Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க அக்கறையானவரா, இல்லையா-ன்னு சொல்றோம்..
Optical Illusion: நம் ஒவ்வொருவருக்கும் நமது குணாதிசயங்கள் மற்றும் ஆளுமையை மற்றவர்கள் கணித்து கூறுவதை கேள்விப்பட்டால், அதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். உங்களுக்கு உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியானால் ஆப்டிகல் இல்யூஷன் ஆளுமை சோதனையை மேற்கொள்ளுங்கள். இந்த சோதனையில் புதிர்கள் நிறைந்த படங்கள் இருக்கும். இந்த படங்கள் நம் கண்களை கவரும் படி இருப்பதோடு, அதனுள் பல்வேறு விஷயங்கள் மறைந்திருக்கும். இந்த மாதிரியான படங்களை ஒரு புதிர் நிறைந்த விளையாட்டு என்று கூட சொல்லலாம்.

இந்த வகை ஆப்டிகல் இல்யூஷன் படங்களைக் கொண்டு ஒருவரது அறிவாற்றல் மற்றும் பார்வைத் திறனைக் கூட அறியலாம். இம்மாதிரியான படங்களை பார்த்ததும், நமது மூளை அதை எப்படி எடுத்துக் கொள்கிறது என்பதைப் பொறுத்து தான் ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன. சொல்லப்போனால் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உளவியல் பகுப்பாய்வில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது.
இங்கு ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முதலில் உங்கள் கண்களுக்கு எது தெரிகிறதோ, அதைக் கொண்டு ஒரு சுவாரஸ்யமான குணாதியத்தை தெரிந்து கொள்ளலாம். அதாவது நீங்கள் அக்கறையானவரா அல்லது அக்கறை இல்லாதவரா என்பதை என்பதை இந்த சோதனையின் மூலம் அறியலாம். அதற்கு முதலில் இப்படத்தில் உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறது என்று கூறுங்கள்.
இளம் பெண்ணின் முகம்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு இளம் பெண்ணின் முகம் தெரிந்தால், நீங்கள் மிகவும் கலகலப்பான, எதற்கும் கவலைப்படாத மற்றும் அக்கறை இல்லாத நபராக இருக்கலாம். நீங்கள் ஆக்கப்பூர்வமான, புதுமையான மற்றும் வழக்கமான நடைமுறைகளை விட புதிய அனுபவங்களை விரும்பும் ஒருவர். நீங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை எளிதில் மாற்றிக் கொள்வீர்கள். பரந்த மனப்பான்மையைக் கொண்டவர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையை விளையாட்டுத்தனமாக அணுகுவீர்கள்.
வயதான பெண்மணியின் முகம்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு வயதான பெண்மணியின் முகம் தெரிந்தால், நீங்கள் அதிக அக்கறையைக் கொண்டவராக இருக்கலாம். கருணை உள்ளமும், மற்றவர்களின் உணர்வுகளை சொல்லாமலேயே புரிந்து கொள்ளும் ஆற்றலைக் கொண்டிருப்பீர்கள். ஒரு விஷயத்தை எப்போதும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் காண்பீர்கள். மற்றவர்களை மதிப்பீர்கள். பொறுமைசாலிகள். மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டு, ஒரு நல்ல தொடர்பை கொள்ளும் ஆற்றலைக் கொண்டிருப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications