Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படின்னு சொல்றோம்..
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருந்தாலும், அந்த படங்கள் ஒருவரது மறைக்கப்பட்ட குணாதிசங்களைப் பற்றி வெளிப்படுத்தும். இம்மாதிரியான படங்கள் புதிர் நிறைந்த விளையாட்டு போன்றும் இருக்கும். இந்த படங்களை காணும் போது முதலில் ஒருவரது கண்களுக்கு எது தெரிகிறதோ, அது அந்நபரின் மறைக்கப்பட்ட குணாதிசயங்களை வெளிப்படுத்தும்.
நீங்கள் உங்கள் மறைக்கப்பட்ட குணாதியங்களை தெரிந்து கொள்ள விரும்பினால், ஆப்டிகல் இல்யூஷல் சோதனையை மேற்கொள்ளுங்கள். இணையத்தில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. அதில் ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஒரு பெண்ணின் முகம் மற்றும் சாக்ஸபோன் வாசிக்கும் மனிதன் என இரண்டு விஷயங்கள் மறைந்துள்ளன. இதில் இந்த படத்தைப் பார்த்ததும் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிந்தது என்று கூறுங்கள். நீங்கள் படைப்பாற்றல் மிக்கவரா அல்லது பகுப்பாய்வு செய்யும் ஒருவரா என்பதை கூறுகிறோம்.
ஒரு பெண்ணின் முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு பெண்ணின் முகம் தெரிந்தால், நீங்கள் சிறந்த படைப்பாற்றல் மிக்கவராக இருக்கலாம். உங்கள் மூளையின் வலது பக்கம் இடது பக்கத்தை விட மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறது என்று அர்த்தம். இதனால் கற்பனைத் திறன் மற்றும் வலுவான உள்ளுணர்வு கொண்டவராக இருப்பீர்கள். அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடியவராக இருக்கலாம். மேலும் உங்களுக்கு இசை, நடனம், நடிப்பு போன்ற கலைகளில் ஆர்வம் அதிகமாக இருக்கும். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அவர்கள் மீது அதிக அக்கறை காட்டுவீர்கள்.
சாக்ஸபோன் வாசிக்கும் மனிதன்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் சாக்ஸபோன் வாசிக்கும் மனிதன் தெரிந்தால், நீங்கள் தர்க்க ரீதியாகவும், பகுபாய்வு ரீதியாகவும் சிந்திக்கும் நபராக இருப்பீர்கள். உங்கள் மூளையின் இடது பக்கம் வலது பக்கத்தை விட மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறது என்று அர்த்தம். கணிதம், அறிவியல் போன்றவற்றில் சிறந்து விளங்குவீர்கள். பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணும் ஆற்றலைக் கொண்டிருப்பீர்கள். யதார்த்தமான ஒருவராக இருப்பீர்கள். இதனாலோ என்னவோ, பிரச்சனையில் இருப்பவர்கள் உங்களைத் தேடி வருவார்கள். நீங்கள் உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பீர்கள். எதையும் ஒழுங்காக செய்யக்கூடியவர் மற்றும் திறமையானவர். உங்கள் எண்ணங்களை தெளிவாக வெளிப்படுத்துவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications