Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதலில் என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. முடிவெடுப்பதில் நீங்க எப்படி-ன்னு சொல்றோம்..
Optical Illusion Test: இணையத்தில் ஒருவரது குணாதியங்களை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. இந்த படங்களை முதலில் பார்த்த உடனே நமது மூளை முதலில் எப்படி எடுத்துக் கொள்கிறதோ, அதைப் பொறுத்து ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன. உளவியல் பகுப்பாய்வில் கூட ஆப்டில் இல்யூஷன் படங்கள் மிகவும் முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஒவ்வொரு முறை பார்க்கும் போது நமது மூளை ஒவ்வொருவிதமாக எடுத்துக் கொள்ளும். இதைக் கொண்டு ஒருவரின் அறிவாற்றல், நேர்மறை மற்றும் எதிர்மறை குணாதிசயங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

அப்படிப்பட்ட ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைக் கொண்டு நீங்கள் மற்றவர்களால் எளிதில் பாதிக்கப்படுவீர்களா அல்லது எந்த முடிவையும் புத்திசாலித்தனமாக யோசித்து எடுப்பீர்களா என்பதை அறியலாம்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் 2 விதமான விஷயங்கள் ஒருவரது கண்களில் தென்படலாம். அவற்றில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்பதை கூறி, அவை கூறும் குணாதிசயங்களை தொடர்ந்து படித்து அறிந்து கொள்ளுங்கள்.
முகங்கள் தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் முகங்கள் தெரிந்தால், நீங்கள் பெரும்பாலும் மற்றவர்களைப் பற்றி அதிகம் சிந்திப்பீர்கள். எதையும் வெளிப்படையாக பேசுவீர்கள். இதனால் உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு உங்களை மிகவும் பிடிக்கும்.
இப்படி கலகலப்பாக பேசுவதாலும், மற்றவர்கள் அன்பு செலுத்துவதாலும், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் பெரும்பாலான முடிவுகள் மற்றவர்களின் பேச்சை கேட்டு எடுப்பதாகவே இருக்கும். எனவே நீங்கள் உங்களைச் சுற்றி நல்லவர்களை வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி நல்லவர்களை வைத்துக் கொண்டால் மட்டுமே வாழ்க்கையில் உங்களால் சிறப்பான முடிவுகளை எடுக்க முடியும்.
மெழுகுவர்த்தி தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு மெழுகுவர்த்தி தெரிந்தால், நீங்கள் இயற்கையாகவே வெளிப்படையாக யாருடனும் பேசமாட்டீர்கள். நீங்கள் எந்த ஒரு முடிவை எடுக்கும் போதும் மற்றவர்களைப் பற்றியோ அல்லது மற்றவர்களின் கருத்துக்களை பற்றியோ கவலைப்படமாட்டீர்கள். தனிமையை அதிகம் விரும்புவீர்கள். அதிக தன்னம்பிக்கையைக் கொண்டிருப்பீர்கள். எப்போதும் சுயமாக சிந்தித்து தங்கள் வாழ்க்கையில் முடிவுகளை எடுப்பதால், உங்களுக்கு நண்பர்கள் குறைவாகவே இருப்பர். ஏதாவது ஒன்றை தேர்வு செய்யும் போது, உங்களின் சொந்த அனுபவங்களையும், விருப்பங்களையும் கொண்டே முடிவெடுப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications