Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
இதுல என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க சுயமா சிந்திப்பீங்களா/ மற்றவர்களின் பேச்சை கேட்டு நடப்பீங்களா-ன்னு சொல்றோ
Optical Illusion: என்ன தான் உங்களைப் பற்றி உங்களுக்கு நன்கு தெரிந்தாலும், மற்றவர்கள் உங்களின் குணாதிசயங்களைப் பற்றி கூறும் போது, அதைத் தெரிந்து கொள்ள சற்று ஆவலாக இருக்கும். ஆனால் உண்மையில் உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்கள் உள்ளன.
அதைத் தெரிந்து கொள்ள விரும்பினால், அதற்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உதவி புரியும். இணையத்தில் ஒருவரது குணாதிசயங்களை வெளிப்படுத்தும் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. இந்த படங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்துவதைத் தவிர, அறிவுத்திறன் மற்றும் பார்வைத்திறனை கூட சோதிக்கலாம்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள படமானது அழகாக இருப்பதோடு, அதில் புதிரும் நிறைந்துள்ளது. இந்த படமானது ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்தும். முக்கியமாக இது நீங்கள் சுயமாக சிந்திப்பீர்களா அல்லது மற்றவர்களின் பேச்சை கேட்டு நடப்பீர்களா என்பதை பற்றி தெரியப்படுத்தும்.
அதற்கு இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூற வேண்டும். இந்த படத்தில் அடர்ந்த மரங்கள் நிறைந்த சாலையில் ஒருவர் நடந்து செல்வதும், மரங்களாலான ஒரு மனிதனின் முகமும் தெரியும். இதில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள்.
மரங்களால் ஆன முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதலில் உங்கள் கண்களுக்கு ஒரு மனிதனின் முகம் தெரிகிறது என்றால், நீங்கள் மற்றவர்களின் கருத்துக்கு அதிக மதிப்பை கொடுப்பீர்கள். பிரச்சனை எதுவும் இல்லாத அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்புவீர்கள். மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுவீர்கள். மிகவும் இனிமையானவர்.
நீங்கள் எப்பேற்பட்ட சூழ்நிலையையும் எளிதில் கையாளக்கூடியவர் என்று மற்றவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போது, என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருப்பீர்கள். எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் மற்றவர்களின் யோசனைகளை ஒருமுறை கேட்பீர்கள். ஒருவேளை உங்களுக்கு பிடித்ததை மற்றவர்கள் மறுத்தால், உடனே அதை விட்டுவிடுவீர்கள்.
சாலையில் நடந்து செல்பவர்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு சாலையில் ஒருவர் நடந்து செல்வது தெரிகிறது என்றால், நீங்கள் உங்கள் கருத்தில் உறுதியாக இருப்பீர்கள். மற்றவர்களின் கருத்தை பற்றி கவலைப்படமாட்டீர்கள். மனதில் பட்டதை உடனே வெளிப்படையாக கூறுவீர்கள்.
எப்போதும் எங்கும் தனித்துவமாக தெரிவீர்கள். உங்களுக்கு பிடித்ததை மட்டுமே செய்வீர்கள். சுயமாக சிந்தித்து எந்த முடிவையும் எடுப்பீர்கள். உங்களுக்கு பிடித்தவர்கள் சொன்னாலும், உங்கள் மனதிற்கு தோன்றினால் மட்டுமே ஒரு விஷயத்தை செய்வீர்கள்.



Click it and Unblock the Notifications