Latest Updates
-
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம்
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. நீங்க எம்மாதிரி ஆளு-ன்னு சொல்றோம்..
Optical Illusion Personality Test: ஒவ்வொருவரின் குணாதிசயங்களும் மற்றவர்களிடம் இருந்து வேறுபடும். இப்படிப்பட்ட ஒருவரது குணாதியங்களை வெளிப்படுத்தும் சோதனைகள் இருந்தால், அதை நிச்சயம் மேற்கொள்ள ஒவ்வொருவருமே விரும்புவோம். அப்படி ஒருவரது குணாதிசயங்களை வெளிப்படுத்தும் ஒருவிதமான சுவாரஸ்யமான வழி தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்.
இந்த வகை படங்களில் பல விஷயங்கள் மறைந்திருக்கும். அதே சமயம் கண்களைக் கவரும் வகையிலும், புதிர் நிறைந்தவையாக இருக்கும். இந்த வகை படங்களை முதல்முறை பார்க்கும் போது ஒன்றும், மறுமுறை பார்க்கும் போது மற்றொன்றும் தெரியும். இப்படி ஒவ்வொருவிதமாக தெரிவதற்கு காரணம், மூளை செயல்படும் விதம் தான்.

அந்த வகையில் இங்கு ஒரு சுவாரஸ்யமான மற்றும் அழகான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒருவரது கண்களுக்கு இரண்டு விதமான விஷயங்கள் தெரியலாம். அவை மரம் மற்றும் ஒரு பெண்ணின் முகம். இதில் ஒருவரது கண்களுக்கு எது முதலில் தெரிகிறதோ, அது அந்நபர் நல்ல பொறுமை மற்றும் அமைதியானவரா அல்லது பொறுமையற்றவரா என்பதை தெரிவிக்கும். இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு என்ன தெரிந்தது என்று கூறி, அதன் அர்த்தத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மரம் தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் மரம் தெரிந்தால், நீங்கள் ஆக்கப்பூர்வமானவர்கள் மற்றும் எப்போதும் புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புவீர்கள். மிகுந்த புத்திசாலி மற்றும் வலுவான உள்ளுணர்வைக் கொண்டிருப்பீர்கள். ஆனால் பொறுமையை மட்டும கொஞ்சம் மேற்கொண்டால், உங்கள் வாழ்க்கை இன்னும் அழகாக இருக்கும். எப்போதும் பெரிய இலக்குகளில் கவனத்தை செலுத்துவதால், சிறு விஷயங்களால் கிடைக்கும் மகிழ்ச்சியை பெற தவறுவீர்கள். எதையும் அவசரமாக செய்வதைத் தவிர்த்து, வாழ்க்கையை சீராக வாழ மற்றும் எளிய விஷயங்களை வெற்றிகரமாக செய்து முடித்து பாராட்டைப் பெற முயலுங்கள்.
ஒரு பெண்ணின் முகம் தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு பெண்ணின் முகம் தெரிந்தால், நீங்கள் அன்பை அதிகம் தேடுவீர்கள். அதோடு விரைவில் காதலில் விழுந்துவிடுவீர்கள். எந்த ஒரு உறவையும் தீவிரமாக எடுத்துக் கொள்வீர்கள். இன்னும் உங்கள் வாழ்க்கைத் துணையை கண்டுபிடிக்காவிட்டால், அவரை சந்திக்கும் வரை முயற்சியை கைவிடமாட்டீர்கள். முக்கியமாக நீங்கள் உங்களுக்கு பிடித்தவரை தேர்ந்தெடுக்கும் போது, மற்றவர்கள் கவனிக்காத விவரங்களை கவனித்து, அதன் பின்னரே முடிவெடுப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications