Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தை பாப்பீங்க..! -
இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சோதனைகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
பெங்காலி வெஜ் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஏன் செருப்பை அவசியம் கழட்ட வேண்டும் தெரியுமா? இதுல பல ரகசியம் இருக்கு -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா - எப்படி செய்யணும் தெரியுமா? -
உங்க கழுத்து கருப்பா இருக்குதா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது..
இந்த படத்துல உங்களுக்கு முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்க-ன்னு சொல்றோம்..
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பவை புதிர் நிறைந்த கண்கவர் படங்களாகும். இந்த படங்கள் ஒருவரது குணாதிசயங்கள் மற்றும் அந்நபரைப் பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த மாதிரியான படங்கள் ஒருவரது உணர்ச்சி போக்குகள், அறிவாற்றல் விருப்பங்கள், சிந்தனை போன்றவற்றை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
இப்படியான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் ஏராளமாக உலா வருகின்றன. இவை சற்று விளையாட்டுத்தனமாக இருப்பதால், நிறைய பேர் தங்களின் ஆளுமையை தெரிந்து கொள்ள இந்த மாதிரியான ஆப்டிகல் இல்யூஷன் ஆளுமை சோதனைகளை எடுக்க ஆர்வம் கொள்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இருவேறு உருவங்கள் ஒருவருக்கு தெரியலாம். இவற்றில் எந்த உருவம் தெரிகிறதோ, அது அந்நபர் போட்டி மனப்பான்மை கொண்டவரா அல்லது விட்டுக் கொடுப்பவரா என்பதை வெளிப்படுத்துகிறது. நீங்கள் இந்த சோதனையை எடுக்க தயாராக உள்ளீர்களா? அப்படியானால் உங்களுக்கு இந்த படத்தில் என்ன உருவம் தெரிகிறது என்று கூறுங்கள்.
பெண்கள் அமர்ந்து சீட்டு விளையாடுவது...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு இரண்டு பெண்கள் அமர்ந்து சீட்டு விளையாடுவது போன்று தெரிந்தால், நீங்கள் அதிக நம்பிக்கையைக் கொண்டிருப்பீர்கள். ஆனால் அதை மறைத்து வைத்திருப்பீர்கள். உங்களின் முடிவுகளின் மிகவும் உறுதியாக இருப்பீர்கள். இதுவே உங்கள் இயக்கத்திற்கு எரிபொருளாக இருக்கிறது. தோல்வியை சிறிதும் விரும்பமாட்டீர்கள் மற்றும் போட்டியை அதிகம் விரும்புவீர்கள். போட்டி என்று வந்தால் அதில் வெற்றி பெறாமல் விடாமாட்டீர்கள்.
இயற்கையாகவே நீங்கள் மகிழ்ச்சியான நபராக இருந்தாலும், உங்களின் போட்டி மனப்பான்மையால் அதை மறைக்காதீர்கள். தனிப்பட்ட வெற்றிகளைப் போலவே, ஒத்துழைப்பும், குழுவுடன் ஒன்றிணைந்து வேலை செய்வதும் நல்ல பலனை அளிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மண்டை ஓடு தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு மண்டை ஓடு தெரிந்தால், நீங்கள் நேர்மையை மதிக்கும் நபர். மண்டை ஓடானது இறப்பு மற்றும் உண்மை ஆகிய இரண்டையும் அடையாளப்படுத்துகின்றன. உங்கள் மனதிற்கு பிடித்தவர்களின் விருப்பங்கள் ஆபத்தானதாக இருந்தாலும், அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் அவர்களுடன் சேர்ந்து நீங்களும் செல்வதை இது குறிக்கிறது.
நேர்மையாக இருப்பது முக்கியமானது தான். ஆனால் சில நேரங்களில் மிகவும் பயனுள்ள அணுகுமுறை அனுதாபமாகவும் இருக்கும். உங்களின் நோக்கம் நல்லதாக இருந்தாலும், கண்மூடித்தனமான நேர்மை உங்களுக்கு பிடித்தவர்களை வேண்டுமென்றே காயப்படுத்தலாம். எனவே எந்த ஒரு விஷயத்திற்கும் தீர்வுகளை வழங்கும் போது சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications