Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
இதுல உங்க கண்ணுக்கு முதலில் என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்களோட சுவாரஸ்ய குணத்தை சொல்றோம்..
Optical Illusion Personality Test: இணையத்தில் ஒருவரது குணாதியங்களை வெளிப்படுத்தும் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. இப்படியான படங்கள் புதிர் நிறைந்தவைகளாகவும், கண்களை கவரும வகையிலும் இருக்கும். முக்கியமாக இந்த படங்களை முதலில் பார்க்கும் போது நமது மூளை முதலில் எதை எடுத்துக் கொள்கிறதோ, அதைப் பொறுத்து ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன.
உளவியல் பகுப்பாய்வில் இந்த ஆப்டில் இல்யூஷன் படங்கள் மிகவும் முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அப்படிப்பட்ட ஒரு புதிர் நிறைந்த ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைக் கொண்டு மற்றவர்கள் உங்களிடம் எதை கவர்ச்சிகரமாகக் காண்கிறார்கள் என்பதை அறியலாம்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் 3 விதமான விஷயங்கள் ஒருவரது கண்களில் தென்படலாம். அவை மக்கள், பறக்கும் தட்டுகள் மற்றும் ஏலியன் முகம். இந்த மூன்றில் உங்கள் கண்களுக்கு முதலில் தெரிகிறது என்பதை சொல்லிவிட்டு தொடர்ந்து படித்து, அவை வெளிப்படுத்தும் குணாதிசயங்களை அறிந்து கொள்ளுங்கள்.
1. பறக்கும் தட்டுகள்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் பறக்கும் தட்டுகள் தெரிந்தால், மற்றவர்கள் உங்களிடம் கவர்ச்சிகரமாக காண்பது உங்களின் கருணை உள்ளமும், பொறுமையும் தான். அதோடு நீங்கள் தாராள மனப்பான்மை கொண்டவர்கள். அன்பான இதயத்தைக் கொண்டவர். எவ்வளவு சவாலான சூழ்நிலைகளிலும் உங்கள் அன்புக்குரியவர்களுடன் துணையாக நிற்பீர்கள். உங்களுடன் இருப்பவர்கள் ஒருவித பாதுகாப்பாகவும், மதிப்புமிக்கவராகவும் உணர்வார்கள். இப்படியான குணங்களால் மற்றவர்கள் உங்களிடம் எளிதில் மனம் திறந்து பேசுவார்கள்.
2. மக்கள்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் மக்கள் தெரிந்தால், நீங்கள் சாகச மற்றும் சுதந்திரமான மனப்பான்மையைக் கொண்டவர். இதுவே மற்றவர்களை உங்களிடம் ஈர்க்கிறது. புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள அதிகம் விரும்புவீர்கள். மேலும் புதுபுது அனுபவங்களைப் பெற அதிக ஆர்வம் காட்டுவீர்கள். எதையும் திட்டமிட்டு செய்யாமல், வாழ்க்கை போகும் போக்கிலேயே சென்று புதிய செயல்பாடுகளில் ஈடுபடும் திறன் மற்றவர்களுக்கு உங்களை பிடித்தவராக்குகிறது.
3. ஏலியன் முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஏலியன் முகம் தெரிந்தால், உங்களின் தனித்துவம் தான் உங்களை கவர்ச்சிகரமானதாக காட்டுகிறது. அசைக்க முடியாத நம்பிக்கையும், தனித்துவமான விருப்பமும் உங்களின் சிறந்த குணங்களுள் ஒன்று. எந்த ஒரு விஷயத்தையும், தனித்துவமான அணுகுமுறையுடன் பின்பற்றும் உங்களின் போக்கு மற்றவர்களை நோக்கி ஈர்க்கிறது. மேலும் அச்சமின்றி செய்யும் உங்களின் துணிச்சலான குணம் உங்களை சுற்றியிருப்பவர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. அதோடு உங்களின் புத்துணர்ச்சியூட்டும் கண்ணோட்டம் மற்றும் உண்மையான ஆளுமையால் ஈர்க்கப்படுகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications