Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
இந்த படத்துல உங்களுக்கு முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. நீங்க நல்ல நண்பரா, இல்லையான்னு சொல்றோம்..
Optical Illusion Personality Test: ஒவ்வொருவரின் குணாதிசயங்களும் மற்றவர்களிடம் இருந்து வேறுபடும். இதனால் ஒருவரது குணாதியங்களை வெளிப்படுத்தும் சோதனைகள் இருந்தால், அதை மேற்கொள்ள ஒவ்வொருவருமே விரும்புவோம். அப்படி ஒருவரது குணாதிசயங்களை வெளிப்படுத்தும் ஒருவிதமான சுவாரஸ்யமான வழி தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்.
இந்த வகை படங்களில் பல விஷயங்கள் மறைந்திருக்கும். அதே சமயம் கண்களைக் கவரும் வகையிலும், புதிர் நிறைந்தவையாகவும் இருக்கும். இந்த வகை படங்களை முதல்முறை பார்க்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று தெரியும். இப்படி ஒவ்வொருவிதமாக தெரிவதற்கு காரணம், மூளை செயல்படும் விதம் தான்.

அந்த வகையில் இங்கு ஒரு சுவாரஸ்யமான மற்றும் அழகான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒருவரது கண்களுக்கு இரண்டு விதமான விஷயங்கள் தெரியலாம். அவை மனித முகம் மற்றும் குருவிகள். இதில் ஒருவரது கண்களுக்கு எது முதலில் தெரிகிறதோ, அது நல்ல நண்பரா, இல்லையா என்பதை தெரிவிக்கும். இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு என்ன தெரிந்தது என்று கூறி, அதன் அர்த்தத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இரண்டு பறவைகள்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் இரண்டு பறவைகள் தெரிந்தால், நீங்கள் வெளிப்படையாக பேசக்கூடியவர். மற்றவர்களிடம் எளிதில் பழகும் நபர். மனதில் தோன்றுவதை சற்றும் தயங்காமல் பேசுவீர்கள். எப்போதும் நீங்கள் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். இதனால் உங்களுடன் நட்பு கொள்ள அனைவரும் விரும்புவார்கள் மற்றும் உங்களை நல்ல நண்பராகவும் நினைப்பார்கள். மேலும் நீங்கள் வெறும் நல்ல பேச்சாளர் மட்டுமல்ல, மற்றவர்கள் சொல்வதைக் கேட்பவரும் கூட. இது மற்றவர்களுடன் எளிதாக பிணைக்க உதவுகிறது.
முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு முகம் தெரிந்தால், நீங்கள் அதிகம் பேசமாட்டீர்கள் மற்றும் மிகவும் அமைதியானவர். தனிமையை அதிகம் விரும்புவீர்கள். தேவையில்லாமல் யாருடனும் பேசமாட்டீர்கள். அப்படியே பேசினாலும் அளவாக பேசுவீர்கள். சண்டைகள் மற்றும் வாக்குவாதங்களில் ஈடுபடமாட்டீர்கள். நீங்கள் மிகவும் சென்சிடிவ்வான நபர். அளவான நண்பர்களையே வைத்திருப்பீர்கள். குறைவாக பேசுவதாலோ என்னவோ, சில சமயங்களில் உங்களை மற்றவர்கள் ஒதுக்கி வைத்திருக்கலாம் மற்றும் உங்களை நட்பற்றவராக நினைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications