Latest Updates
-
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முகம் கருப்பா இருக்குதா? அப்ப மஞ்சளைக் கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
ஆந்திரா புதினா தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - சாதம், தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
1/4 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் வடை ட்ரை பண்ணுங்க.. -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா? -
செஃப் தீனா ஸ்டைல் பீன்ஸ் பருப்பு பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நாக பஞ்சமி அன்று சூரியன்-கேது இணைவதால் நஷ்டத்தையும், தோல்விகளையும் சந்திக்கப்போகும் 4 ராசிகள்
இந்த படத்துல உங்களுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. மத்தவங்க உங்கள பத்தி என்ன நினைக்குறாங்கன்னு சொல்றோம்!
Optical Illusion Personality Test: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரது கண்களுக்கும், மூளைக்கும் வேலையைக் கொடுக்கும்படி புதிர்களைக் கொண்டிருப்பதோடு, கண்களைக் கவரும்படி அழகான படங்களாக இருக்கும். இந்த வகையான படங்கள் விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த வகை படங்களைக் கொண்டு ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூற முடியும்.
ஒருவரது கண்களுக்கு முதலில் தெரியும் விஷயங்களானது அந்நபரின் மூளையின் செயல்பாட்டைப் பொறுத்தது. ஒருவரது மூளை எப்படி செயல்படுகிறதோ, அதைப் பொறுத்து தான் அந்நபரின் குணாதியங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த மாதிரி இணையத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உலா வருகின்றன. அதில் ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் ஆண், பெண் என இரண்டு வகையான உருவங்கள் உள்ளன.
அதில் ஒருவரது கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைப் பொறுத்து மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியலாம். நீங்கள் இந்த சோதனையை எடுக்க தயாராக உள்ளீர்களா? இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்பதை அறிந்து, மற்றவர்கள் உங்களை எப்படி நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு ஆணின் முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு ஆணின் முகம் தெரிந்தால், நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருப்பதில் வல்லவர். எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளானாலும், அதை மற்றவர்களால் அறிய முடியாது. நீங்கள் ஒரு குழுவில் இருந்தால், அங்கு நீங்கள் மிகவும் ஆற்றல் மிக்கவராகவும், தலைமைப்பண்புகளைக் கொண்டும் தனித்து இருப்பீர்கள்.
உங்களின் முடிவுகளில் நீங்கள் உறுதியாகவும், பகுப்பாய்வு மனப்பான்மையைக் கொண்டவராகவும் அறியப்படுவீர்கள். நீங்கள் எப்போதும் யோசிக்காமல் மற்றவர்களை கண்மூடித்தனமாக பின்தொடரமாட்டீர்கள். எதையும் நேரடியாக பேசும் உங்களின் குணம் மற்றவர்களை ஈர்க்கும். உங்களுடன் இருக்க மற்றவர்கள் விரும்புவார்கள் மற்றும் எங்கும் உங்களின் வருகையை அதிகம் எதிர்பார்ப்பார்கள்.
ஒரு பெண்ணின் முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு ஒரு பெண்ணின் முகம் தெரிந்தால், நீங்கள் தாராள மனப்பான்மை உடையவர் என்றும், நேர்மறையான கண்ணோட்டத்தைக் கொண்டவராகவும் போற்றப்படுவீர்கள். ஒரு குழுவில் உங்களின் செயல்திறன் தனித்து நிற்பதோடு, மற்றவர்களை அதிகம் ஊக்குவிக்கக்கூடியவராக காட்டுகிறது. ஒரு இலக்கை நிர்ணயித்து அதை அடைய முயற்சிக்கும் போது, உங்களின் அர்ப்பணிப்பு அதை எளிதில் அடைய உதவுகிறது.
மேலும் நீங்கள் தனிப்பட்ட திறன்களுக்கு பெயர் பெற்றவர்கள். மற்றவர்களை உங்கள் வார்த்தைகளால் புண்படுத்தாமல் இருக்க எப்போதும் கவனமாக பேசுவீர்கள். மிகவும் சென்சிடிவ்வான நபர் மற்றும் நண்பர்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுப்பீர்கள். உங்கள் உணர்ச்சி நிலையை சீராக பராமரிப்பீர்கள் மற்றும் உறவில் எல்லைகளை அமைப்பதில் திறமையானவர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications