Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்களோட பெரிய குறையை சொல்றோம்...
Optical Illusion: ஒருவரது குணாதியங்களை வெளிப்படுத்தும் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் உலா வருகின்றன. இந்த மாதிரியான ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் பல விஷயங்கள் ஒளிந்திருக்கும். இந்த படங்களை பார்க்கும் போது, நமது மூளை முதலில் எதை எடுத்துக் கொள்கிறதோ, அதைப் பொறுத்து ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன. ஏன் உளவியல் பகுப்பாய்வில் கூட ஆப்டிகல் இல்யூஷன் பட சோதனை முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த வகையான படங்களை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் நமது மூளை ஒவ்வொருவிதமாக எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் ஒருவரின் அறிவாற்றல், குணாதிசயங்கள், ரகசியமான அச்சங்கள் மற்றும் ஆசைகள் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைக் கொண்டு உங்களின் பெரிய குறையைக் கூற முடியும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இரண்டு விதமான உருவங்கள் ஒளிந்துள்ளன. அவை ஒரு ஆணின் முகம் மற்றும் ஒரு பெண்ணின் முகம். இதில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்பதை கூறி, உங்களின் பெரிய குறை என்னவென்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு பெண்ணின் முகம்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு பெண்ணின் முகம் தெரிந்தால், நீங்கள் சாகச விரும்பிகள். எப்போதும் புதிய அனுபவங்களைப் பெற விரும்புவீர்கள். மேலும் உங்களால் முடியாதது எதுவும் இல்லை என்று இருப்பீர்கள். எப்பேற்பட்ட சூழ்நிலையையும் மிகவும் சிறப்பாக கையாளத் தெரிந்திருப்பீர்கள். அதோடு அந்த சூழ்நிலைகளில் இருந்து ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள முயற்சிப்பீர்கள். உங்களிடம் உள்ள மிகப்பெரிய குறை ரிஸ்க் எடுக்க சற்றும் தயக்கம் கொள்ளாமல் இருப்பது தான். இப்படி சற்றும் யோசிக்காமல் ரிஸ்க் எடுப்பதால், அடிக்கடி வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.
ஒரு ஆணின் முகம்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு ஆணின் முகம் தெரிந்தால், நீங்கள் மிகவும் மரியாதைக்குரிய நபர். மற்றவர்களுக்கு தவறாமல் மரியாதை கொடுப்பீர்கள். தொடர்ந்து எதையாவது கற்றுக் கொண்டிருப்பீர்கள். இருப்பினும் உங்களிடம் உள்ள மிகப்பெரிய குறை என்றால், குறிப்பட்ட சூழ்நிலைகளில் சட்டென்று முகத்தை காட்டிவிடுவதோடு, மிகவும் மோசமாக நடந்து கொள்வீர்கள்
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications