Latest Updates
-
கேரட்டும், ஜவ்வரிசியும் இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. பிள்ளைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
Nag Panchami 2026: நாக பஞ்சமியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
காரசாரமான சிக்கன் ஈரல் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 7 அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப அது குடல்வால் புற்றுநோயின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
ஆகஸ்ட் 19-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..! -
கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனச்சுமை அதிகரிக்கப்போகுதாம் -
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
வார ராசிபலன் (16 August 2026 - 22 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா
இந்த படத்துல உங்களுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க உறுதியானவரா, நிலையற்றவரான்னு சொல்றோம்..
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரது கண்களுக்கும், மூளைக்கும் வேலையைக் கொடுக்கும்படி புதிர்களைக் கொண்ட அதே சமயம் வசீகரமான படங்களாக இருக்கும். இவ்வகையான படங்கள் விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இப்படியான படங்களைக் கொண்டு ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
பொதுவாக நமது கண்களுக்கு தெரியும் விஷயங்களானது மூளையின் செயல்பாட்டைப் பொறுத்தது. நமது மூளை எவ்வாறு செயல்படுகிறதோ, அதைப் பொறுத்து தான் நம் குணாதியங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இணையத்தில் இந்த மாதிரியான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அதிகம் உலா வருகின்றன. அதில் ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த படத்தில் மூன்று வகையான உருவங்கள் ஒருவரது கண்களுக்கு தெரியலாம். அதில் ஒருவரது கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைப் பொறுத்து அந்நபர் உறுதியானவரா, நிலையற்றவரா என்பதை அறியலாம். நீங்கள் எப்படி என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் சோதனையை மேற்கொள்ளுங்கள்.
இரண்டு முகங்கள் தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு இரண்டு முகங்கள் தெரிந்தால், நீங்கள் உங்களின் உண்மையான சுயருபத்தை காட்ட பயப்படமாட்டீர்கள். உங்களின் முடிவுகளில் உறுதியாக இருப்பீர்கள். மேலும் எந்த ஒரு முடிவுகளையும் விரைவில் எடுக்கும் திறனைக் கொண்டிருப்பீர்கள். நல்ல வலுவான உள்ளுணர்வைக் கொண்டிருப்பீர்கள். உங்கள் உள்ளுணர்வை கேட்டு நடந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
குவளை தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு குவளை தெரிந்தால், உங்களுக்கு நல்லது கெட்டதை வேறுபடுத்தி அறியும் ஆற்றல் இருக்கும். மற்றவர்கள் அடிக்கடி தவறவிடும் விஷயங்களை நீங்கள் கவனித்து, பிரச்சனைக்கான முடிவை எளிதில் காணும் திறனைக் கொண்டிருப்பீர்கள். இருப்பினும், உங்களின் முடிவுகளில் நிலையாக இல்லாமல், அடிக்கடி முடிவை மாற்றுவீர்கள். நல்ல பொறுமைசாலிகள். மிகவும் குழப்பம் நிறைந்த பிரச்சனைகளைக் கூட எளிதில் தீர்வு காணும் திறமையைக் கொண்டிருப்பீர்கள்.
ஒற்றை பெண்ணின் முகம் தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு ஒற்றை பெண்ணின் முகம் தெரிந்தால், நீங்கள் வஞ்சகர்களை எளிதில் அடையாளம் காணும் திறனைக் கொண்டிருப்பீர்கள். தந்திரமான சிக்கல்களையும் எளிதில் அவிழ்பீர்கள். பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் வல்லவர்கள் என்பதால் மற்றவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உங்களிடம் வருவார்கள். உங்களின் வழிகாட்டலை பலரும் பின்பற்றுவார்கள். ஒரு மாயையில் இருந்து யதார்த்தத்தை அறிந்து கொள்ளும் திறனைக் கொண்டிருப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications