Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க உண்மையில் யார்-ன்னு சொல்றோம்...
Optical Illusion: உங்களைப் பற்றி உங்களுக்கு நன்கு தெரிந்தாலும், உண்மையில் உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்கள் உள்ளன. அப்படி ஒருவரது குணாதிசயங்களை பற்றி வெளிப்படுத்தும் ஒரு புதிர் நிறைந்த படங்கள் தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள். அதாவது இந்த படங்கள் இல்லாததையும் பார்க்க வைக்கிறது அல்லது அவற்றை வித்தியாசமான வழிகளில் விளக்குகிறது.
இந்த வகை படங்கள் ஒருவரின் குணாதியங்களை மட்டுமின்றி, அந்நபரின் பலம், பலவீனம், சிந்திக்கும் திறன் போன்ற பலவற்றை தெரியப்படுத்தும். இணையத்தில் ஒருவரது குணாதிசயங்களை வெளிப்படுத்தும் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. இப்படிப்பட்ட படங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்துவதைத் தவிர, ஒருவரைப் பற்றிய வேறு பல விஷயங்களையும் வெளிப்படுத்தும்.

இங்கு ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை படத்தை பார்க்கும் போது ஒவ்வொருவரின் கண்களுக்கும் ஒவ்வொரு விஷயங்கள் தென்படும். இது நீங்கள் உலகத்துடன் எப்படி தொடர்பு கொள்கிறீர்கள் மற்றும் உங்களின் கண்ணோட்டத்தைப் பற்றி தெரியபடுத்துகின்றன. அதுவும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமானது நீங்கள் உண்மையில் யார் என்பதைப் பற்றி வெளிப்படுத்துகின்றன.
ஜன்னலில் எட்டிப் பார்க்கும் பெண்..
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஜன்னலில் எட்டிப் பார்க்கும் பெண் தெரிந்தால், நீங்கள் நம்பிக்கையான மற்றும் மிகவும் அன்பான நபர். திறந்த உள்ளம் கொண்டவர். மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுவீர்கள். உள் ஒன்று வைத்து வெளி ஒன்று பேசமாட்டீர்கள். ஆனால் மற்றவர்களை புண்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாகவும், கவனமாகவும் இருப்பீர்கள். இது உங்களை மிகவும் இரக்கமுள்ளவராக காட்டுகிறது.
உங்களிடம் பழகுபவர்களை சிறிதும் சந்தேகம் கொள்ளாமல் நம்புவீர்கள். இதனால் நீங்கள் நிறைய ஏமாற்றத்தையும், துரோகத்தையும் சந்திப்பீர்கள். உங்கள் நேர்மறையான கண்ணோட்டத்தைப் பேணுவதற்கும் உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் இடையில் நீங்கள் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். வாழ்க்கை வழங்கும் சிறுசிறு விஷயங்களால் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள்.
மண்டை ஓடு
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு மண்டை ஓடு தெரிந்தால், நீங்கள் யதார்த்தமான மனநிலையைக் கொண்ட நபர். வாழ்க்கையை அதன் குறைபாடுகளுடன் ஏற்றுக் கொண்டு வாழ்வீர்கள். சவால்களை அமைதியாக சமாளிக்க முயற்சிப்பீர்கள். என்ன தான் யதார்த்தம் உங்களின் ஒரு பலமாக இருந்தாலும், சில நேரங்களில் அது உங்களை ஒதுக்கி வைக்கலாம் அல்லது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வைக்கலாம். நடக்கவிருக்கும் பிரச்சனைகளை முன்கூட்டியே கணிக்கும் திறனைக் கொண்டிருப்பதால், எதிலும் சிறப்பான முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களின் நம்பிக்கையையும் பாராட்டையும் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications