர்திசையில் செல்வது தெரிந்தால், நீங்கள் கடந்த காலத்திலேயே சிக்கிக் கொண்டிருக்கலாம். அதாவது எப்போதும் கடந்த கால நிகழ்வுகளை நினைத்து கொண்டிருப்பீர்கள் மற்றும் அப்படியே இருந்திருக்கக்கூடாதா என்ற ஏக்கத்துடன் இருப்பீர்கள். நீங்கள் ஒரு சிந்தனைமிக்க நபராக இருப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications