Latest Updates
-
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதலில் என்ன தெரியுது சொல்லுங்க.. உங்க காதல் வாழ்க்கை பற்றி சொல்றோம்...
Optical Illusion: ஒரு படம் உங்களின் குணாதிசயங்களை புட்டுபுட்டு வைக்கும் என்று கூறினால், நிச்சயம் அதை முயற்சிக்க நீங்கள் விரும்புவீர்கள் தானே? அப்படி ஒருவரது குணாதிசயங்களை வெளிப்படுத்தும் ஒருவிதமான ஆளுமை சோதனை தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள். இந்த வகை படங்கள் கண்களை கவரும் வண்ணம் இருந்தாலும், இந்த படங்களை பார்க்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயங்கள் கண்களுக்கு தெரியும்.
இதற்கு ஒருவரது மூளையின் செயல்பாடு தான் காரணம். இந்த புதிர் நிறைந்த படங்களை பார்க்கும் போது, மூளை உங்கள் ஆழ் மனதை ஆழமாக ஆராய்ந்து, உங்கள் உணர்ச்சிபூர்வமான பதில்கள், முடிவெடுக்கும் முறைகள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

இங்கு ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள். இது உங்கள் காதல் வாழ்க்கையைப் பற்றி மற்றும் காதலில் நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பற்றி வெளிப்படுத்தும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒருவர் இரண்டு மரங்கள், காதல் ஜோடிகளின் நடனம் அல்லது ஒரு ஆணின் முகத்தைக் காணலாம். உங்கள் பார்வைக்கு முதலில் என்ன தெரிந்தது என்று கூறுங்கள். உங்களின் காதல் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இரண்டு மரங்கள்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் இரண்டு மரங்கள் தெரிந்தால், வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை நீங்களும் உங்கள் துணையும் இணைந்து சமாளிப்பீர்கள். உங்களைப் பொறுத்தவரை, தம்பதிகளின் மகிழ்ச்சியில் தோழமை ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. உங்கள் துணையின் மீதான நம்பிக்கை வர உங்களுக்கு நேரம் எடுக்கும். சொல்லப்போனால் உங்களும் உங்கள் துணைக்கும் இடையே நம்பிக்கையின்மையால் பிரச்சனைகள் அதிகமாக வரும். உங்களுக்கு இடையேயான இணைப்பை ஆழமாக்க, இருவரும் வெளிப்படையாக பேச முயற்சிக்க வேண்டும்.
நடனமாகும் காதல் ஜோடி
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் நடனமாடும் காதல் ஜோடிகள் தெரிந்தால், நீங்கள் காதலை மதிப்பீர்கள். உங்கள் துணையை சமமாக நடத்துவீர்கள். உங்களின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, உங்கள் துணையின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் உங்கள் துணை தான் உங்களுக்கு மிகவும் முக்கியமான நபராக இருப்பார்.
ஒரு மனிதனின் முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு மனிதனின் முகம் தெரிந்தால், நீங்கள் காதல் விஷயங்களில் ஒருவித சந்தேகத்துடனேயே இருப்பீர்கள். ஏனெனில் காதல் தோல்வியை அதிகம் சந்தித்திருப்பீர்கள். இதனால் அந்த வலியில் இருந்து மீண்டு வருவது உங்களுக்கு சிரமமாக இருக்கும். மேலும் நீங்கள் உறவுகளில் நிறைய சிக்கல்களை சந்திப்பீர்கள். உறவுகளில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க முயற்சிப்பதை விட, உங்கள் மீது அதிக கவனம் செலுத்துவீர்கள். மொத்தத்தில் உங்களுக்கும் காதலுக்கும் செட் ஆகாது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications