Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த படத்தில் முதலில் என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க உணர்ச்சி ரீதியா எவ்வளவு புத்திசாலி-ன்னு சொல்றோம்...
Optical Illusion: இவ்வுலகில் பல்வேறு வகையான நுண்ணறிவுகள் உள்ளன. சிலர் படிப்பில் கெட்டிக்காரராக இருப்பார்கள், தேர்வுகளை எழுதி அசால்ட்டாக நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்று பெறுவார்கள். இன்னும் சிலர் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை திறம்பட சமாளிப்பார்கள் மற்றும் தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதை நன்கு அறிந்து சூழ்நிலைக்கேற்ப நடப்பார்கள்.
இப்படியான நுண்ணறிவுகளில் ஒன்று தான் உணர்ச்சி நுண்ணறிவு. இம்மாதிரியான நுண்ணறிவு உணர்ச்சிகளைப் பற்றியது. மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வது மற்றும் அதற்கு பதிலளிக்கும் விதத்தைப் பற்றியது.

நீங்கள் உணர்ச்சி ரீதியாக எவ்வளவு புத்திசாலி என்பதை தெரிந்து கொள்ள நினைக்கிறீர்களா? அப்படியானால் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உதவி புரியும். ஏனெனில் இந்த வகை படங்களைக் கொண்டு ஒருவரது IQ அளவை அறியலாம் மற்றும் ஒருவரது ஆளுமையைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கண்களைக் கவரும் சில விஷயங்கள் உள்ளன. இந்த விஷயங்களுள் முதலில் உங்கள் கண்களுக்கு என்ன தெரிந்தது என்று கூறுங்கள். உங்களின் உணர்ச்சி நுண்ணறிவைப் பற்றி நாங்கள் கூறுகிறோம்.
புல் தெரிந்தால்...
உங்கள் கண்களுக்கு முதலில் புல் தெரிகிறது என்றால், நீங்கள் மற்றவர்களுடனான தொடர்பை ஆழமாக மதிக்கும் ஒருவர் என்பதை அறிவுறுத்துகிறது. மேலும் நீங்கள் எப்போதும் உணர்ச்சி ரீதியாக மிகவும் உள்ளுணர்வு கொண்டவராக இல்லாவிட்டாலும், தேவையான நேரத்தில் அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெற சற்றும் தயங்கமாட்டீர்கள்.
ஒரு பெண் தெரிந்தால்..
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதலில் உங்கள் கண்களுக்கு ஒரு பெண் தெரிந்தால், மற்றவர்களின் உணர்ச்சிகள் மற்றும் அவர்களின் மனக்கவலைகளை ஆற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கும் இரக்க குணம் கொண்டவர்கள் என்பதை இது வெளிப்படுத்துகிறது. உங்களைச் சுற்றியுள்ளவர்களின் மீதாக அக்கறை மற்றும் இரக்க குணம் அனைவராலும் மிகவும் பாராப்படும். நீங்கள் மற்றவர்கள் மீது காட்டும் பாசத்தால், மற்றவர்கள் தங்களின் மன கஷ்டங்களின் போது வழிகாட்டுதல்களுக்காக அடிக்கடி உங்களிடம் வருவார்கள். அதற்கேற்ப நீங்களும் அவர்களுக்கு ஆறுதலாக இருப்பீர்கள்.
கண்ணாடி தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் கண்ணாடி தெரிந்தால், நீங்கள் குறிப்பிடத்தக்க உணர்ச்சி நுண்ணறிவைக் கொண்டுள்ளீர்கள். சூழ்நிலைகளுக்கு ஏற்ப உணர்வுகளைப் புரிந்து திறம்பட நடந்து கொள்வீர்கள். மேலும் வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளை திறம்பட கையாள்வதில் வல்லவர்கள் என்பதை இது உணர்த்துகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Image Courtesy: Your Tango



Click it and Unblock the Notifications